3.1.12

PGBEA - PGBOU circular 1/2012 dt 02.01.2012


சுற்றறிக்கை எண் : 1/2012 நாள்: 02.01.2012


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

இதோ 2011 முடிவடைகிறது.

பென்ஷன் என்னும் நமது எதிர்காலத்திற்கான வெளிச்சம் நம்மருகே நெருங்கியிருக்கிறது. Amalgamationகள் அறிவிக்கப்பட்டு மாநில அளவில் ஒரே கிராம வங்கியாக மாறும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

நமது வங்கியில் CBS என்னும் புதிய தொழில்நுட்பத்திற்குள் காலடி எடுத்துவைப்பதாய் ஆரம்பித்த நாட்கள், நமது மாநாடுகள், ஆட்கள் பற்றாக்குறையால் கடும் பணி நெருக்கடிகள்,  புதிய பணிநியமனங்கள், மாறுதல்கள் என நாட்கள் கடந்து இருக்கின்றன. நாம் மிகுந்த பொறுமையோடும், நிதானமாகவும் அவைகளை எதிர்கொண்டு இருக்கிறோம்.

வரும் ஆண்டு இதுபோல் இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை.  வங்கித்துறையில் புதிய சூழல்களும், புதிய நெருக்கடிகளும் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. நமது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள நாம் போராடவேண்டிய நாட்களோடு வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை எதிர்கொள்ளத் தயாரோவோம்.

AMALGAMATION

மத்திய அரசு கிராம வங்கிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பது, கிராம வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது என்பதில் உறுதியான முடிவை எடுத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியே, சமீபத்தில் அறிவித்திருக்கும் amalgamation.  அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

இது நடக்காது என்றும், நடக்கக்கூடாது என்றும் சிலர் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர். இந்தியன் வங்கி பல்லவன் கிராம வங்கியை இழக்க சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் அள்ளிவிடப்படுகின்றன. ஸ்பான்ஸர் வங்கிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை. அரசு தன் முடிவில் உறுதியாக இருக்கிறது. இப்போதைய பிரச்சினை, ஒவ்வொரு கிராம வங்கியிலும் இருக்கிற வெவ்வேறான cbs தொழில்நுட்பங்களும் , முறைகளுமே. இதற்கான தீர்வுகள் காணப்பட்டு விரைவில் amalgamation நடந்தே தீரும்.

இந்த amalgamation நடந்தால்தான், பென்ஷனும் நமக்குக் கிடைக்கும் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நஷ்டத்தில் இயங்குகிற சில கிராம வங்கிகள் இந்த amalgamation மூலம் பென்ஷனுக்கான நிதியை வைத்திருக்கும் தகுதியைக் கொண்டதாக மாறும். பென்ஷனை கிராம வங்கி ஊழியர்களுக்குக் கொடுப்பதற்கு ஒரு ஒட்டுமொத்தமான சூழல் உருவாகும். எனவே இந்த amalgamationஐ எதிர்ப்பவர்கள் பென்ஷனுக்கும் எதிராய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.

நமது கோரிக்கைகள்:

இந்த ஆண்டு 2011 முழுவதுமே நாம் முன்வைத்த பல கோரிக்கைகளை (முக்கியமாக பொருளாதாரக் கோரிக்கைகள்)  நிர்வாகம் நமக்கு நிறைவேற்றிடவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாய் முன்நிற்கிறது. டிசம்பர் 18, 21 தேதிகளில் கூடிய நமது இரு சங்கத்தின் சப்கமிட்டிகளும் இதனை விவாதித்து, கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆண்டாக 2012ஐ முன்வைத்து நகருவது என தீர்மானித்திருக்கின்றன.

1. ஊழியர்கள், அலுவலர்கள் தரப்பில் எழுதப்படும் எந்த staff matter களுக்கும் நிர்வாகத்தரப்பிலிருந்து உரிய நேரத்தில் உரிய பதில் தரப்படுவதில்லை. இது ஒரு முக்கிய கோரிக்கையாக மாறும் அளவுக்கு நிர்வாக இயந்திரம் துருப்பிடித்து இருக்கிறது. லீவு கேட்டு எழுதினால் எந்தப் பதிலும் இருக்காது.  சங்கங்கள் பேச வேண்டும்,  அல்லது கடைசி நேரத்தில் சொல்லப்படும். எல்.எப்.சி, இன்கிரிமெண்ட் என அனைத்திற்கும் இதே கதிதான். லீவு பிடித்தம் செய்யப்படுகிறது.  எந்தக் காரணத்திற்கு பிடிக்கப்படுகிறது என்று எப்போதுமே நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியருக்கோ அலுவலருக்கோ முன்கூட்டித் தெரிவிப்பதில்லை. இவையெல்லாம் சில அடிப்படையான ஒழுக்கங்கள், நாகரீகங்கள், விதிகள். ஆனால் இவைகளை நமது நிர்வாகங்கள் பெரும்பாலும் கடைப்பிடிப்பதேயில்லை.

2. அனைத்து நிலைகளிலும் உடனடியாக பதவி உயர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

3.தற்காலிகப் பணியாளர்கள் கடைநிலை ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

4. புதிய பணி நியமனத்தில் மிகக் குறைவாகவே ஆபிஸர்கள் எடுக்கப்பட்டார்கள். அவர்களிலும் பலர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். எழுத்தர்களில் ஓரளவுக்கு புதிய பணிநியமனம் செய்யப்பட்டாலும், தொடர்ந்து அவர்களும் வேறு வேலைகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் புதிய கிளைகள் திறக்க வேண்டிய அவசியமும் இருப்பதாக நிர்வாகம் சொல்கிறது. எனவே உடனடியாக அனைத்து நிலைகளிலும் உரிய பணிநியமனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் 2011 ஆரம்பத்தில் இருந்த கடுமையான பணிநெருக்கடி மீண்டும் உருவாகும் அபாயம் இருக்கிறது. மேலும், புதிய பணிநியமனங்களின் மூலமே சென்ற வருடம் பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் விருப்பப்பட்ட இடங்களில் பணிபுரியும் வாய்ப்புகளும் உருவாகும்.

5. அனைவருக்கும் Newspaper allowance வழங்கவேண்டும் என நாம் கேட்டு, வலியுறுத்தி வந்துகொண்டே இருக்கிறோம். ஆண்டுக்கணக்கில் பேசப்படும் கோரிக்கை இது.

6. அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல பெட்ரோல் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.

7. அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல house maintanence allowance  வழங்கப்பட வேண்டும்.

8. புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டத் தோழர்களில் ex-service men  இருக்கிறார்கள். ஏற்கனவே சர்வீஸில் இருக்கும்போது அவர்கள் கடைசியாகப் பெற்றுவந்த ஊதியத்திற்கு, இப்போதைய ஊதியம் குறையாமல் நிர்ணயிக்கப்பட வேண்டும். இது அரசு விதி. ஆனால் 2009 வருடத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்குக் கூட இந்த நிர்வாகம் இந்த pay protection செய்யாமல் இருக்கிறது. இதுகுறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அங்கு கேட்டிருக்கிறோம், இங்கு எழுதியிருக்கிறோம் என பதில்கள் மட்டுமே காலத்தைத் தின்றுகொண்டிருக்கின்றன. ஒரு அரசு ஆணையை நிறைவேற்றி, ஒரு பத்துப் பனிரெண்டு பேருக்கு சலுகையை வழங்கக்கூட இந்த நிர்வாகத்திற்கு முடியாமல் இருக்கிறது.

9. அடிக்கடி Net connectivity இல்லாமல் போவதால், பணிகள் தாமதமாகின்றன. பணிநேரம் நீட்டிக்கப்படுகிறது. அது போன்ற சமயங்களில் அனைவருக்கும் over time allowance  வழங்கப்பட வேண்டும்.

10. லீவு எடுப்பது என்பது, இப்போது நிர்வாகத்தின் கருணையும், பரிவும் சம்பந்தப்பட்டதாக சமீப காலமாக மாறியிருக்கிறது. privilege leaveஐப் பொறுத்த வரையில் 30 நாட்கள் கேட்டால் 15 நாட்கள் என்றும், 20 நாட்கள் கேட்டால் 10 நாட்கள் என்றும், 10 நாட்கள் என்றால் 5 நாட்கள் எனவும், 3 நாட்கள் என்றால் 2 நாட்கள் என்றும் நிர்வாகம் முடிவு செய்கிறது. இதனைப் பெறுவதற்கும் நாம் மாறி மாறிப் பேச வேண்டியிருக்கிறது. Medical leave  என்றால், எதோ தலைவலியும், காய்ச்சலும், நோய்களும் சொல்லிக்கொண்டு வருவதைப்போல, முன்னரே கேட்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. casual leave என்றால் டெபுடேஷனுக்கு ஆள் இல்லை என்றும், இப்போது என்ன அவசரம் என்றும் தடைகள் போடப்படுகின்றன. நாம் நமக்குரிய லீவைத்தான் கேட்கிறோம்.

11. TA சாங்ஷன் செய்வதில் கடுமையான கெடுபிடிகளும் பாரபட்சங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. லீவுநாட்களுக்கு Halting allowance  கிடையாது என்று நிர்வாகம் அதுவாக ஒரு விதியை உருவாக்கி வைத்திருக்கிறது. லீவு நாட்களில் அங்கு தங்குகிறாரா, சென்றாரா என்று கேட்கப்படுகின்றன. கையில் சாவியை வைத்திருப்பதற்குத்தான் halting allowance. இந்த நோக்கத்தை திசை திருப்பிவிட்டிருக்கிறது நிர்வாகம்.

12. 2009 டிசம்பரில் சங்கத்தின் அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் சஸ்பென்ஷன் செய்யப்பட்ட அலுவலர்த் தோழர்களுக்கு இன்னும் லீவு regularise செய்யப்படவில்லை.  சஸ்பென்ஷனில் இருந்த நாட்களுக்கான சமபளம் கொடுக்கப்படவில்லை. நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

13. United India Insurance கம்பெனியோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள medi claimல் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அவைகளில் பல குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. சில claimகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் இன்சூரன்சு கம்பெனி தருவதில்லை. அதனை நிர்வாகம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. சில claimகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன. அவற்றை claim  செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென சொல்லியிருக்கிறோம். அது போல dependentகளின் எண்ணிக்கை நான்கிற்கு மேல் இருக்கக்கூடாது என்பதும் சரியில்லை.

14. Joining time leaveக்கு குடும்பத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும் என நிர்வாகம் சமீபகாலமாக வலியுறுத்துகிறது. இது சரியான நடைமுறையல்ல. ஒருவர் அவரது விருப்பமில்லாமல் மாறுதல் செய்யப்படும்போது, அவர் புதியகிளையில் join  செய்வதற்கு joining time leave  வழங்கப்படுவதுதான் நடைமுறை. நிர்வாகம் அதன் வசதிக்கு இதனை மாற்றுவதும், லீவை மறுப்பதும் சரியில்லை.

15. நிர்வாகம் அதன் இஷ்டத்திற்கு, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப டிரான்ஸ்பர் செய்வது நீடிக்கவேச் செய்கிறது. வணிக வங்கிகளில் உள்ளது போல ஒரு முறையான டிரான்ஸ்பர் பாலிசி அவசியம் வேண்டும்.

16. சென்ற வருடம் எழுத்தர்களிலிருந்து அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் தொலைதூரக் கிளைகளில் பணி புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு சொந்த மாவட்டங்களில் விருப்ப மாறுதல்கள் தரப்பட வேண்டும் . இதனால் வங்கிக்கு பல வழிகளிலும் சாதகமான நிலைமை உருவாகும்.

17. கடன்வசூல், சாட்டில்லைட் கிளைகள் போன்ற பணிகளுக்குச் செல்லும் அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் halting allowance  வழங்கப்பட வேண்டும்.

18. புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு intensive training  ஏற்பாடு செய்ய வேண்டும்.

19. Retired Officerகள் பலருக்கு இன்னும், ஊதிய உயர்வினால் வரக்கூடிய அரியர்ஸ் வழங்கப்படவில்லை. அவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

20. 2009ல் வங்கியில் பணிக்குச் சேர்ந்த எழுத்தர் தோழர்களுக்கு probationary periodல் கம்ப்யூட்டர் அலவன்சு வழங்கப்படவில்லை. நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். 2011ல் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு இப்போது கம்ப்யூட்டர் அலவன்சு வழங்கப்பட்டு வருகிறது. 2009ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அதற்கான arrears கொடுக்கப்பட வேண்டும்.

உள்நோக்கம் கொண்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள்:

பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர்.செல்வகுமார் திலகராஜ் அவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவர் பணிபுரிந்த மூலக்கரைப்பட்டி கிளையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நிர்வாகம் காரணம் கற்பித்திருக்கிறது. இதுகுறித்து நாம் வங்கிச் சேர்மன் அவர்களிடம் பேசினோம். நிர்வாகம் சொல்கிற தவறுகளில் சஸ்பெண்ட் செய்யுமளவுக்கு முகாந்திரமோ அல்லது அழுத்தமோ இல்லாதபோது, இதுபோன்ற சஸ்பென்ஷன்கள் அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவே என்று நாம் கருதுவதாக நமது ஆட்சேபத்தைத் தெரிவித்தோம்.

அடுத்ததாக, PGBEAவின் பொருளாளரான தோழர்.சுந்தரவடிவேலு அவர்கள் திடுமென டி.யூ.மங்கை கிளையிலிருந்து திருத்தங்கல் கிளைக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்தும் நாம் வங்கிச் சேர்மன் அவர்களிடம் பேசினோம். மாறுதலுக்கான காரணங்கள் நேரிடையாக நம்மிடம் சொல்லப்படவில்லை. நாம் இந்த மாறுதல் குறித்தும் நமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறோம்.

தோழர்களே, நிர்வாகத்தின் இவ்விரு நடவடிக்கைகளும் உள்நோக்கம் கொண்டவையாக நமது இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும் கருதுகின்றன. இதற்கு வேறு பின்னணியும் இருப்பதாக நாம் சந்தேகிக்கிறோம். இவ்விரு நடவடிக்கைகளையும் நிர்வாகம் விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நிம்மதியற்ற பணிஓய்வு:

சமீப காலமாக, பணி ஓய்வு பெறும் அலுவலர்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றன. அவர் பணிபுரிந்த காலத்தில், அவர் கொடுத்த லோன்களின் மீது குற்றச்சாட்டுகளை கடைசி நேரங்களில் எழுப்பி, அவர்களது ஓய்வூதியச் சலுகைகளை நிறுத்தி வைப்பது வாடிக்கையாகியிருக்கிறது. PGBOU  இதுகுறித்து ஏற்கனவே நிர்வாகத்துடன் பேசியுள்ளது. அதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருப்பின் முன்கூட்டியே தெரிவித்து அதை சரிசெய்யவோ அல்லது எதிர்கொள்ளவோ அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம். பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்த பட்சம் மூன்று மாத காலத்திற்கு முன்பாகவே அது போன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடுவதாக நிர்வாகம் நம்மிடம் உறுதியளித்திருந்தது. ஆனால் 31.12.2011 அன்று பணி ஓய்வு பெறும் அலுவலர்த் தோழர் முருகேசன் அவர்களுக்கு, அவர் இளையரசனேந்தல் கிளையில் கொடுத்த லோன்கள் சம்பந்தமாக 20.12.2011 அன்று ஒரு விளக்கக் கடிதம் கேட்டது நிர்வாகம். 27.12.2011க்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால்,  28.12.2011 அன்று அவருக்கு சார்ஜ் சீட்டும் அளிக்கப்பட்டது. இதன்மூலம் அவரது ஓய்வுகாலச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும் நாம் வங்கிச் சேர்மன் அவர்களை சந்தித்து நமது கடுமையான ஆட்சேபங்களைத் தெரிவித்திருக்கிறோம். மிகவிரைவில் இதனை சரிசெய்வதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

தோழர்களே!

கடந்த ஆண்டில் வங்கியின் வணிகத்தில், முக்கியமாக டெபாசிட்டில் போதிய வளர்ச்சியில்லையென நிர்வாகம் கவலைகளை நம்மிடம் தெரிவிக்கிறது. நமது ஊழியர்களின், அலுவலர்களின் பணிகள் திருப்திகரமாக இல்லையெனவும் விமர்சனம் வைக்கிறது.   உலகம் முழுவதும் நிலவுகிற பொருளாதார மந்தம், இந்தியாவில் ஏற்பட்டு இருக்கிற நெருக்கடிகள், கடுமையான போட்டி இவைகள் முக்கியமான காரணங்கள் என்ற போதிலும், நாம் முன்னிலும் கடுமையாக முயற்சிக்க வேண்டியது அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதே வேளையில், இந்த நிர்வாகம் ஊழியர்களையும், அலுவலர்களையும் உற்சாகப்படுத்துகிற மாதிரியான என்ன காரியங்களைச் செய்திருக்கிறது என்று பார்த்தால் ஒன்றுமில்லை. நமது அன்றாடப்பணியில் ஆர்வமும், ஈடுபாடும் பெருகுவதற்கு என்ன கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் தேடத்தான் வேண்டி இருக்கின்றன.

"எதுவும் ஒருவழிப் பாதையல்ல". ஆம், தோழர்களே! இதைத்தான் உரத்த குரலில் சொல்லியபடி நாம் 2012க்குள் நுழைய வேண்டி இருக்கிறது.

நமது உரிமைகளையும், சலுகைகளையும் மீட்டெடுக்கும் காலமாக 2012 இருக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


தோழமையுடன்



   
(M.சோலைமாணிக்கம்)                                     (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                   பொதுச்செயலாளர் - PGBOU

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!