5.4.12

PGBEA - PGBOU circular 4/2012 dt 4.4.2012




சுற்றறிக்கை எண் : 4/2012 நாள்: 04.04.2012


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

ஊழியர்களின் நலனில் அக்கறையற்றும், மிகுந்த காலதாமதமாக செயல்பட்டும், பாரபட்சங்களோடு ஒழுங்கு நடவடிக்கைகளை கடைப்பிடித்தும் வருகிற நிர்வாகத்தினை விமர்சனம் செய்து வந்த நமது சென்ற சுற்றறிக்கையை, சங்க வித்தியாசமின்றி பலரும் பாராட்டினார்கள். தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் 2.4.2012 அன்று பொதுமேலாளர் (A) அவர்களை நமது சங்கங்களின் தலைமையிலிருந்து சந்தித்துப் பேசினோம். அப்போது, நாம் முன்வைத்த சில கோரிக்கைகளை, நிர்வாகம் நிறைவேற்றியிருக்கிறது என்பதைத் தெரிவித்தார்.

1. Messenger to clerk promiotionல் கல்வித்தகுதியாக 10th pass இருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்லியது. மாற்று சங்கமோ, நிர்வாகத்தின் நிலைபாட்டையே ஊழியர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தது. நாம் இதனை கடுமையாக ஆட்சேபித்தோம். புதிய பிரமோஷன் பாலிசிக்கு முன்பே, மெஸஞ்சரான தோழர்களுக்குத்தான் இந்த புதிய கல்வித்தகுதி. அதற்கு முன்பே மெஸஞ்சர்களாய் ஆனவர்களுக்கு பழைய கல்வித்தகுதிதான் என தெரிவித்தோம். நிர்வாகம் சம்மதிக்கவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு சேர்மனை சந்தித்து, “இது சரியில்லாத நடைமுறை' என விளக்கினோம். சென்ற வருடம் இதே புதிய பாலிசி படி பிரமோஷன் நடந்தாலும், கல்வித்தகுதியாக மெஸஞ்சர்களுக்கு 10th pass  இருக்கவேண்டும் என சொல்லப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். நிர்வாகத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம். தொடர்ந்து நமது சமீபத்திய சுற்றறிக்கைகளில் எழுதி, தோழர்களுக்கு உண்மையை எடுத்துகூறினோம். அதன் விளைவாய் இப்போது, கல்வித்தகுதி 10th pass  என்பது விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இது நமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி. இங்கே நம்மைத் தவிர வேறு யாரும் குரல் எழுப்பவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

Messenger to clerk promiotionல் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்றோம். சென்ற வருட backlogஐ புதிய பணிநியமனங்கள் மூலமே  எடுக்க முடியும் என நிர்வாகம் தெரிவித்தது. நாம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

2. பிரமோஷன்கள் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டாலும்,  Messenger to clerk promiotionக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. புதிய பணி நியமனப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கிளர்க்குகள் ஆபிஸர்களாகி, மெஸஞ்சர்கள் கிளர்க்குகள் ஆகாமல் இருந்தால் இந்த வங்கியில் கடுமையாக பணிகள் பாதிக்கப்படும், லீவு எடுக்க முடியாது, டெபுடேஷன்கள் ஏற்பாடு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டி இருந்தோம். நிர்வாகம் இதனை ஏற்றுக்கொண்டு, messenger to clerks மற்றும் clerk to promotionகளை மட்டும் ஒன்றுபோல் நடத்தி முடிக்கும் எனச் சொல்லி இருக்கிறது.

3. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாய் நாம் Ex-servicemen  pay fitment குறித்து கோரிக்கை வைத்து பேசிக்கொண்டு இருந்தோம். இவ்விஷயத்தில் நிலவும் காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி நமது அதிருப்தியை தெரிவித்தோம். இப்போது இந்த கோரிக்கையும் சாதகமாகி இருக்கிறது. சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு, pay protect  செய்து கொடுப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டன. முதற்கட்டமாக, Ex-servicemen  தோழர்களிடமிருந்து, சில particulars  நிர்வாகம் கேட்டு இருக்கிறது.

4. பணி ஓய்வு பெறும் சமயத்தில், ஊழியர்களோ அலுவலர்களோ, அந்த வருடத்தில் எத்தனை மாதம் பணிபுரிகிறார்களோ, அத்தனை நாட்கள்தாம் கேஷுவல் லீவு எடுக்க வேண்டும், அதற்குமேல் எடுத்தால் அதற்கான ஊதியம், அவர்களது ஓய்வூதிய சலுகைகளில் இருந்து கழிக்கப்படும் என்று ஒரு அநீதியை நிர்வாகம் கடைப்பிடித்தது. ஆனால் பணி ஓய்வு பெறுகிற ஒருவர் ஜனவரி மாதத்திலிலேயே, 12 நாட்கள் கேஷுவல் லீவு எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் நியதி. இந்த நியாயத்தை வலியுறுத்தியும், நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்தும் குரல் எழுப்பியிருந்தோம். இப்போது நிர்வாகம் இதனையும் ஒப்புக்கொண்டு, சரி செய்வதாக சொல்லியிருக்கிறது.

இதுதவிர மற்ற அலவன்சுகள் குறித்துப் பேசியிருக்கிறோம். ஒரு மாதம் ஊதியம் festival அட்வான்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம் என்னும் நிர்வாகத்தின் சர்க்குலருக்கு முன்பே புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட தோழர்கள் ஏற்கனவே அமலில் இருந்த குறைந்த தொகைக்கு festival advance எடுத்துக்கொண்டு விட்டதால், அவர்கள் மீண்டுமொருமுறை இந்த வருடத்தில் கூடிய தொகையுடன் Festival Afvance பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம். நிர்வாகம் சாதகமான பதில் சொல்லியிருக்கிறது.

தோழர்களே! நாம் கடும் குரல் எழுப்பிய பிறகுதான் இந்த சில கோரிக்கைகளும் நடந்திருக்கின்றன. இன்னும் பல முக்கிய கோரிக்கைகள் நிறவேற்றப்படவில்லை. ஓய்வு பெறும் தோழர்கள் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காலத்தை எதிர்நோக்கும் நிலைமைதான் நீடிக்கிறது. ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து சென்ற சர்க்குலரில் குறிப்பிட்ட விஷயங்களை  அழுத்தமாகவே சுட்டிக்காட்டியுள்ளோம். நிர்வாகத்திடமிருந்து திருப்தியான பதில் இல்லை. அவைகளின் மீதான நமது இயக்கம் தொடரும்.

நாம் நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்குகளால் நிர்வாகத்திற்கு சிரமங்கள் ஏற்படுத்துவதாகவும், அவைகளை வாபஸ் வாங்கலாமே என பொதுமேலாளர் கேட்டுக்கொண்டார். நீங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் நாங்கள் வாபஸ் பெறுகிறோம் என சொல்லிவிட்டோம். உதாரணமாக, ALC முன்பு கம்யூட்டர் இன்கிரிமெண்ட்டுக்காக நாம் தொடர்ந்த வழக்கு லேபர் டிரியூப்னலுக்கு அனுப்பப்பட்டு, அங்கு நடந்த விசாரணையில் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரு இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வந்தது. நிர்வாகம் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இதனை நாம் ஏற்கனவே தோழர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். அதற்காக நிர்வாகம் கோர்ட்டில் செலுத்தியிருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 15 லட்சம் ருபாய்! இதுதான் நிர்வாகத்தை எரிச்சலடைய வைக்கிறது. இந்தத் தொகைக்கு நீங்கள் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுத்திருக்கலாம் என்றோம்.

PGBEA, மற்றும் PGBOU சங்கங்களே கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, ஒவ்வொரு பிரச்சினையில் தலையிட்டு ஊழியர்களின் மரியாதை, பாதுகாப்பு, நலன் பேணி வருகின்றன. நாம் ஆர்ப்பாட்டமில்லாமல், அதே நேரம் அழுத்தமாக நமது கடமைகளைச் செய்து வருகிறோம். செய்து வருவோம். தொடர்ந்து  இயங்குவோம். இயங்குவதன் மூலமே காரியங்களை சாதிக்க முடியும்.

ஆனால் தொழிற்சங்கங்கள் என்ற பேரில் இருக்கும் சில வியாபாரிகள் இதுகுறித்தெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.  “அண்ணன் செய்து தருவார்”, “அண்ணன் பார்த்துக் கொள்வார்”, “அண்ணன் மேலே பேசிவிட்டார்” என்று சொல்லி நடத்தும் பகட்டு அரசியல் நமக்குத் தேவையில்லை.  உறுப்பினர்களின் மரியாதையை, சுயத்தை, இழந்துவிட்டு எதை இங்கே பெற்றுவிட முடியும். இந்த வங்கியில் தொழிற்சங்க நடவடிக்கைகளையும், போராட்டக் குணத்தையும் மழுங்கடிப்பதற்கென்றே அந்த சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. நாம் இங்கே இழந்தவைகளுக்கும், நிர்வாகம் ஊழியர்களையும் அலுவலர்களையும் மிரட்டுவதற்கும் மூல காரணமே கொள்கையற்ற இவர்களின் கூடாரம்தான். வரலாற்றில் போராளிகளும் இருப்பார்கள். கருங்காலிகளும் இருப்பார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது மக்களின் பொறுப்பு. ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் எந்த உபகாரமும் செய்யாமல் ரூ.1000/, ரூ.2000/- என ஆரம்பித்து ரு.10000/- வரை ஊழியர்கள், அலுவலர்கள், அப்ரைசர்களிடம் வசூல் செய்து வருகிறார்கள். நமது மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்களாகுகிறார்கள். இதுதான் வேதனை. தொழிற்சங்க இயக்கங்களுக்கான சோதனையும்.

பகட்டுக்கும் படோடாபத்துக்கும் மயங்காமல், எளிமைக்கும், உண்மைக்கும் மரியாதை கொடுக்கும் சமூகத்தில்தான் நியாயங்கள் நிலைக்கும். யார், சங்கமாக செயல்படுகிறார்கள், யார் ஊழியர்களுக்காகவும் அலுவலர்களுக்காகவும் நிற்கிறார்கள், யார் நிர்வாகத்துடன் சமரசமின்றி இயக்கம் நடத்துகிறார்கள் என்பதை இங்குள்ள அனைவரும் உணரவேண்டும்.

மனசாட்சி உள்ளவர்கள், உண்மை அறிவார்கள்.

உண்மையின் பக்கம் நிற்போம்.
நியாயங்களை உரக்கப் பேசுவோம்.
போராடும் குணத்தை வளர்ப்போம்.
வெற்றி நமதே!


தோழமையுடன்




(We have started a Google Page 'TN GBEANS' for the Grama Bank Employees and Officers of Tamilnadu and Puduvai to discuss our issues.
Please join TN GBEANS )

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!