இணையவெளி என்பது காலம், தூரம் எல்லாவற்றின் இடைவெளிகளையும் ஒன்றுமில்லாததாய் ஆக்கிவிட்டது. செய்திகளையும், தகவல்களையும் அள்ளி அள்ளித் தரும், அமுத சுரபி போல இன்று அதன் பயன்பாடு ஆகிவிட்டது. இந்த தொழில்நுட்பம் அறிந்து அதில் இயங்குகிறவர்களையே நவீன காலம் தனக்கான மனிதர்களாய் கருகிறது. எனவே நாம் இதிலிருந்து விலகியிருக்க முடியாது.
ஆயினும் இந்த வசதிகளை பயன்படுத்தும் தோழர்கள் நமது வங்கியில், மிகக் குறைவாக இருக்கின்றனர். அவர்களுக்கு தயக்கங்கள் இருக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இதனை தவிர்க்கவே முடியாது என்றாகிவிட்டது.
இன்று ஒரு சர்க்குலர் வெளியிட்டால், அது கிளைகளுக்கு போய்ச் சேர எப்படியும் ஒருநாள் ஆகிறது. ஆனால், இணையம் அறிந்தவர் நமது வலைத்தளத்தில் அன்றைக்கே படித்துவிட முடியும். தகவல்கலின் வேகம் கூடிவிடுகிறது.
அது மட்டுமல்ல, நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிற மாதிரி இணையத்தில் உரையாடவும் முடியும். அதற்கான வெளிகள் இங்கு இருக்கின்றன. நமது மொபைல் போன் மூலம் கூட, இந்த விவாதங்களில் கலந்துகொள்ள முடியும். FACEBOOK மற்றும் GOOGLE PAGE களில் அதற்கான இடங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த நோக்கத்தில் நாம் இரண்டு தளங்களை இங்கு உருவாக்கி இருக்கிறோம். இங்கு தமிழ்நாட்டில் இயங்கும் பாண்டியன், பல்லவன், புதுவை கிராம வங்கி ஊழியர்களும் அலுவலர்களும் இணையலாம். நமது பிரச்சினைகளை, செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்
.
FACEBOOK - Tn Gramin Bank Employees and officers
GOOGLE PAGE - TN GBEANS
மேலே உள்ள Tn Gramin Bank Employees and officers ஐ கிளிக் செய்தால், FACEBOOKற்கு அழைத்துச் செல்லும். ஏற்கனவே FACEBOOKல் கணக்கு இருந்தால், நீங்கள் உடனடியாக இணைந்துகொள்ள முடியும். இல்லையென்றால் FACEBOOKல் தங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஆரம்பிக்கச் சொல்லும். ஆரம்பித்துவிட்டால் இணைந்துகொள்ளமுடியும்.
அதுபோலவே மேலே உள்ள TN GBEANS ஐ கிளிக் செய்தால், GOOGLE PAGEற்கு அழைத்துச் செல்லும். ஏற்கனவே gmail ல் கணக்கு இருந்தால், நீங்கள் உடனடியாக இணைந்துகொள்ள முடியும். இல்லையென்றால் GOOGLE PAGEல் தங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஆரம்பிக்கச் சொல்லும். ஆரம்பித்துவிட்டால் இணைந்துகொள்ளமுடியும்.
அவ்வளவுதான். நாம் நேரம் வாய்க்கும்போது இங்கு வந்து உரையாட முடியும். வாருங்கள்.
இதுகுறித்துத் தங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தால், இந்தப் பக்கத்தின் கீழ் உள்ள comment box மூலம் தெரிவியுங்கள். அல்லது pgbea.vnr@gmail என்னும் மின்னஞ்சலுக்குத் தெரிவியுங்கள். இணையப் பயன்பாடு குறித்துத் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் சொல்லுங்கள். நிச்சயமாய் உதவுகிறோம்.
ரெடி, ஸ்டார்ட்!
yes sir,
ReplyDeleteyes sir,
ReplyDeletegood effort. everyone should utilze this oppurtunity.
ReplyDeleteநல்ல முயற்சி. அனைத்து தோழர்களும் பங்கு பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteReally a amazing one
ReplyDeleteevery employee of pgb should consider it as a hub to discuss various issues which will earn mutual benefits
Comrades,
ReplyDeletevimalan!
sankarakumar!
Sriram!
Let us spread the spirit!
பல்லவனில் அவ்வளவு வழிப்புணர்வு இல்லை.. எல்லாரையும் இணைய வைக்க முயற்சிக்கிறேன்...
ReplyDeleteYou may give sms alerts also to members for web releases.
ReplyDelete