பாண்டியன் கிராம வங்கியின் புதிய சேர்மனாக திரு.சேவியர் திலகராஜ் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார். அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க நமது PGBEA, PGBOU சங்கங்களின் சார்பில் கேட்டு இருந்தோம். இன்று (17.5.2012) மாலை 4 மணிக்கு சந்திக்க வருமாறு நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
PGBEA சார்பில் தோழர்கள் சோலைமாணிக்கம், மாதவராஜ், சுப்பிரமணியன் ஆகியோரும், PGBOU சார்பில் தோழர்கள் போஸ்பாண்டியன், சங்கரலிங்கம், சாமுவேல் ஜோதிக்குமார், பெருமாள்சாமி ஆகியோர் சென்றிருந்தோம். புதிய சேர்மனுக்கு நமது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்தோம். பாண்டியன் கிராம வங்கியில் சேர்மன்களாக பொறுப்பு வகித்த பலரும், அந்தக் காலத்தை இனிய நினைவுகளாக வைத்திருப்பதை புதிய சேர்மன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
இந்த வங்கியின் business, staff welfare இரண்டுமே தனக்குப் பிரதானம் என்பதை புதிய சேர்மன் தெரிவித்தார். நிச்சயம் வெளிப்படையாகவும், பாரபட்சமில்லாமலும் இருப்பேன் என்று நம்மிடம் உறுதியளித்தார். நாம் அதை வரவேற்றதோடு, அதுவே இந்த வங்கியின் பல பிரச்சினைகளை தீர்த்துவிடும் என நம் கருத்தை வெளிப்படுத்தினோம்.
நமது இரு சங்கங்களின் சார்பில் பல முக்கிய பிரச்சினைகள் முன்வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, அவைகள் அனைத்தையும் இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் பேச முடியாவிட்டாலும், சில அடிப்படையான பிரச்சினைகளை தெரிவிக்க விரும்புவதாகச் சொல்லி, நம் தரப்பில் அவற்றை முன்வைத்தோம்.
1. இந்த வங்கியில் ஊழியர்களிடமும், அலுவலர்களிடம் வேலை வாங்குவதில் எந்த விதிகளும் பின்பற்றுவதில்லை. ஆனால் சலுகைகள் வழங்குவதில் மட்டும் விதிகளும், கடுமையான நிர்ப்பந்தங்களையும் நிர்வாகம் பின்பற்றுகிறது என்பதை சுட்டிக்காட்டினோம். உதாரணமாக பல கிளைகளில் மெஸஞ்சர்கள் கிடையாது. அந்தக் கிளைகளில் கிளரிக்கலாக பணிபுரிபவர்கள் அப்ரைசர்களையோ, தற்காலிக ஊழியர்களையோத்தான் FUndsக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கே நிர்வாகம் விதிகளை கண்டும் காணாததும் போல இருக்கிறது. அதே நேரம் இங்கு ஊழியர்களும், அலுவலர்களும் deputation சென்றால் இடையில் வரும் holidaysக்கு halting allowance வழங்குவதில்லை.
2. இங்கு முறையான transfer policy இல்லை. பாரபட்சங்களும், பழிவாங்கல்களும் நீடிக்கின்றன. இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளது போல், transfer policy ஒன்று வேண்டும்.
3. கடுமையான பணி நெருக்கடியும், ஆள் பற்றாக்குறையும் நிலவுகிறது. பணிச்சூழலை மேம்படுத்த வேண்டும்.
4. பணி ஓய்வு பெறுகிறவர்களிடம் நிர்வாகம் இரக்கமில்லாமல் நடந்துகொள்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே, சரிசெய்ய வேண்டியவைகளை தெரியப்படுத்தி, பணி ஓய்வுக்காலம் சுமூகமாகவும், நிம்மதியாகவும் இருக்க நிர்வாகத்தரப்பில் ஏற்பாடுகள் இல்லை. ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தி வெறுங்கையோடு அனுப்புகிறது.
5.கடந்த சில வருடங்களாக, நிர்வாகத்தரப்பில் ஏராளமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நியாயமான முறையில் விரைந்து முடிப்பது, வங்கியில் ஒரு புதிய சூழலையும், இங்கு பணிபுரிபவர்களின் மனோநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
நாம் சொன்னவைகளை, அமைதியாகவும் உன்னிப்பாகவும் புதிய சேர்மன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அவைகள் குறித்து இரு பொதுமேலாளர்களிடமும் அபிப்பிராயங்களை அறிந்துகொண்டார். News paper allowance, overtime allowance குறித்து ஸ்பான்ஸர் வங்கியில் உடனடியாக தொடர்பு கொண்டு முடிக்க அறிவுறுத்தினார். TA மற்றும், Halting allowance நம் கையில்தானே இருக்கிறது என்றவர், “இனி holidayக்களிலும் halting allowance வழங்கப்படும்” என்றார். இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நாம் நமது சந்தோஷத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டோம். மிக நீண்ட நாள் கோரிக்கை, நமது தொடர்ந்த முயற்சியால் இங்கு சாத்தியமாகி இருக்கிறது. அதற்கு சேர்மனும் இரு பொதுமேலாளர்களும் காட்டிய இணக்கமான அணுகுமுறையும் முக்கியமானது.
பேச்சுவார்த்தையின் போது, உடனடியாக இந்த வங்கிக்கு 420 பேர் புதிதாக பணி நியமனம் செய்ய வேண்டும் என தான் திட்டமிட்டு இருந்ததாகவும், மத்திய அரசின் சமீபத்து முடிவு அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் தெரிவித்தார். Per staff profit 5 லட்சத்துக்கு மேல் இருந்தால்தான் நாம் விரும்பியபடி புதிய பணி நியமனம் செய்துகொள்ளலாம் என மத்திய அரசில் இருந்து வந்திருக்கும் தகவலைச் சுட்டிக்காட்டினார். Profitஐ அதிகரிக்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து loans, recovery குறித்த நமது யோசனைகளை தெரிவித்திருக்கிறோம். அவைகளை வரவேற்ற சேர்மன், பொதுமேலாளர்களிடம் விவாதித்தார். அதுகுறித்து பரிசீலனைகள் செய்வதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை சுமூகமாகவும், நல்ல தொடக்கமாகவும் இருந்தது. நமது கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசவேண்டி இருப்பதைச் சொன்னோம். பேச்சுவார்த்தை மூலமாக நாம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என சேர்மன் தெரிவித்தார். நாமும் அதையே விரும்புவதாக கூறி அவரிடமிருந்து விடை பெற்றோம்.
erunthalum naam namagave erupom
ReplyDeleteநாம் எப்போதும் நாமாகத்தான் இருப்போம் தோழர் அருண்!
Deleteநடப்பவை நல்லதாகவே நடக்கட்டும்.நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்.
ReplyDeleteநாம் வருங்காலத்தின் மீதும், நம்மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்தாம் எப்போதும்!
Deletenew templates super..
ReplyDeleteமிக்க நன்றி தோழரே! இதுபோன்ற பாராட்டுதல்கள் உற்சாகமளிக்கின்றன.
Deletesatyamev jayate!!
ReplyDeleteசத்தியம் ஜெயிப்பதை நாம்தான் சாத்தியமாக்க வேண்டும்!
DeleteI AM tharanivel from ramanathapuram district . PGBEA ASSOSIATION VERY LIGHITHOUSE OF YOUNG HUIMANE . I LIKE U UR POLICY AND THOUGHT . JEETBHAT
ReplyDelete