27.5.12

PGBEA - PGBOU கட்டிட வளர்ச்சி நிதி


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

முதன்முதலாக, சாத்தூரில் 42-பி, எல்.எப் தெருவில் வாடகைக்கு ஒரு அலுவலகம் இடம் பிடித்து, பின் விருதுநகரில் 6, பிச்சைத்தெருவில் ஒரு கட்டிடம் குத்தகை எடுத்து இயங்கிய காலங்களும், இதோ நமக்கென்று சொந்தமாக ஒரு கட்டிடத்தில் நாம் எழுந்து நிற்கிற காலங்களுமாய் வரலாறு இந்த நேரத்தில் நிழலாடுகிறது.

இரவு பகலென்று பாராது, எத்தனை எத்தனையோ கூட்டங்கள், விவாதங்கள், உரையாடல்கள் என நீண்ட அனுபவங்களே இன்றைக்கும் நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன.

மேலும், தீவீரத்தோடும், தொழில்நுட்ப வசதிகளோடும் நாம் இயங்க வேண்டிய காலக்கட்டம் இது. நமது இரு சங்கங்களின் கூட்டுச்செயற்குழு இதனை உணர்ந்து, நமது சங்க அலுவகத்தை மேலும் ஆக்கபூர்வமாக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைக்கபட்டு இருக்கிறது. நமது இருசங்கங்களின் பொதுச்செயலாளர்களை உள்ளடக்கிய அந்தக் கமிட்டியின் கன்வீனராக PGBEA உதவிப்பொதுசெயலாளர் தோழர்.M.சுப்பிரமணியன் அவர்கள் இருப்பார்.

2004 மே மாதம், உழைப்பாளர்கள் தினத்தில் திறக்கப்பட்ட நமது தொழிற்சங்க அலுவலகம் இன்று அதற்கான தேவைகளோடு நம்முன் நிற்கிறது. சங்கத்தின் மேல்தளத்தில் ஒரு conference ஹாலும், சுற்றுப்புறச் சுவர்களும், வர்ணப்பூச்சும், கணிணி மயமுமாக, இந்தக் கட்டிடம் மேலும் வளர வேண்டியிருக்கிறது.

நமது வாழ்வோடும், எதிர்காலத்தோடும் பிணைக்கப்பட்ட நமது சங்கங்களின் அலுவலகம் இது. இதன் ஒவ்வொரு செங்கல்லிலும், ஒவ்வொரு அடியிலும் தோழர்கள் நமது பெயர்களும், நினைவுகளுமே நிறைந்து கிடக்கிறது. இதன் சொந்தக்காரர்கள் நாம்தான். எனவே, மீண்டும் சங்கம் வந்து நம்மிடம் உரிமையுடன் கேட்கிறது.

தோழர்களே!
அலுவலர்கள் ரூ.1000/-, எழுத்தர்கள் ரூ.600/-. மெஸஞ்சர்கள் ரூ.300/-ம் என தங்கள் பங்களிப்பாக மே மாத ஊதியத்தில் அனுப்பி வைக்கும்படி PGBEAவும், PGBOUவும் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறது. உற்சாகத்துடன் அனுப்பி வைப்பீர்கள் என காத்திருக்கிறது. நமக்கு நாமே செலுத்திக்கொள்ளும் இரத்தம் இது.

தோழமையுடன்



(M.சோலைமாணிக்கம்)  (M.சுப்பிரமணியன்)  (T.சங்கரலிங்கம்)
GS- PGBEA              Convenor           GS-PGBOU



விருதுநகர் கிளையில் இருக்கும் “PGBEA PGBOU Buliding Fund” account number 5187017740 கணக்கிற்கு தோழர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்துங்கள். பணம் செலுத்துகிற போது தங்கள்பெயரைக் குறிப்பிடுங்கள். அதற்கான ரசீதை கமிட்டியிருந்து அனுப்ப உதவியாய் இருக்கும்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!