9.6.12

JUNE 8: Strike and Seminar



ஜூன் 8 ம் தேதி நமது வேலைநிறுத்தம் மிகுந்த எழுச்சியோடும் உணர்வு பூர்மாகவும் நடந்திருக்கிறது. தங்கள் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தை நோக்கி, தேசம் முழுவதும் AIRRBEA அறைகூவலின் பேரில் நடந்து முடிந்திருக்கிற இந்த வேலைநிறுத்தத்தில், பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கியில் உள்ள நமது இணைப்புச் சங்கங்கள் பங்கேற்றன.

பாண்டியன் கிராம வங்கியில் , இந்த வேலைநிறுத்த நாளன்று , பெரும்பாலான கிராம வங்கிகளில் வணிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 90 கிளைகளில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை. பேருக்கு ஒரு அலுவலரையும், ஊழியரையும் வைத்து, கிளைகளை திறந்து, ஒப்புக்கு சில transaction  செய்த கிளைகளின் எண்ணிக்கை எழுபத்தைந்துக்கு மேலிருக்கும்.

PGBEA, PGBOU வின் உறுப்பினர்களில் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏறத்தாழ முழுமையாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.Red salutes  to comrades! வாழ்வதற்கான அர்த்தத்தை அறிந்தவர்கள் நாம். வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் வேண்டும் என கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்குமாக போராடிய, மகத்தான மனிதர்களாய் நமது தோழர்கள் நிமிர்ந்து நிற்கும் நேரமிது. எந்தக் காரணங்கள் இருந்தபோதும், இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாத மற்றவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய நேரமிது!

இந்த வேலை நிறுத்த நிறுத்த நாளன்று, மதுரையில் நடந்த கருத்தரங்கில், திரளான தோழர்கள் பங்கேற்றனர். தோழர். விக்கிரமன் (சி.ஐ.டி.யூ), தோழர். சி.பி.கிருஷ்ணன் (BEFI), தோழர். கிரிஜா (AIIEA) கலந்து கருத்துரையாற்றினர். உற்சாகத்துடன் கலந்து கொண்ட நமது தோழர்களை இங்கே பாருங்கள்.  எவ்வளவு உற்சாகமும், பெருமையுமாய் அவர்கள் முகங்கள் இருக்கின்றன.

(வேலைநிறுத்தம், கருத்தரங்கம் குறித்த விரிவான செய்திகள் நாளை...)


வீடியோ



ஆல்பம்!



















1 comment:

  1. நல்ல பதிவு,நல்ல படப்பிடிப்பு.நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட பேராட்டங்கள் இனி இப்படியும் தன்னை வெளிப்படுத்திக்காட்டும்.அதற்கு கருத்தரங்கத்திற்கு வந்திருந்த நமது தோழர்களும்,அவர்களது உளக்கிடக்கையும்,புதுவை,பல்லவன் கிராம வங்கி ஊழியர்களின் வருகையுமே சாட்சியாகவும் இருந்தது.தவிர இதுஒரு குடும்ப விழா என்பதை திரும்பவுமாய் ஒருமுறை நீரூபித்துச்சென்றிருக்கிறது இந்த கருத்தரங்கு,ஏற்பாடு செய்து சிறப்பித்தவரகளுக்கும்,வருகை தந்து சிறப்பித்த அனைவருகும் நன்றி/

    ReplyDelete

Comrades! Please share your views here!