10.6.12

முன்னாள் PGBOAவின் தலைவர் தோழர்.பாலசுப்பிரமணியம் அவர்களின் வாழ்த்து!


ஜூன் 8ம் தேதி வேலை நிறுத்த நாளன்று, நாம் மதுரையில் நடத்திய கருத்தரங்கில் நமது வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்துகொண்டார். PGBOA வின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்து வழி நடத்தியவர் அவர். பென்ஷனுக்காக நாம் நடத்தும் வேலைநிறுத்தத்தை வாழ்த்திப் பேசுமாறு அவரை அழைத்தோம்.

மிகுந்த நெகிழ்ச்சியோடும், மகிழ்வோடும் அதை ஏற்றுக்கொண்டு பேசியவர், அந்தக் கருத்தரங்கில் பதிவு செய்த வார்த்தைகள் மிக முக்கியமானவை. அர்த்தமுள்ளவை. தான் மாற்றுச் சங்கத்தின் தலைவராக இருந்த போதும், AIRRBEAதான் கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கிக்கு இணையான  ஊதியத்தைப் பெற்றுத் தந்தது என்பதை உணர்ந்தவன் என்றார். அரசின் அத்தனை சதிகளையும் சமரசமற்றுப் போராடி முறியடித்தது என கடந்தகாலத்தின் உண்மைகளை கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட தோழர்கள் ஆர்ப்பரிக்க, நேர்மையாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, பென்ஷனையும் AIRRBEAதான் கிராம வங்கி ஊழியர்களுக்குப் பெற்றுத் தரப் போகிறது என்பதையும் குறிப்பிட்டார். வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு  தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். கருத்தரங்கின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.

அதன் வீடியோக் காட்சி இங்கு:


No comments:

Post a Comment

Comrades! Please share your views here!