12.6.12

Abrupt Foul-Play by LRD SM!



LRD-SM பாலன் அவர்களின் பேச்சும், நடத்தையும் நம் வங்கியில் மிகப் பிரபலம். உயர்பதவியில் இருப்பவர்களை காக்கா பிடிப்பது, இந்த வங்கிக்காகவே அல்லும் பகலுமாய் சிந்திப்பதும் உழைப்பதுமாய் தன்னைக் காட்டிக்கொள்வது என சில டெக்னிக்குகள் வைத்திருக்கிறார். இதன் மூலம் தன்னை அவர்களுக்கு நெருக்கமானவராகக் காட்டிகொண்டு, டிரான்ஸ்பர், பிரமோஷன்களில் காரியங்கள் சாதித்துக் கொள்வார். அதேநேரம் தன் பதவிக்குக் கீழ் பணிபுரிபவர்களை ஒருமையில் பேசி, கடும் சொற்களை பிரயோகித்து பலருடைய வெறுப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். இப்படி இந்த பாலன் தனக்கென ஒரு வாழ்க்கை முறை வகுத்துக்கொண்டு இருப்பவர்.

வங்கிக்கு உழைப்பதைவிட, நிர்வாகத்துக்கு ஆதரவாக தன்னைக் காட்டிக்கொள்வதற்காகவே அல்லும் பகலும் பாடுபடுபவர் இவர். அதற்காக இவருடைய ஞானத்தில் தினம்தோறும் பொரிக்கும் சிந்தனை முட்டைகளை மேலதிகாரிகளுக்குக் காட்டி வாங்கிய ‘சபாஷ்கள்’ ஏராளம். அந்த தெம்பில் அவர் எல்லோரிடமும் காட்டிய முட்டை ஒன்று கூமுட்டையாகி நாறிப் போயிருக்கிறது. சென்ற வாரம், நடந்த விருதுநகர் மேலாளர் கூட்டத்தில் இந்த உண்மை வெளிப்பட்டு இருக்கிறது.

AJLல் அதிக பட்சமாக ஒருவருக்கு மூன்று லட்சம் கொடுக்கலாம் என்பதுதான் வங்கியின் விதி. அதற்கு மீறி கொடுத்தால் அது தவறாகவும், குற்றமாகவும் கருதப்படுகிறது. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு customer ID இருப்பதால், ஒருவருக்கு அதிகபட்சமாக எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை நமது CBS காட்டிக்கொடுத்துவிடும். இதனால் AJL அதிகமாகக் கொடுக்க முடியவில்லை என்று இந்த பாலன் கருதியிருக்கிறார். இதனை உடைக்க ஒரு வழியும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். AJL master create செய்யும்போது, வாடிக்கையாளரின் பெயரின் spellingஐ தவறாக அடிப்பதன் மூலம், அதே வாடிக்கையாளருக்கு இன்னொரு customer ID create செய்துவிடலாம் என்பதே அது. இதன் மூலம் அதே நபருக்கு மேலும் மூன்று லட்சம் கொடுக்க முடியும் எனச் சொல்லியிருக்கிறார். அதாவது ஒரே நபருக்கு பல customer IDகள் மூலம் பல முகங்களை உருவாக்கி, பல லட்சம் லோன் கொடுக்கலாம் என மேலாளர்களிடம் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் கிளைகளில் AJLஐ உயர்த்தமுடியும் என வங்கியின் உயர் அதிகாரிகளை வைத்துக்கொண்டே ஒரு ‘அற்புத கண்டுபிடிப்பை’ நிகழ்த்தியிருக்கிறார்! It is an abrupt and absolute foul-play!

உயர் பதவியில் இருப்பவர்கள் வழிகாட்டும் விதமா இது. வங்கியின் விதிகளை மீறவும் உடைக்கவும் மேலிருப்பவர்களே இப்படிப் பேசுவது முறையா? இப்படித்தான் நமது வங்கியில் ‘system' சிதைந்து போகிறது. இதுபோன்ற நடைமுறைகள் கிளைகளில் பின்பற்றப்பட்டால், இந்த பாலன்கள் தப்பித்து விடுவார்கள். அந்தக் கிளை மேலாளர்களைத்தான் இதே நிர்வாகம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கும். எனவேதான், இது போன்ற சீர்கேடுகளை எதிர்த்து PGBEAவும், PGBOUவும் ‘ஒரு சீர்திருத்த இயக்கம்’ ஆரம்பித்திருக்கின்றன.அதன் ஒரு பகுதியாக, LRD-SM பாலனின் இந்தத் தவறான அணுகுமுறையை நாம் கண்டிக்கிறோம். அம்பலப்படுத்துகிறோம். இது குறித்து நாம் பொதுமேலாளரிடம் புகார் செய்திருக்கிறோம்.

தவறு செய்வதைவிட, தவறு செய்யத் தூண்டுபவர்களுக்குத்தாம் தண்டனை அதிகம் இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!