சென்ற வருடம் 20.6.2011 அன்று நாம் நமது வெப்சைட்டை ஆரம்பித்தோம். இதோ ஒரு வருடம் முடிந்திருக்கிறது. இதுவரை 191 செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம். இதை எழுதும் இந்தக் கணத்தில் இந்த வெப்சைட்டிற்கு இதுவரை மொத்தம் வந்து படித்தவர்களின் எண்ணிக்கை 68,386 என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இது சாதாரண தகவல் அல்ல!
வெப்சைட் ஆரம்பித்த முதல் மூன்று மாத காலம், தொடர்ந்து செய்திகளை, தகவல்களை பிரசுரித்தோம். பிறகு ஒரு ஆறு மாதகாலம் பெரிதாக நமது வெப்சைட் அப்டேட் செய்யப்படவில்லை. மீண்டும் ஏப்ரல்-2012 லிருந்துதான் நமது வெப்சைட் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு இயங்குகிறது. அதற்கு இத்தனை வாசகர்களும், பார்வையாளர்களும் உருவாகியிருப்பது, ஆச்சரியமான, ஆதரவான செய்தி.
உடனுக்குடன் தகவல்களை வெளியிடும், இந்த ஏற்பாடு சங்க வேறுபாடுகளைக் கடந்து தோழர்களுக்கு பிடித்திருக்கிறது. அகில இந்தியச் செய்திகள், ஸ்தலச் செய்திகள் எல்லாவற்றிலும் உண்மையையும், சரியான பார்வையும் கொண்டு நாம் தெரிவிக்கும் வேகம் தோழர்களுக்கு பிடித்திருக்கிறது. அதுதான் இத்தனை வருகையை இந்தக் குறுகிய காலத்திற்குள் உருவாக்கி இருக்கிறது.
சமீபத்தில் பல்லவன் கிராம வங்கிக் கிளைகளுக்கு நாம் சென்ற போது, அங்கு பலரும் நமது வெப்சைட்டை அறிந்தவர்களாகவும், தொடர்ந்து வாசிப்பவர்களாகவும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். AIRRBEAதான் கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்காக இயங்கும் ஒரே அமைப்பு என்பதை புரிந்து கொண்டு இருக்கின்றனர்.
ஜூன் 8 ம் தேதி ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாத ஒரு PGBOAவின் தோழர் நம்மிடம் சொன்ன செய்தி இது; “எனக்கு இண்டர்நெட், வெப்சைட் எல்லாம் தெரியாது. என் மகனிடம் சொல்லித்தான், PGBEAவெப்சைட்டை பார்ப்பேன். அவனுக்கும் நமது சங்கச் செய்திகள் இப்போது பிடிபடுகிறது. அவன் என்னிடம் எல்லோரும் பென்ஷனுக்காக நேற்று ஸ்டிரைக் செய்த போது நீங்கள் ஏன் வேலைக்குப் போனீர்கள் என்று என்னிடம் கேட்டான். குற்ற உணர்ச்சியிலும், அவமானத்திலும் துடித்துப் போனேன்.”. இந்த ஒப்புதல் வாக்குமூலம்தான் உண்மையின் வெற்றி. நமது வெற்றி.
ஆக நம் வாழ்க்கை, நம் பிரச்சினைகள், அதில் நமது நிலைபாடு எல்லாம் நம் குடும்பங்களுக்குள்ளும் செல்கின்றன. அந்த அற்புதமான காரியத்தை, நமது வெப்சைட் செய்கிறது. நமது குடும்ப நிகழ்வுகளையும் வெளியிட ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் பல கனவுகளும், திட்டமிடல்களும் இருக்கின்றன.
இந்த இடத்தில் உங்கள் வாழ்த்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்கள் கருத்துக்களை தயக்கமில்லாமல் தெரிவிக்க வேண்டுகிறோம். அது, நம் வெப்சைட்டை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற உதவும்.
பேசுங்கள் தோழர்களே!
இன்றைய விஞ்ஞான யுகத்தில் இதுவும் அவசியமாகிப்போகிறது.வாழ்த்துக்கள். PGBEA வை சார்ந்தவன் என்கிற முறையில் ஒரு ராயல் சல்யூட்/
ReplyDeleteஇன்றைய விஞ்ஞான யுகத்தில் இதுவும் அவசியமாகிப்போகிறது.வாழ்த்துக்கள். PGBEA வை சார்ந்தவன் என்கிற முறையில் ஒரு ராயல் சல்யூட்/
ReplyDelete