1.10.12

Second Phase of Amalgamation process in RRBs is started!

கிராம வங்கிகளில் first phase of amalgamation  நடந்து முடிந்திருந்தது. இதன்படி, ஒரு மாநிலத்தில், ஒரு ஸ்பான்ஸர் வங்கியின் கிராம வங்கிகள் amalgamate செய்யப்பட்டன. 196 கிராம வங்கிகளிலிருந்து 82 கிராம வங்கிகளாக எண்ணிக்கையில் குறைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இந்தியன் கிராம வங்கி ஸ்பான்ஸர் செய்த வள்ளலார் கிராம வங்கியும், அதியமான் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியாக amalgamate செய்யப்பட்டது இந்த first phase of amalgamation பிரகாரம்தான்.

அடுத்து ஒரு மாநிலத்தில் உள்ள வெவ்வேறு வணிக வங்கிகள் ஸ்பான்ஸர் செய்த கிராம வங்கிகளை amalgamate  செய்து 46 கிராம வங்கிகளாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்து அது குறித்த பூர்வாங்க ஆலோசனைகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு சில ஸ்பான்ஸர் வங்கிகள் சம்மதம் கொடுக்காத நிலைமைகளும், சில மாநில அரசுகள் சம்மதம் தெரிவிக்காத நிலைமைகளும் இருந்தன. அவை ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கிராம வங்கிகளில் second phase of amalgamation விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது என்பதை ஏற்கனவே நமது AIRRBEA சொல்லி வந்தது. அதுகுறித்த பத்திரிகைச் செய்திகளும் வெளியாகி இருந்தன. சென்ற வாரம் நமது அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர்.திலீப் குமார் முகர்ஜி அவர்கள், அக்டோபர் முதல் வாரத்தில்  second phase of amalgamation ஆரம்பிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் தெரிவித்திருந்தார்.

நாம் சொல்லியது அக்டோபர் 1ம் தேதியே உண்மையாகி இருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஸ்பான்ஸர் செய்த ஆரியவர்த் கிராம வங்கியும், உத்திரப்பிரதேச மாநில கோஆபரேட்டிவ் வங்கி ஸ்பான்ஸர் செய்த ஷேத்திரிய கிஸான் கிராம வங்கியும் amalgamate  செய்யப்படுவதற்கு இன்று அரசு தரப்பில் notification வெளியாகி உள்ளது. .

அரசின் திட்டப்படி, உடனடியாக amalgamate செய்யப்படும் மாநிலங்களின் பட்டியல் இதோ:
1) Assam 
2) Uttaranchal 
3) Jharkhand 
4) Chhattisgarh
 5) Kerala 
6) Tamilnadu 
7) Himachal 
8) Haryana 
9) J & K 

இதுகுறித்து Business Standard பத்திரிகையில் வெளியாகி இருக்கும் செய்தியினை படிக்க : Second phase of Regional Rural Banks consolidation begins

ஆக, தமிழ்நாட்டில் உள்ள பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் amalgamate செய்யப்படுவதற்கான நாட்கள் தொலைவில் இல்லை.


ஆரியவர்த் கிராம வங்கியும், ஷேத்திரிய கிஸான் கிராம வங்கியும் amalgamate  செய்யப்படுவதற்கு இன்று அரசு தரப்பில் வெளியாகி உள்ள notification இதோ:





3 comments:

  1. என்று வரும் அந்த பொன் நாள்
    இவண்
    பல்லவன் அடிமை வங்கி அடிமை

    ReplyDelete
  2. தோழா...!! உங்களது வலிகளும் ஏக்கங்களும் புரிகிறது.... ஆனால் ஒன்று நமது பிரச்சனைகளை நாமே எதிர்க்காவிட்டால் எந்த மீட்பனாலும் நம்மை காத்திட முடியாது.

    ReplyDelete
  3. என்ன அடிமை என்றெல்லாம் கூறுகிறீர்கள்..அப்படி என்ன இங்கை விட‌ கொடுமை நிலவுகிறது அங்கு...

    ReplyDelete

Comrades! Please share your views here!