கடந்த சில வருடங்களாக பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்திற்கு ஒரு நோய் பீடித்திருக்கிறது. அதற்கும் முன்னர் இந்த நோய் உள்ளுக்குள்ளேயே இருந்து மெல்ல மெல்ல பரவிக்கொண்டு இருந்திருக்கிறது. 4.1.2013 அன்று மாலை நடைபெற்ற நமது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கமும், தலைவர் தோழர்.மாதவராஜும், AIVD முதுநிலைமேலாளர் மிஸ்டர் சங்கரநாராயணனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த நோய் மிகவும் முற்றிப் போயிருப்பதைக் காண முடிந்தது.
தோழர்.மாதவராஜ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சார்ஜ் ஷீட் குறித்து மிஸ்டர் சங்கர நாராயணனிடம் சில விளக்கங்கள் கேட்டோம்.
2010 ஜனவரி முதல் 2012 அக்டோபர் வரை 34 மாதங்களில் 80 நாட்கள் ‘unauthorised absence' என்று ஒரு சார்ஜ் சொல்லப்பட்டு இருக்கிறது. வருகைப்பதிவேட்டின் படி தோழர்.மாதவராஜ் இந்தக் காலத்தில் எடுத்த மொத்த லீவே 106 நாட்கள். இதில் 36 நாட்கள் (3 X 12) casual leave. மீதியுள்ள 70 நாட்களில் medical leave, privilege leave எல்லாம் இருக்கிறது. இதில் 80 நாட்கள் என்று எந்தக் கணக்கில், எப்படி unauthorised absence என்று சொல்கிறீர்கள்? என்பதுதான் நாம் கேட்ட முதல் விளக்கம்.
‘அதையெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை, என்கொயரி டேபிளில் சொல்லிக்கொள்ளுங்கள்’ என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்தார். அதாவது அவர்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்வார்களாம். அவையெல்லாம் சரியில்லை என்று இரண்டு மூன்று வருடங்கள் என்கொயரி நடத்தி நாம் நிரூபணம் செய்ய வேண்டுமாம். இதுதான் இவர்கள் நடத்தும் ‘ஒழுக்கங் கெட்ட நடவடிக்கை’களின் லட்சணம். இது எப்படி சரி என்று நாம் கேட்டதற்கு, ‘என்னை எப்படி நீங்கள் கேள்வி கேட்க முடியும்?’ என தாறுமாறாக கத்த ஆரம்பித்தார். “நீங்கள்தான் எதற்கு எடுத்தாலும் கோர்ட்டுக்கு போவீர்களே, இதற்கும் போங்கள்” என வயிற்றெரிச்சலைக் கொட்ட ஆரம்பித்தார். ஒரு பொறுப்பான அதிகாரி பேசுகிற பேச்சா இது? இவர்களிடம் நியாயமும், நீதியும் இருந்தால் நாம் ஏன் கோர்ட்டுக்குப் போகிறோம்?
அடுத்ததாக, இன்னொரு விளக்கம் கேட்டோம். குறிப்பிட்ட சில தினங்களில் தோழர்.மாதவராஜ் வங்கிக்கு குறித்த நேரத்துக்கு வரவில்லை என்றும், குறித்த நேரத்துக்கு முன்பே சென்று விட்டார் என்றும் கூறி, அதனால் branch routine பாதிக்கப்பட்டு விட்டது என்றும், customer serviceல் குறைகள் இருந்தன என்றும் சுட்டிக்காட்டி தோழர். மாதவராஜ் அவர்களிடம் 8.9.2012 அன்று ஒரு விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு, தோழர்.மாதவராஜ் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் எழுதினார்.
From
J.Mathavaraj
Office Assistant
Roll No. 560
Pandyan Grama Bank
Sattur
To
The General Manager (A)
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar
Sir,
With reference to your letter AIVD/595/12-13 dated 8-9-2012, I request your goodselves to kindly give me the following details and provide me opportunity to submit my explanation for the same.
a) Who did report that I have not maintained punctuality in attending the office work on the dates as mentioned in your letter?
b) To whom the report was submitted?
c) when was the report submitted?
d) Whether the person reported against me was remained in the sattur branch on the whole days for the dates mentioned in your letter?
e) Whether the person who reported against me enquired anything with me in this regard?
f) was there any remarks marked in the attendance of sattur branch in this regard?
g) Whether any staff of sattur branch has complained that I have caused disruption to normal functioning of the branch?
h) What is the nature of disruption of work caused by me on the dates as mentioned in your letter?
i) whether any customer of sattur branch has complained that I have caused inconvenience to our customers on the dates as mentioned in your letter?
f) What are cases of inconveniences caused to customers of sattur branch on the dates mentioned in your letter?
Thanking You,
Yours faithfully
(J.Mathavaraj)
‘I request your goodselves to kindly give me the following details’ என்று யார் கம்ப்ளைண்ட் செய்தது, staff யாரேனும் ரிப்போர்ட் செய்தார்களா, கஸ்டமர் யாரேனும் கம்ப்ளைண்ட் செய்தார்களா, என்றும், அது குறித்த தகவல்களை தெரிவித்தால், பதில் சொல்ல வசதியாய் இருக்கும் என்பதுதான் இந்தக் கடிதத்தின் அர்த்தம். எளிய ஆங்கிலம் படித்த யாருக்கும் இது தெரியும். ஆனால் மெத்தப் படித்த அதிமேதாவியான மிஸ்டர் சங்கர நாராயணனுக்கு இதற்கு வேறு விதமாக அர்த்தம் தெரிந்திருக்கிறது.
தோழர் மாதவராஜ் கேட்ட தகவல்களை கொடுக்காமல், ‘you had submitted a letter requesting to provide so many details clothed in impolite language without submitting proper explanation.Thus you have exhibted insubordination and your act smacks of contempt to Administrative Office instructions.' என்று சார்ஜ் ஷீட்டில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
"தோழர்.மாதவராஜ் அப்படியென்ன impoliteஆக எழுதிவிட்டார்? ‘இதில் என்ன contempt to Administrative Office instructions?’ இருக்கிறது என கேட்டோம்.
இதற்கு அவர் சொன்ன பதில்தான் தலைமையலுவலகத்தை பீடித்திருக்கும் நோயை, வெளிச்சம் போட்டுக் காட்டியது. “நாங்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல், நீங்கள் எப்படி எங்களை கேட்க முடியும்? அதற்கெல்லாம் staff servicce regulations உங்களை அனுமதிக்கவில்லை’ என ஒரே போடாக போட்டார். இவருக்கென்று தனியாக ஏதேனும் staff service regulations வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. மிஸ்டர் சங்கர நாராயணன் வகையறாக்கள் எங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இது ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் கருத்து உரிமையை வழங்கி இருக்கிறது. அடிப்படை உரிமையை மறுக்கும் இவர்தான் இந்தச் சட்டத்தின் முன் முதல் குற்றவாளி.
இவர் மட்டுமல்ல, தலைமையலுவலகத்தில் மேலும் சிலருக்கு இந்த நோய் பிடித்திருக்கிறது. இந்த வங்கியில் பணிபுரிகிறவர்கள் யாரேனும் அவர்களைக் கேள்வி கேட்டுவிட்டால், அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. கேள்வி கேட்டவர்கள் மீது ஜென்ம விரோதம் கொண்டு, அவர்களை எப்படியாவது பழிதீர்க்க, வஞ்சம் தீர்க்க வெறி கொண்ட மனதோடு ஃபைல்களை புரட்டுகிறார்கள். அப்படிப்பட்ட பல உதாரணங்களை இங்கு சொல்லிக்கொண்டே போகலாம். அடிப்படையில் அதிகாரத்தின் ருசி கண்ட பாசிச மனோபாவமும், ஒருவகையான வக்கிரபுத்தியுமே இவ்வகையான நோய்க்கு காரணமாக அமைகிறது. மிஸ்டர் சங்கர நாராயணனைப் போன்றவர்கள் தலைமையலுவலகத்திற்குள் வந்த பிறகுதான் இந்த நோய் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. எனவேதான் நாம், அவரைப் போன்றவர்களை அப்புறப்படுத்தி, தலைமையலுவலகத்தை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 கேள்விகளாக, ஒரு மாதத்திற்கு RTI Actன் படி தபால்களை தலைமையலுவலகத்திற்கு அனுப்பினால், இந்த நோய் குணமடையும் என தொழிற்சங்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதையும் பரிசீலித்து வருகிறோம்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!