முற்றிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்காக, PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ் அவர்களுக்கு சார்ஜ் ஷீட் நேற்று கொடுக்கப்பட்டு இருப்பதை ‘ PGB நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கை’ என அம்பலப்படுத்தி இருந்தோம்.
4.1.2013 அன்று தலைமையலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருந்தோம். இதனை நம் வலைத்தளத்தில் படித்து அறிந்த, BEFI தோழரும், நுட்பமான கருத்தாளருமாகிய எஸ்.வி.வேணுகோபாலன், “தோழர் மாதவராஜ், உங்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம்” என இன்று அனுப்பிய மெயிலை அப்படியே இங்குத் தருகிறோம்!
பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் புத்தாண்டை ஒரு போராட்டத்தின் மூலம் வரவேற்கிறார்கள். தொழிற்சங்க இயக்கத்தை முடக்க நிர்வாகம் எடுத்து வைக்கும் அடுத்த அடி ஒன்றிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஜனவரி 4 அன்று தங்களது தலைமை அலுவலகம் முன்பாக நடத்தி இருக்கின்றனர். PGBEA தலைவர் மாதவராஜ் அவர்களுக்கு நிர்வாகம் வழங்கி இருக்கும் சார்ஜ்ஷீட் தான் அவர்களை மீண்டும் வீதிக்கு இழுக்கிறது. போராடத் தூண்டுவது எப்போதுமே நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தானே..
சங்கத் தலைவர் நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லை, மிக அதிகம் விடுப்பில் செல்கிறார் என்ற இரண்டு மிகப் பெரும் குற்றங்களை மாதவராஜ் செய்திருப்பதாகப் பேசுகிறது குற்றப் பத்திரிகை. மிக மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், பொதுவாக தொழிற்சங்கங்கள் மீது அதிகம் மரியாதை வைக்காதவர்கள் இதை வாசித்தால், ஆமாம், சம்பளம் வாங்குறீங்க இல்ல, டயத்துக்கு அலுவலகம் போக என்ன கேடு, எப்பப் பார்த்தாலும் லீவு போடுறவங்க வேலைய விட்டு நின்னுக்க வேண்டியது தான...என்று கேட்கக் கூடும்.
இதற்கு இரண்டு பதில்கள், குறைந்தபட்சம், உடனடியாக முன்வைக்க முடியும். அரிச்சந்திரனிடம் விஸ்வாமித்திரன் விதித்த நிபந்தனை நினைவிருக்கிறதா ....ஒரே ஒரு பொய் சொல்லு போதும், உனது எல்லாக் கஷ்டங்களையும் போக்கி விடுகிறேன்...அதே கதை தான். அதாவது, தொழிற்சங்கத் தலைவர்கள் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க மாட்டோம், என்ன தவறு நடந்தாலும் வாய் மூடி நிற்போம், ஊழியர்களை என்ன சாத்து சாத்தினாலும் தலையிட மாட்டோம்..என்று ஒரே ஒரு சொல் சொல்லிவிட்டால் போதும், அப்படியான தலைவர்கள் அலுவலகம் பக்கம் வரவில்லை என்றாலும் கூட நிர்வாகம் சம்பளப் பணத்தை இரண்டு பங்கு போட்டு ஆள் மூலம் வீட்டுக்குக் கொடுத்தனுப்பும்.
தொழிற்சங்கத்தின் வேலை திட்டத்தை நிர்வாகமே தீர்மானிக்கிறது...அதன் பிரதிநிதிகள் அலுவலக நேரத்தில் அமர்ந்து தயாரிக்கும் ஒழுங்கு நடவடிக்கை தாக்கீதுகளை வாங்கிக் கொண்டு வந்து நிற்கும் ஊழியருக்கு சங்க பிரதிநிதி எப்போது உட்கார்ந்து பதில் தயாரிப்பாராம்...அவருக்கு வழிகாட்டுதல் தர எப்போது ஆலோசனை கலப்பாராம்...அவரை பாதுகாக்கத் தேவையான வேலைகளை எப்போது செய்வாராம்...வேலை நேரத்தில் கொஞ்சம் இருக்கையிலிருந்து வெளியே போய் யாருடனாவது பேச நேரிட்டாலும், அல்லது யாரையாவது பார்த்துவிட்டு தாமதமாக வந்தாலும் அதற்கு ஒரு குற்றச் சாட்டு. சரி, விடுப்பில் போய் தொழிற்சங்கப் பொறுப்புகளை கவனித்து விட்டு வந்தாலும், அதிக நாள் விடுப்பு என்று அதற்கு வேறொரு குற்றச் சாட்டு...இந்த இரண்டும் தானே மாதவராஜ் மீது இப்போது நிறுத்தப் பட்டிருப்பது...
பாண்டியன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கம் நீண்ட போராட்ட பாரம்பரிய மிக்க அமைப்பு. எண்பதுகளில் அது பிறப்பெடுத்ததே போராட்டத்தில் தான். அக்கினி குஞ்சு என்பது அந்தச் சங்கம் நடத்திய பத்திரிகையின் பெயர். எதிர்ப்புணர்ச்சி வற்றாத இடத்தில் போர்க்குரல் ஒழித்துக் கொண்டே இருப்பது தவிர்க்க முடியாதது. பழி வாங்குதல், ஊதியம் மறுத்தல் போன்றவற்றால் எல்லாம் அடக்கி விட முடியாத பெரிய படை என்பது அந்த நிர்வாகத்திற்கும் தெரியும். சராசரி வயது அதிகமாகிக் கொண்டிருப்பது, மூத்த ஊழியர்கள் பணி ஒய்வு, புதிய தாராளமய காலத்தில் வேலையில் சேரும் இளைய தலைமுறை என்ற சூழலில் இதெல்லாம் போராட்ட சிந்தனைக்கு அப்பாற்பட்ட உலகம் என்ற அதீத நம்பிக்கையில் நிர்வாகம் இருக்கிறது போலும் நிலைமைகள் அதற்கு மாறானவை என்பதை இந்த போராட்டமும் நிர்வாகத்திற்குக் கற்றுக் கொடுக்கும்.
நிர்வாகத்திற்கு தெரியாது என்பதல்ல, தொழிலாளிகள் அடங்கிவிட்டார்களா என்று அவ்வப்பொழுது சோதனை செய்து பார்த்துக் கொள்வதும், தொழிற்சங்கம் சோர்ந்து போகிறதா என்று தட்டிப் பார்த்துக் கொள்வதும் அதன் பிறவிக் குணம். விழுந்தாலும் எழுந்திருந்து போராடி முன்னேறிக் கொண்டே இருப்பது தொழிலாளி வர்க்க குணாம்சம்.
இறுதி வெற்றி நமதாக இருக்கட்டும்.
எழுத்தாளர் தோழர் ஜா மாதவராஜ் அவர்கள் பக்கத்தில் தோழமையோடும் உறுதியோடும் நின்று நாமும் கலகக் குரல் எழுப்புகிறோம், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் இந்த அபத்தமான குற்றச் சாட்டுக்களுக்கு எதிராக -
எஸ் வி வேணுகோபாலன்
தோழர்களே!
திட்டமிட்டபடி இன்று மாலை, 5 மணிக்கு பாண்டியன் கிராம வங்கித் தலைமையலுவலகத்தில் நம் தோழர்கள் திரள ஆரம்பித்தனர். தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் நோக்கத்துடன், தோழர்.மாதவராஜ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சார்ஜ் ஷீட்டை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களின் ஆவேசக்குரல்கள் எழுந்தன.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு PGBEA தலைவர் தோழர். போஸ்பாண்டியன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் துவக்கி வைத்தார். தோழர்கள் பிச்சைமுத்து, அண்டோ கால்பர்ட், கிருஷ்ணன், மாதவராஜ், நரேன், சோலைமாணிக்கம் ஆகியோர் நம் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தும், நிர்வாகத்தை கடுமையாகச் சாடியும் பேசினர். ‘இது தோழர்.மாதவராஜ் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல, பாண்டியன் கிராம வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்’ என்பதே அனைவரின் கருத்துக்களின் அடிநாதமாயிருந்தது.
சார்ஜ் ஷீட்டை முற்றிலும் விலக்கிக்கொண்டு, நிர்வாகம் தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை நமது இயக்கம் தொடரும் எனவும், மாநில, தேசீய அளவில் இப்பிரச்சினையை கொண்டு சென்று தீர்வு காணும் வரை ஓயமாட்டோம் என்பதே அனைவரின் அறைகூவலாக இருந்தது.
ஆர்ப்பாட்டத்தின் காட்சிகளை இங்கே காணலாம்!
(படிக்கத்தவறாதீர்கள்!
1) “கேள்விகளை நீங்கள் கேட்கக்கூடாது, நாங்கள்தான் கேட்போம்” - AIVDமுதுநிலைமேலாளரின் ஆணவப்பேச்சு குறித்து நம் வலைத்தளத்தில் 5.1.2013 சனிக்கிழமையன்று ஒரு அலசல்.
2) PGBயில் ஆபிஸராய் இருந்த தோழர்.ஜாய் கிளைமண்ட், ஸ்டேட் பாங்க்கில் கிளரிக்கல் பதவிக்காக ஏன் Resign செய்தார்? என கேள்வியை முன்வைத்து நம் வலைத்தளத்தில் 6.1.2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு உண்மைக்கதை! )

It is obvious that a proactive union will face such attacks from the capitalistic management. But they don't know that these attacks are the manure for the workers movement and we will grow stronger. We shall make them realize the truth and succumb before the angry protests of us. Comrade Madhavaraj, the said truth Is going to be established through the chargecsheet given to you. PGBEU extends the solidarity and support for the protests.
ReplyDeleteஅறிவிக்கப்பட்ட 2 கட்டுரைகளும் எங்கே? படிக்க ஆவலாய் உள்ளேன்.
ReplyDeleteதோழர், முதல் கட்டுரையை நேற்றே வெளியிட்டு விட்டோமே!
Deleteலிங்க் இதோ: http://www.pgbea.net/2013/01/pgb_5.html