3.1.13

PGB நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கை!



இன்று பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்  PGBEA தலைவர் தோழர். மாதவராஜிற்கு சார்ஜ் ஷீட் கொடுத்துள்ளது. இது அவருக்கு வழங்கப்படும்  10 வது சார்ஜ் ஷீட்.

தலைமையலுவலகத்தில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது, ACD டிபார்ட்மெண்ட்டில்   டெஸ்பாட்ச் நடைபெற விடாமல் தடுத்ததாக 1985ல் முதல் சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டது.

1992ல்  சாத்தூர் கிளையில் பணிபுரிந்த காலத்தில்,  வேலை பார்க்காமல் ஊதியம் பெற்றதாக  அன்றைக்கு PGBEAவின் தலைவராக இருந்த தோழர் வேலாயுதம் அவர்களுக்கும், பொதுச்செயலாளராக இருந்த தோழர்.மாதவராஜ் அவர்களுக்கும் சார்ஜ் ஷீட் வழங்கப்பட்டது.

1995ல் சேர்மன் சேம்பரில் நுழைந்து கோஷமிட்டதாகவும், சேர்மனை தாக்க முயன்றதாகவும் சங்க நிர்வாகிகள் தோழர்கள் கிருஷ்ணகுமார், சோலைமாணிக்கம், காமராஜ், மாதவராஜ் ஆகியோருக்கு சார்ஜ்ஷீட் கொடுக்கப்பட்டது.

2003ல் திருநெல்வேலியில் நடைபெற்ற மேனேஜர்ஸ் மீட்டிங்கில் அத்துமீறி நுழைந்து கலகம் செய்ததாகவும், பொதுமேலாளர் நரசிம்மன் அவர்களுடன் தகராறு செய்ததாகவும்  சங்க நிர்வாகிகள் தோழர்கள்  சோலைமாணிக்கம், போஸ்பாண்டியன், செல்வகுமார் திலகராஜ், மாதவராஜ், சங்கர் ஆகியோருக்கு சார்ஜ் ஷீட் வழங்கப்பட்டது.

2010ல், அனுமதிக்கப்பட்ட லீவைத்தாண்டி அதிகமாக லீவு எடுத்த காரணத்திற்காக தோழர்கள் சோலைமாணிக்கம், மாதவராஜ் ஆகியோருக்கு சார்ஜ் ஷீட் வழங்கப்பட்டது.

இதுதவிர- 1986, 1988, 2001, 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களில் கலந்துகொண்டதற்கு முறையே 4 சார்ஜ் ஷீட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று வழங்கப்பட்டுள்ள சார்ஜ் ஷீட்டில்- இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.

1) 1.8.2012, 2.8.2012, 3.8.2012, 4.8.12, 6.8.2012, 10.8.2012, 11.8.2012 ஆகிய  நாட்களில் மாதவராஜ் வங்கிக்கு குறித்த நேரத்தில் வங்கிக்கு வரவில்லையென்றும், குறித்த நேரத்துக்கு முன்பாகவே வங்கியை விட்டு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

2) 2010 ஜனவரி முதல், 2012 நவம்பருக்குள் மேலும் 80  நாட்கள் லீவில் மாதவராஜ் சென்றிருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக சாத்தூர் கிளைக்கு வந்த திருவாளர் மாரியப்பன், குறிப்பிட்ட நாட்களில். ‘கண் கொத்தி பாம்பாக’ இருந்து ‘வேலை மெனக்கெட்டு’, மாதவராஜ் எப்போது வருகிறார், எப்போது போகிறார் என தான் வந்த ’வேலையை’ கண்ணும் கருத்துமாக செய்திருக்கிறார். தான் இன்ஸ்பெக்‌ஷன் போகிற கிளைகளில் தற்காலிக ஊழியர்களிடம் கம்ப்யூட்டர் ஸ்டேட்மெண்டுகளும், புள்ளிவிபரங்களும் வாங்கிக்கொண்டு, தற்காலிக ஊழியர்கள் கிளைகளில் பணிபுரிவதை இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட்டில் குறிப்பிட மறுக்கும் இந்த நியாயவான்களின் மறுபக்கத்தை நாம் விரைவில் அம்பலப்படுத்துவோம். (இந்த மாரியப்பன் கொடுத்த பொய்யான ரிப்போர்ட்டினால் தோழர்.ஜெயக்கொடி நான்காண்டு காலம் சஸ்பென்ஷனில் இருக்க வேண்டி இருந்தது.) காலமெல்லாம் நிர்வாகத்துக்கு விசுவாசமாகவும், அடிமைகளாகவும் தங்களை வரித்துக்கொண்டு இப்படியெல்லாம் எழுதுவது  மாரியப்பன் போன்றவர்களுக்கு ஒழுக்கம். நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி,  அதனை சரிசெய்ய எதிர்த்து இயக்கம் நடத்துவதுதான் நமக்கு ஒழுக்கம். அந்தக் குறிப்பிட்ட நாட்களில், சங்க வேலைகளை பார்த்துக்கொண்டே தோழர்.மாதவராஜ் முழுமையாக கிளைகளில் பணியாற்றி இருக்கிறார் என்பதுதான் உண்மை. அதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன.

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு வணிக வங்கியில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு special leave கொடுக்கப்படுகிறது. Duty Relief  நடைமுறையில் இருக்கிறது. அங்கு தொழிற்சங்கத் தலைவர்களை எந்த நிர்வாகமும்  இப்படியெல்லாம் கேட்க முடியாது. ஏன், பல கிராம வங்கிகளிலும் இது எழுதப்படாத விதியாக இருக்கிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் அல்லது அனுமதிக்கும் ஒரு நாகரீகமான நிர்வாகங்கள் அங்கு இருக்கின்றன.

நமக்கு அப்படி வாய்க்கவில்லை எப்போதும். Duty Relief கிடையாது. Special Leave கிடையாது. சரி, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக, நாம் நமது ஊதியத்தை இழந்து, LLPயில் சென்றால் அதையும் அனுமதிக்க முடியாது என்று நிர்வாகம் சார்ஜி ஷீட் செய்கிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளை முற்றிலுமாக முடக்குவதைத்தாண்டி வேறு என்ன அர்த்தம் இதற்கு இருக்க முடியும். நேரம், காலம் தெரியாமல், வீடு வாசல் செல்லாமல், விடுமுறை என்று பார்க்காமல், சங்க நடவடிக்கைகளுக்காக பணிபுரியும் நம் சங்கத் தலைவர்களை பழிவாங்குவதைத்தாண்டி வேறு என்ன அர்த்தம் இதற்கு இருக்க முடியும்?

இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தாண்டி, வேறு எந்தக் குற்றச்சாட்டையும் நிர்வாகத்தால் நம்மீது சுமத்த முடியவில்லை என்பதை நாம் பெருமையோடு பார்க்கிறோம். அதேநேரம்  தொழிற்சங்க நிர்வாகிகள் மீது இந்த நிர்வாகத்திற்கு  இருக்கும் வன்மத்தையும், பகையையும் அடையாளம் காண்கிறோம். எத்தனை  குற்றச்சாட்டுகள் இதுபோல சுமத்தப்பட்டபோதும்,  நமது தொழிற்சங்க நடவடிக்கைகள் இவைகளால் எல்லாம் ஒருபோதும் கரைந்தோ, காணாமலோ போகவில்லை- போகவும் போகாது என்பதை நெஞ்சு நிமிர்த்தி சொல்கிறோம். இதுதான் நமக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

தோழர்கள் சோலைமாணிக்கம் அவர்களுக்கும், மாதவராஜ் அவர்களுக்கும் 2005ல் இருந்து  இன்கிரிமெண்ட் கொடுக்கப்படவில்லை. Leave regularise  செய்யப்படவில்லை.  நமது PGBEA தலைவர் தோழர்.சோலைமாணிக்கம் அவர்கள் வரும் 2013 நவம்பரில் ரிடையர் ஆக இருக்கிறார். அதிக நாள் லீவு எடுத்ததற்காக சார்ஜ் ஷீட் கொடுத்து அவரது பணி நிறைவு காலத்தை சிதைக்க நிர்வாகம் முயற்சி செய்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது.

நிர்வாகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக, ஒழுங்கற்ற அதன் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக பெரும் திரளாக அணி திரள்வோம்.  நமது இயக்கத்தின் அடுத்த அத்தியாயம் பிறக்கிறது.

நாளை, 4.1.2013 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு மாலை 5 மணிக்கு PGBEA, PGBOU சங்கங்களின் கண்டன ஆர்ப்பாட்டம்.

நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கையை தோலுரிப்போம்.
இந்த நிர்வாகத்துக்கு எதிரான ஒரு பெரும் கலகத்தை நிகழ்த்த ஆயத்தமாவோம்!

கலகம் செய்யாமல் நியாயம் பிறக்காது!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!