7.3.13

Training to officers by PGBOU on 3.3.2013

இன்று நிலவும் பணிநெருக்கடிகளுக்கு இடையே நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், வங்கிப்பணியை செம்மையாக்கிக் கொள்ளவும் PGBOU சார்பில், அலுவலர்களுக்கென்று ஒரு பிரத்யேக பயிற்சி முகாம் நடத்துவது என ஒரு
திட்டம் சில காலமாகவே இருந்து வந்தது. அது 3.3.2013 அன்று மதுரையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மதுரை ரெஸிடென்ஸி ஓட்டலில், முற்றிலும் குளிர்பதனம் செய்யப்பட்ட ஹாலில், அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


தோழர்.சங்கரலிங்கம் (GS, PGBOU) அனைவரையும் வரவேற்றார். தோழர்.போஸ் பாண்டியன் (President - PGBOU) தலைமை தாங்கினார்.


தோழர்கள் தெய்வநாயகம் (கிளை மேலாளர் - கோவில்பட்டி) ‘வங்கிப்பணி நடவடிக்கைகள் - இன்று’ என்னும் தலைப்பிலும், தோழர்.மாதவராஜ் (President - PGBEA) ‘தொழிற்சங்கமே பலம் - என்றும்” என்னும் தலைப்பிலும், தோழர்.கண்ணன் (கிளை மேலாளர் - தி.டவுண்) “CBS சூழல் ஒரு ஆய்வு” என்னும் தலைப்பிலும், தோழர்.பார்த்தசாரதி (கிளை மேலாளர் - மேலசெவல்) “வங்கியில் ஒழுங்கு நடவடிக்கைகள் - ஒரு பார்வை” என்னும் தலைப்பிலும், தோழர்.என்.டி.கோபாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற மண்டல மேலாளர்), “கடன் வழங்கலாம் - கவனமுடன்” என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் சந்தேகங்கள், விவாதங்கள் என பயிற்சிமுகாம் மிகுந்த உயிரோட்டமாக இருந்தது.


அதிலிருந்து சில காட்சிகள்:


தோழர்.போஸ்பாண்டியனின் தலைமையுரை

பார்வையாளர்கள்...

தோழர்.தெய்வநாயகம்.....

பார்வையாளர்கள்...

பார்வையாளர்கள்...

தோழர்.மாதவராஜ்.....

பார்வையாளர்கள்...

தோழர்.பார்த்தசாரதி

மேடையில்....

பார்வையாளர்கள்...

பார்வையாளர்கள்...

பார்வையாளர்கள்...

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!