தலைமையலுவலகத்தின் முன்பாக தோழர்.முகர்ஜியின் மறைவையொட்டி ஒரு எளிய இரங்கல் கூட்டம் நம்மால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏபரல் 1ம் தேதி மாலையில், வங்கியின் ஆண்டுக்கணக்கை ஆராய்கிற அந்த முக்கியமான நேரத்திலும் வங்கியின் சேர்மன் திரு.சேவியர் திலகராஜ் அவர்களும், பொதுமேலேளார்கள் திரு.ராமநாதன் மற்றும் ராமசுப்பு அவர்களும் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நமது சங்கத்தின் தோழர்களோடு PGBOA, PGBWU, PGB SC/ST welfare Association மற்றும் BEFI, TNGEA விலிருந்தும் தோழர்கள் வந்து கலந்து கொண்டனர்.
PGBOU தலைவர் தோழர்.போஸ்பாண்டியன் இரங்கல் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தி, தோழர்.முகர்ஜி ஆற்றிய பணிகளையும், அவரது தனித்தன்மையையும் நினைவு கூர்ந்தார். வங்கியின் சேர்மன், பொதுமேலாளர்கள், PAD SM தோழர்.சுரேஷ் குமார், PGBOA vice president தோழர்.மாணிக்க வாசகம், PGB SC/ST Welvare Association பொதுச்செயலாளர் தோழர்.ராஜேந்திர சோழன், PGBWU பொதுச்செயலாளர் தோழர்.பாலாஜி பாலகிருஷணன், AIRRBEA TN தலைவர் தோழர்.பிச்சைமுத்து ஆகியோர் தோழர்.முகர்ஜியை போற்றி தங்கள் அஞ்சலியை செலுத்தினர். PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ் நிறைவுரையாற்றினார். தலைமையலுவலகத்தின் வாயிலிலிருந்து, கலெக்டர் ஆபிஸ் வளாகத்தின் வாயில் வரை ஊர்வலமாக தோழர்கள் சென்றனர்.
“தோழர்.முகர்ஜி விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவோம். அவரது நினைவுகளை ஏந்தி பயணத்தைத் தொடருவோம்” என தோழர்.போஸ்பாண்டியன் அழுத்தமாகச் சொல்லிய வார்த்தைகளே
இனி நமது எதிர்காலம்.
ரெட் சல்யூட் காம்ரேட், திலிப் குமார் முகர்ஜி!
மகத்தான தலைவர்!
மலர் தூவி அஞ்சலி!
வந்திருந்த தோழர்கள்!
தலைமை தாங்கிய தோழர்.போஸ் பாண்டியன்
தோழர்கள்
PGB சேர்மன் திரு.சேவியர் திலகராஜ்
தோழர்கள்
தோழர்கள்
பொதுமேலாளர் திரு.ராமநாதன்
பொதுமேலாளர் திரு.ராமசுப்பு
PAD SM தோழர்.சுரேஷ்குமார்
வங்கியின் உயரதிகாரிகள் தோழர்களோடு
PGBOA உதவித்தலைவர் தோழர்.மாணிக்க வாசகம்
PGB SC/ST Welfare Association பொதுச்செயலாளர் தோழர்.ராஜேந்திர சோழன்
தோழர்கள்
PGBWU பொதுச்செயலாளர் தோழர்.பாலாஜி
AIRRBEA TN த்லைவர் தோழர்.பிச்சைமுத்து
PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ்
தோழர்கள்
தோழர்கள்
ஊர்வலம்
ஊர்வலம்
ஊர்வலம்
Red Salute to Com.D.K.Mukherjee!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!