பாண்டியன் கிராம வங்கியில்,2013ம் வருடத்திற்கான புதியபணி நியமனத்திற்குரிய நேர்முகத்தேர்வு (Interview) மே மாதம் 16ம் தேதி ஆரம்பித்து, மே 22ம் தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது,
இந்த ஆறு நாட்களும் நாம், தலைமையலுவலகத்திற்கு சென்று, இண்டர்வியூவுக்கு வந்தவர்களை வரவேற்று, உபசரித்து, வாழ்த்தி அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறோம்.
இண்டர்வியூவுக்கு வந்த புதிய நண்பர்களிடம், நமது வங்கி குறித்தும், இங்கு அவர்களுக்கு அற்புதமான எதிர்காலம் இருப்பதையும் எடுத்துரைத்து, அவர்கள் இங்கேயே பணிபுரிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தோம். நமது வங்கி, பொதுத்துறை வங்கியாய் இருப்பதால், இங்கு பணிபுரிகிறவர்கள் 60 வயது வரை பணிபுரியக்கூடிய பாதுகாப்பு இருப்பதையும் தெளிவுபடுத்தினோம். இண்டர்வியூவில் பதற்றமில்லாமல் நிதானமாக கேள்விகளுக்கு பதிலளித்து, வெற்றி பெற வாழ்த்தி அனுப்பினோம்.
இண்டர்வியூக்கு அழைக்கப்பட்டதில், ஓரளவுக்குத்தான் வந்திருந்தார்கள். 126 காலியிடங்கள் உள்ள Office Assistant பதவிக்கு 201 பேரே கலந்துகொண்டனர். 50 காலிடங்கள் உள்ள scele I Officer பதவிக்கு 49 பேரே கலந்துகொண்டு இருக்கின்றனர். அதுபோல Scale II Officer பதவிக்கு மூன்று பேரும், Scale III Officer பதவிக்கு ஒருவரும் இண்டர்வியூவில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
மே மாதம் 22, 23 தேதிகளுக்குள், புதிய பணி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் லிஸ்ட் இறுதி செய்யப்பட்டு, 24.5.2013 அன்று நடக்க விருக்கும் போர்டு மீட்டிங்கிற்குப் பிறகு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக 24.5.2013 அன்று பிற்பகல் அல்லது மாலையில், பாண்டிய கிராம வங்கியில் புதிதாக பணிக்கு சேரவிருப்பவர்களின் லிஸ்ட் அறிவிக்கப்படும் என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில், புதியவர்கள் பணிக்குச் சேர்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
நம் இளைய தலைமுறையை, நம் PGB குடும்பத்தின் புதிய சொந்தங்களை வரவேற்கத் தயாராவோம்!
பாண்டியன் கிராம வங்கியில் Recruitment Results 24.5.2013 அன்று வெளியாகும் என்று நிர்வாகத்தரப்பிலிருந்துதான் சொல்லப்பட்டது. ஆனால் நாளை 25.5.2013 காலைதான் வெளியாகும் என பொதுமேலாளர் சொல்லியிருக்கிறார். பொறுத்தருளுங்கள்!
ReplyDeletereally sir????????
Deleteநம்பமுடியாமல்தான் நிலைமை இருக்கிறது. என்றைக்கு, எந்த நேரத்தில், ரிசல்ட் வெளியிடப்படும் என்பதை சரியாக Bank website (www.pandyangramabank.in)ல் PGB நிர்வாகம் தெரிவித்து, அதுபோல தெரிவித்தால், இண்டர்வியூக்கு வந்தவர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் இணையம் மூலமாக அறிந்துகொள்ள முடியும். நேற்று பூராவும், தொடர்ந்து இணையம் வந்து, ரிசல்ட் வந்திருக்கிறதா என திரும்ப திரும்ப பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
DeleteWhen will you publish the result sir?
Deleteநிர்வாகம்தான் ரிசல்டை publish பண்ண வேண்டும்.
Deleteresult published?
ReplyDeleteஇண்டர்வியூவில் செலக்ட் ஆனவர்களுக்கு, ‘you are provisionaly selected' என்று நிர்வாகத்தரப்பிலிருந்து இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
ReplyDeleteஅவர்களுக்குரிய அப்பாயிண்ட் மெயிண்ட் ஆர்டரும், தபால் மூலம் அனுப்பப்படுவதாகக் கேள்விப்படுகிறோம்.
தேர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
தேர்வுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletePandyan Grama Bank published the results in its website. We reproduce the same in our website.
ReplyDeletethis is the link:
http://www.pgbea.net/2013/05/pandyan-grama-bank-recrutiment-results.html
தேர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!