ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். நாம்.
அந்த நிறுவனம் குறித்தும், அதில் நமது வேலை குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. தெரிந்து கொண்டவைகளில் மேலும் தெளிவு பெறுவது நம்மை கூர்மை படுத்துகிறது.
குறிப்பிட்ட வேலையில் நமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக மட்டும் இதனை நாம் சொல்லவில்லை. நம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும்தான் சொல்கிறோம்.
கிளைகளில் குவியும் வேலைப்பளுவுக்கு ஏற்ற வகையில், பெரும்பாலும் அங்கு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இருப்பதில்லை. ஆனால் நேரம், காலம், விதிகளை பறக்கவிட்டு, வங்கியின் வணிகத்துக்காக எதாவது செய்தாக வேண்டிய இக்கட்டில் நம்மை நிறுத்துகிறது நிர்வாகம்.
இந்த இடத்தில்தான் தவறுகள் நிகழ்கின்றன. விதிகள் மீறப்படுகின்றன. நமது உரிமைகளையும், சலுகைகளையும் இழக்க வேண்டி இருக்கிறது. சமயங்களில் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டிய சூழல் உருவாகிறது.
நம்மை தற்காத்துக் கொள்வதற்காக, PGBEAவும், PGBOUவும் இணைந்து புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
"KNOW YOUR WORK
KNOW YOUR RIGHT"
என்பதுதான் அந்த புத்தகம். நம்மை நமக்குப் புரிய வைக்கும் ஒரு எளிய முயற்சியே இது.
புதிய தலைமுறை நம் வங்கியில் காலடி எடுத்து வைத்துக் கொண்டு இருக்கும் சூழலில், இந்த புத்தகம் அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
Our Salary and allowances
Our Leave facilities
Promotion guidelines
Important circulars on Staff benefits
Neccessary forms and formats for Staff loans and benefits
DOs and DONTs for Clerks
DOs and DONTs for officers
Tips for cashiers
Features for identifying bank notes of Rs.1000, Rs.500 and Rs.100
என நம் அன்றாடப் பணிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த புத்தகம். இந்த புத்தகத்தை தோழர்.மாதவராஜ் (President , PGBEA) தொகுத்திருக்கிறார்.
ஒரு நிறுவனத்தில் ஊழியர்களை பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியதும் தொழிற்சங்கத்தின் கடமையாகிறது. அதனை PGBEAவும், PGBOUவும் மிகச் சரியாக செய்து வருகின்றன என்பதற்கான அடையாளமே இந்த புத்தகம்.
ஜூலை 6, 7 தேதிகளில் மதுரையில் நடக்க இருக்கும், நமது பொதுக்குழுவில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது. இப்போது புதிதாக நமது வங்கியில் இணைந்து கொண்டு இருக்கும் ஆபிசர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு நல்ல அறிமுகமாக, இந்த புத்தகம் கொடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!