8.6.13

புதிய Office Assistantகளுக்கு சில தகவல்கள்




புதிதாக பணிக்குச் சேரவிருக்கும் Office Assistantகளில் சிலர், தங்களுக்கு இன்னும் நிர்வாகத்திடமிருந்து கடிதம் வரவில்லையே என்று இ-மெயில்களில் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.


Office Assistant களுக்கு 4 batchகளாக  Training  தலைமையலுவலகத்தில் வைத்து கொடுக்கப் போவதாக தெரிவித்திருந்தோம். அதுகுறித்த விபரங்கள்.


Batch
Record verification
Training at Head office
Date of joining in Branch
First
9.6.2013
10, 11, 12.6.2013
13.6.2013
Second
12.6.2013
13,14,15.6.2013
17.6.2013
Third
16.6.2013
17,18,19.6.2013
20.6.2013
Fourth
19.6.2013
20,21,22.6.2013
24.6.2013


Seniority அடிப்படையில் இந்த batchகள் தீர்மானிக்கப்படுகின்றன.


முதல் இரண்டு  batchல் வருகிறவர்களுக்கு ஏற்கனவே  நிர்வாகத்திலிருந்து அவர்களுக்குரிய Record verification  மற்றும், Training குறித்த தகவல்களோடு கடிதங்கள் அனுப்பப்பட்டு விட்டதாய் சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு விரைவில் அனுப்பபப்பட்டு விடும்.


கடிதங்கள் வராதவர்கள், பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட தேதிகளில் வரமுடியாதவர்கள் / சிறிது கால அவகாசம் வேண்டுபவர்கள் உடனடியாக தலைமையலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். எழுத்து பூர்வமாக விண்ணப்பிக்கவும்.


விளக்கங்கள் ,விப்ரங்கள் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட தோழர்களோடு தொலைபேசியிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்




*Com.J.Mathavaraj
President-PGBEA

Pandyan Grama Bank
Sattur branch
9443866719
*Com.Solai Manickam
GS -PGBEA

Pandyan Grama Bank
Kothadi Branch
9443373135
மேலும் விபரங்கள் வேண்டுபவர்கள், pgbea.vnr@gmail.com க்கு எழுதுங்கள்.


PGBWU  என்னும் சங்கத்தின் அராஜகமும், அநாகரீகமும்!


பாண்டியன் கிராம வங்கியில் புதிதாக இணையவிருக்கும், புதியவர்களை வரவேற்பதும், வாழ்த்துவதும் நல்ல அடையாளம், கலாச்சாரம்.


அவர்கள் இந்த வங்கியைப் பற்றியும், இங்கு பணிபுரிபவர்களையும் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள சிறிது கால அவகாசம் வேண்டும், அதனை நாம்தான் அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும்.


ஆனால், Pandyan Grama Bank Workers Union (PGBWU)  என்னும் சங்கம், புதியவர்களின் வீடுகளுக்குப் போவதும், இப்போதே அவர்களிடம் தங்கள் யூனியனில் சேர்வதற்கு check - off  formகளில் கையெழுத்து வாங்குவதுமாய் இருக்கிறார்கள். இது அநாகரீகமான செயல். இன்னும் அவர்கள் வேலையில் சேரவில்லை. முதன்முதலாக attendanceல் கூட கையெழுத்திடவில்லை .எதுவும் புரியாத அவர்களிடம் இப்படி கையெழுத்து வாங்குவது ஒருவகையான மோசடி. (அதன் தலைவர்களுக்குத்தான் மோசடி என்பது கைவந்த கலையாயிற்றே. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே சென்று படிக்கவும்.)


Pandyan Grama Bank Employees Association (PGBEA)  ஆகிய நாம் அதுபோல வீடுகளுக்கு  மொத்த மொத்தமாக செல்வதும், கையெழுத்து வாங்குவதும் சரியல்ல என்று அந்த பழக்கங்களை தவிர்த்து வருகிறோம். நாமும் தரம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறோம்.


இப்படி வீடுகளுக்குச் செல்வது என்பது போதாது என்று, இப்போது மிரட்டவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.


ஒரு இளைஞர் , நான் கையெழுத்திட முடியாது எனச் சொல்லி இருக்கிறார். “முதன் முதலாய் உங்கள் வீட்டிற்கு வந்ததற்கு நல்ல மரியாதை செய்து விட்டீர்கள். உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி இருக்கிறார்.


இன்னொரு பெண்ணும் அது போல மறுத்திருக்கிறார். “உங்களுக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் posting போடப்படும்” என்று எச்சரித்திருக்கிறார்.


இது அராஜகத்தின் உச்சம். பொதுமக்கள் பணத்தை மோசடி செய்து, வழக்கில் சிக்கி, தன் கதையே கந்தலாகிப் போனவர்களுக்கு இந்த வெற்று மிரட்டலும் கை வந்த கலை போலும்.

புதியவர்கள் இந்த அநாகரீகங்களையும், அராஜகங்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்கள் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கியே வைப்பார்கள்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!