பாண்டியன் கிராம வங்கியில் office Assistant (Clerical cadre) பணிநியமனம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 126 பேருக்காக நடத்தப்பட்ட பணிநியமனத்தில், இதுவரை 102 பேர் பணிக்குச் சேர்ந்துள்ளனர். இன்னும் 24 பேர் waiting listலிருந்து இன்னும் இரண்டு வாரங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
இந்த 102 பேர்களும், நான்கு குழுக்களாக 10.6.2013, 13.6.2012, 17.6.2013, 20.6.2013 ஆகிய தேதிகளில் பணிக்குச் சேர்ந்து, தலைமையலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டு, இப்போது கிளைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கான முதல் மாத ஊதியம் நிர்ணயம் செய்வதில் நிர்வாகம் அநீதி இழைப்பதாக நமக்குத் தெரிய வந்தது. புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய graduation increments-ஐ கொடுக்காமல் ஊதியத்தைக் குறைத்து நிர்ணயம் செய்யப்படஇருப்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.
அதாவது புதிதாக பணிக்குச் சேர்பவர்களின் அடிப்படை ஊதியத்தின் ஆரம்ப நிலை என்பது ரூ.7200/- ஆகும். பணிக்குச் சேர்பவர்கள் graduates-ஆக இருந்தால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே additional-ஆக இரண்டு இன்கிரிமெண்ட்கள் (ரு.400 + ரூ.400) கொடுக்கப்பட்டு, ரூ.8000/- மே அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதுதான் விதி. இதுதான் மீறப்பட்டு இருந்தது. ரூ.8000/- த்தை basic pay யாக விதிக்காமல் ரூ.7200/- அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்திருந்தது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்.
விசாரிக்கும்போது, முன்பு office Assistantகள் பணிநியமனம் செய்யப்படுவதற்கு minimum qualification என்பது SSLC/ +2 பாஸ் செய்திருக்க வேண்டும் என்றிருந்தது. அதனால் graduation முடித்தவர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும் என்றிருந்தது. இப்போதோ minimum qualificatiion என்பதே graduation ஆகிவிட்டது. எனவே, அந்த இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டியதில்லை என்ற வியாக்கியானங்களும், வில்லங்கங்களும் வந்திருப்பதாக சொல்லப்பட்டது.
நாம் நமது அகில இந்தியப் பொதுச்செயலாள தோழர் சையத் கான் அவர்களை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தினோம். அவர், “இது முற்றிலும் அநியாயம். எல்லா இடங்களில் இப்படி தவறாக அர்த்தப்படுத்திக்கொள்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். அவர்களால் எழுகின்ற பிரச்சினை இது. பல கிராம வங்கிகளில் ரூ.8000/-தான் அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது” என்றார்.
BEFI மாநில பொதுச்செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். அவரும் இது முற்றிலும் தவறான நடைமுறை என்றார். “வணிக வங்கியிலும் இப்போது கிளரிக்கலுக்கு minimum qualification என்பது graduation தான். ஆனால் ரூ.8000/- தான் அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
பல்லவன் கிராம வங்கியில் செயல்பட்டு நமது சங்கத் தலைவர்களை தொடர்பு கொண்டோம். “அப்படி இல்லையே. இங்கே 2013ம் வருடம் பணிநியமனம் செய்யப்பட்ட office Assistantகளுக்கு ரூ.8000/- தான் அடிப்படை ஊதியம்” என்றார்கள்.
நாம் 25.6.2013 மாலையில் Chief Manager, PADஅவர்களை சந்தித்து, “இது எப்படி நியாயம்?” என கேட்டோம். “அதற்கான ஆதாரம் இருக்கிறது” என சொல்லி, நபார்டிலிருந்து (அதில் கையொப்பம் கூட இல்லை) தயாரிக்கப்பட்ட ஒரு கடிதத்தைக் காண்பித்தார். அதில் சில கிராம வங்கிகளில் இப்படி graduation increments கொடுப்பதில் வேறு வேறு கருத்துக்கள் எழுந்துள்ளதாகவும், எனவே இதுகுறித்து ஆராய்ந்து முடிவு செய்வதாகவும் சொல்லப்பட்டு இருந்தது.
நாங்கள் கடிதத்தை படிக்க ஆரம்பிக்கும்போதே, Chief manager, PAD -ன் பக்கத்தில் அமர்ந்திருந்த PAD ஆபிசர்களில் ஒருவரான முகம்மது சித்திக்கின் முகத்தில் அப்படி ஒரு இறுமாப்பு கலந்த சிரிப்பு. அதாவது இரண்டு இன்கிரிமெண்ட்களை குறைப்பதற்கான ஆதாரம் ஒன்று அவர்களிடம் இருக்கிறதாம். “என்ன செய்ய முடியும், இப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறதே?” என்று சொன்னால், வருத்தப்பட்டால் அது மனித குணம். ஒருவருக்கு நியாயமாக கொடுக்கப்பட வேண்டியது நிறுத்தப்பட்டதற்கு வருத்தம் கொள்வதுதான் நல்லொழுக்கம். திருவாளர் சித்திக்கின் சிரிப்பு, நமக்கு அருவருப்பாக இருந்தது. நாம் அங்கேயே, “ரொம்ப நல்ல காரியம் நடந்திருக்கிறது. இதற்குப் போயா சிரிக்க வேண்டும் சித்திக்” என கடிந்து கொண்டோம். Chief Manager, PAD எந்த உணர்ச்சியுமில்லாமல் இருந்தார். நாம் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு வங்கியின் சேர்மன் அவர்களை சந்திக்கச் சென்றோம்.
நபார்டின் கடிதத்தில் எந்த இடத்திலும் “graduation increments”-ஐ நிறுத்தச் சொல்லவில்லை. ஆனால் அதுகுறித்து ஒரு சிறு பேச்சு வந்தால் போதாதா நம்மவர்களுக்கு! கை, கால், மூக்கு எல்லாம் வைத்து, பூதாகரப்படுத்தி விட மாட்டார்களா?
வணிக வங்கி ஊழியர்களின் ஊதியமே கிராம வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது நாம் நீதிமன்றங்களின் வாயிலாக நிலை நாட்டிய நீதி. உரிமை. அதனை சிதைக்கிற சதியை பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் செய்து கொண்டு இருக்கிறது என்பதுதான் கசக்கும் உண்மையாக இருக்கிறது.
பல கிராம வங்கிகளில் அமல் படுத்தப்படுகிற graduation incrementsஐ-
வணிக வங்கிகளில் அமல்படுத்தப்படுகிற graduation incrementsஐ-
இதோ இருக்கிற பல்லவன் கிராம வங்கியில் அமல்படுத்தப்படுகிற graduation incrementsஐ-
நமது வங்கியிலேயே 2011ம் ஆண்டு பணிநியமனம் செய்யப்பட்ட office Assistantகளுக்கு அமல்படுத்தப்படுகிற graduation incrementsஐ-
2013ல் பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்க மறுக்கிறது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்.
வங்கியின் சேர்மன் அவர்களை சந்தித்து, இதுகுறித்துப் பேசினோம். நமது தரப்பு நியாயங்களைக் கேட்டுக்கொண்ட சேர்மன், “ஜி.எம் இல்லை. அவர் வந்தவுடன் பேசி முடிவெடுக்கிறேன்” என்றார். நாம் சாதகமான நிலைபாடு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
தோழர்களே!
இந்த நிர்வாகத்தின் செயலால், புதிய தோழர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.800/- மட்டும் இழக்கப் போவதில்லை. அதற்குரிய DA வாக 673.20ம் சேர்த்து மாதா மாதம் ரூ.1473.20 இழக்கப் போகிறார்கள். ஒரு வருடத்திற்கு 17678.40 ருபாயும், மொத்த சர்வீஸில் ஏறத்தாழ 6 லட்சமும் இழக்க இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ( இன்றைய பணத்தின் மதிப்பில் இவ்வளவு வருகிறது. முப்பது வருடத்தில் இந்த மதிப்பு 20 லட்சத்திற்கும் மேல் தாண்டி இருக்கும்.102 பேருக்கு என்று கணக்கிட்டால் எத்தனை கோடி என்பதையும் கணக்கிட்டு கொள்ளுங்கள். இதனைத்தான் நிர்வாகங்கள் லாபம் என்று சொல்லி மார் தட்டிக் கொள்கின்றன. )
எவ்வளவு பெரிய இழப்பிற்கு புதிய தோழர்கள் ஆளாகப் போகிறார்கள் என்பதற்காகவும், எவ்வளவு பெரிய மோசடியை இந்த நிர்வாகம் செய்ய இருக்கிறது என்பதற்காகவும்தான் இந்த புள்ளி விபரங்கள்.
புதிய தோழர்கள் இதற்காக கலங்க வேண்டாம்.
நாங்கள் இருக்கிறோம்.
உங்களுக்காகப் பேச, உங்களுக்காக போராட, இந்த வங்கியில் ஏற்கனவே பணிபுரியும் நாங்கள் இருக்கிறோம்.
இங்கு நீங்களும் நாங்களும் வேறு வேறு இல்லை.
நிச்சயம் உங்களுக்குரிய graduation incrementsஐப் பெற்றுத் தருவோம்.
நம்பிக்கையோடு இருங்கள்.
( Chief manager, PAD திருவாளர் சுரேஷ் செய்யும் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. தனக்குக் கீழ் இருப்பவர்கள் யாரும் அவரைக் கேள்வி கேட்டுவிட்டால், அடுத்த கணம் திருவாளர்.சுரேஷிற்கு கோபம் தலைக்கேறிவிடும்.. உலகின் மிக மோசமான எதிரியாக கேள்வி கேட்டவரை பாவித்து, அவர் மனம் வருந்தும்படி எதாவது செய்ய வேண்டும் என்கிற வெறியோடு சதாநேரமும் சிந்திக்க ஆரம்பிப்பார். நடந்து கொள்வார். குற்றம், குறை காண்பதில் ஒரு அலாதியான சுகமும், துடிப்பும் அவருக்குண்டு. அதன் மூலம் தன் அறிவை உலகுக்கு காட்டிக்கொள்வார். ஆனால் இதற்கு பேர் வக்கிரம் என்பது அவருக்குத் தெரியாமல் போனதுதான் கொடுமை. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் அவர் உதிர்த்த வார்த்தைகளை, அவர் செய்த காரியங்களை எல்லாம் நாமும் சகித்து சகித்துப் பார்த்தோம். திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்கள் அளித்தோம். ஆனால் அவர் திருந்துகிற மாதிரி இல்லை. எனவே அவரைத் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாகி இருக்கிறோம். அதன் முதல் பகுதி நாளை வெளியாகும்....)
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!