29.6.13

Drought Loan to Staff members in PGB


இந்த வருடம் கடுமையான வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டு இருந்தது. வறட்சி நிவாரணக் கடன் பல நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வந்தது. கமர்ஷியல் வங்கிகளிலும் சென்ற மாதத்தில் அமல்படுத்தப்பட்டது. நாமும் நமது நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி வந்தோம்.

25.6.2012 அன்று சேர்மன் அவர்களிடம் Drought Loan குறித்து பேசினோம். ஏற்கனவே அதற்கான ஏர்பாடுகள் நிர்வாகத்தரப்பில் நடந்து வருவதாகவும், மிக விரைவில் Drought Loan  வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதன்படி, இன்று Drought Loanக்கான சர்க்குலர் தலைமையலுவலகத்திலிருந்து கிளைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

கடன் தொகை:

(i) ஆபிசர்களுக்கு ரூ.75000/-
(ii) கிளரிக்கலுக்கு ரூ.50000/-
(iii) மெசஞ்சர்களுக்கு ரூ.30000/-

தவணைக்காலம்:

60 மாதங்கள்.

வட்டி விகிதம்:
9%

மிக விரைவாக, Drought Loanக்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம்!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!