கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டு Office Noteல் சென்ற நிதியமைச்சரும், இப்போதைய ஜனாதிபதியுமான திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் கையெழுத்திட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. (21.6.2012 அன்று இச்செய்தியை நமது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.)
பிறகு, அதை அடிப்படையாக வைத்து, நிதியமைச்சகம் நபார்டு தலைமையில் கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஒரு பென்ஷன் திட்டத்தை வரையறுக்குமாறு பணித்தது.
அந்த modaltiesல் நிதியமைச்சகத்துக்கும், நபார்டுக்கும் சில முரண்பாடுகள் எழுந்தன. நமது அகில இந்தியத் தலைமை தொடர்ந்து நபார்டு மற்றும் நிதியமைச்சக உயரக அதிகாரிகளையும் சந்தித்து பென்ஷன் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. (இந்தச் செய்திகளை அவ்வப்போது pension updates என நாம் நமது இணையதளத்தில் வெளியிட்டு வந்திருக்கிறோம்.)
இறுதியாக ஒரு model pension Scheme வரையறுக்கப்பட்டது. அதை நமது அகில இந்தியப் பொதுச்செயலாளராயிருந்த தோழர், மறைந்த மகத்தான தலைவர் தோழர்.திலிப் குமார் முகர்ஜி வெளியிட்டார். (15.1.2013 அன்று அதனை நமது இணையதளத்திலும் வெளியிட்டு இருந்தோம்.) கிராம வங்கி ஊழியர்களின் நீண்ட கால பிரச்சினை ஒரு நல்ல முடிவை நெருங்கியிருப்பதாக தேசம் முழுவதும் உள்ள கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், பென்ஷன் திட்டம் பிப்ரவரி, 2013 முதல் அமல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டது. பல்வேறு ஊகங்களும், வதந்திகளும், தகவல்களும் வெளியாக ஆரம்பித்தன. அவநம்பிக்கை விதைக்கப்பட்டது.
AIRRBEA மட்டுமே, நிதியமைச்சகத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளினால், தாமதம் அடைகிறது என்று சொல்லியது. நம்பிக்கைகளை தக்க வைத்தது.
அதுதான் உண்மையாகி இருக்கிறது. உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, அது நிலுவையில் இருக்கும்போது பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தலாமா என்னும் கேள்விகள், அதுகுறித்த சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகள் என கடந்த சில மாதங்கள், கடந்திருக்கின்றன. அவை குறித்த முக்கிய ஆவணங்கள் RTI ACT மூலம் கிடைத்திருக்கின்றன. (தோழர்.பசவராஜ் அவர்கள்தாம் RTI மூலம் கேல்விகள் எழுப்பியவர். இவர்தான் இதற்கு முன்னரும் RTI மூலம் நிதியமைச்சர் கையெழுத்திட்ட Office Note-ஐ பெற்றவர்.) அவைகளை நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.சையத் கான் நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவைகளை இங்கு வெளியிடுகிறோம்.
இந்த நிலையில்தான் உச்சநீதி மன்றத்தில், அரசு கிராம வங்கி ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டத்தை ஜூலை 9ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறது. தொடர்ந்து ஜூலை 12ம் தேதி வழக்கு ஹியரிங்குக்கு வருகிறது.
நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பு விரைவில் கிடைக்கும்.
ஏனென்றால், நிதியமைச்சகமோ, சட்ட அமைச்சகமோ, கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டத்தை வழங்க மறுப்பதாக இந்த ஆவணங்களில் எங்கும் குறிப்பிடவில்லை.
நம்பிக்கை கொள்வோம். நல்ல செய்தி பெறுவோம்!!

(நிதியமைச்சகம் 14.2.2013 அன்று, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகள்/கருத்துக்கள் கேட்டு எழுதிய ஆவணம்.)
( இதற்கு முன்னர் பென்ஷன் குறித்த வழக்குகள் தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் கருத்துக்கள் அறியப்பட்டனவா என 25.2.2013 அன்று எழுப்பிய, கேள்வி அடங்கிய ஆவணம்)
(எப்போதெல்லாம் சட்ட அமைச்சகத்தின் கருத்துக்கள் கேட்கப்பட்டன என்பதற்கான பட்டியல் 7.3.2013 அன்று அனுப்பப்படுகிறது.)
(சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது,
சட்ட அமைச்சகம் கருத்துக்கள் கூற முடியாது என்கிறது.
அதற்கான 8.4.2013 தேதியிட்ட ஆவணம்)
Thanks to : Com.H.Basavaraj
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!