5.7.13

மாநாட்டு அரங்கிற்கு வழித்தடம்


இன்னும் ஒருநாள்தான் இருக்கிறது.

இந்நேரம் கிளைகளுக்கு நமது இரு சங்கங்களிலிருந்து இன்விடேஷன்கள் வந்திருக்கும்.

மதுரையில், காமராஜர் சாலையில், கணேஷ் தியேட்டர் அருகில்-
“மேனகா ராமலிங்கம் திருமண மஹால்” என மாநாடு நடைபெறும் இடம் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பல தோழர்கள், தொலை பேசி மூலம்- மாநாட்டு அரங்கிற்கு வரும் வழி குறித்து விசாரிக்கிறார்கள். மாநாடு வருகிற தோழர்களுக்கு  அதுகுறித்த விபரங்களைத் தருகிறோம்.

மாநாடு நடக்கும் மஹால், ‘கீழ சந்தைப் பேட்டை’ என்னும் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து-
4, 15, 15A, 32ம் நம்பர் பஸ்கள் இந்தத் தடத்தில் செல்கின்றன.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிறுத்தத்திலிருந்து-
3ம் நமபர் பஸ் இந்தத் தட்த்தில் செல்கிறது.

தூத்துக்குடி, இராமநாதபுரத்திலிருந்து வருகிற தோழர்கள் விரகனூர் சுற்றுச் சாலையில் இறங்கி-
4, 15, 15A, 32ம் நம்பர் பஸ்களில் வரலாம்

வாருங்கள்!


1 comment:

Comrades! Please share your views here!