8.7.13

PGBEA, PGBOU மாநாடுகள்- 2013


மேடையில் தன் விரல் உயர்த்தி ஒரு இயக்கத்தின் துடிப்பாக தோழர்.முகர்ஜி நின்று கொண்டு இருந்தார்.  தோழர்கள் மாநாட்டு அரங்கிற்குள் நுழைந்துகொண்டு இருக்க, ஒருவரையொருவர் நலம் விசாரித்து,  தேனீர் அருந்தி, அங்கங்கு பேசிக்கொண்டு இருந்தனர்.

சனிக்கிழமை சாயங்காலம், கொடிகள், பேனர்கள் என அலங்கரிக்க மாநாட்டின் அரங்கிற்குள் நுழைந்த கணத்திலிருந்து ஒவ்வொரு தருணத்தையும்  துளித் துளியாய் சேகரித்து, நினைவு படுத்தி பார்க்கும்போது உற்சாகமும், நம்பிக்கையும் நம்மை ஆட்கொள்கின்றன.

மாநாட்டில் மறைந்த மகத்தான தலைவர் தோழர்.முகர்ஜி அவர்கள் குறித்த ஒரு படக் கண்காட்சி  வைக்கப்பட்டு இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் முகர்ஜி, நம்மை பார்த்துக் கொண்டு இருப்பதாக உணர்வு ஏற்பட்டது.

AIRRBEA- TN தலைவர், கொடியேற்றி வைக்க, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, ஜூலை 6ம் தேதி குறிப்பிட்ட தோழர்களோடு மாநாடு துவங்கியது. ஐ.ஓ.பியில் இருக்கிற, ஒரு நேர்மையான, எளிமையான ச்ங்கத்தின் தலைவர் என- IOBSF தலைவர்  தோழர்.ஜீ.பாலச்சந்திரனை மாநாட்டை துவக்கிவைத்து பேச அழைத்த போது மாநாடு ஆரவாரித்தது.

இரவு உணவுக்கு கலைந்து, அடுத்த நாள் மாநாட்டு நிகழ்வுகளுக்கு தயாரானோம்.

காலையிலேயே, கல்கத்தாவிலிருந்து நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்.சையத் கான் வந்துவிட்டார். சிறப்பு பேச்சாளர்கள் தோழர்கள். சி.பி.கிருஷ்ணன் (பொதுச்செயலாளர் -BEFI,TN), எஸ்.வி.வேணுகோபால் (IBEA-TN) அவர்களும் சிறிது நேரத்தில் வந்தனர். தொலைதூரங்களில் இருந்து நம் அருமைத்தோழர்கள் வந்து கொண்டே இருந்தனர். அந்த பெரிய ஹால் முழுவதும் நம் தோழர்களாய் இருந்தனர். நம் சங்க மாநாடுகளில், முதன் முறையாக நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் வந்திருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு பணிக்குச் சேர்ந்த தோழர்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். நமது வங்கியின் இரு பொது மேலாளர்களும் வந்து வாழ்த்தினர். மாநாடு களை கட்டியிருந்தது.  மேடைகளில் தலைவர்களின் பேச்சை  அமைதியாகவும், கைதட்டி ஆமோதித்தும், அவ்வபோது கோஷங்கள் எழுப்பி உயிரோட்டம் கொண்டதாய் சிறப்பித்தனர் நம் தோழர்கள்.

மதிய உணவுக்கு பிறகு இரு சங்கங்களின் பிரதிநிதிகள் மாநாடு தனித்தனியாக நடைபெற்றன.  பொதுச்செயலாளர் அறிக்கைகள், பொருளாளர் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அடுத்து- இரண்டு சங்கங்களின் புதிய செயற்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் - செயற்குழு

1. தோழர். சங்கர சீனிவாசன், உப்பத்தூர் - தலைவர்
2.   சோலைமாணிக்கம், கொத்தடி - உதவித்தலைவர்
3. சுப்பிரமணியன், பழையபேட்டை      -
4. சங்கர், சங்கரலிங்கபுரம்         -
5. மாதவராஜ், சாத்தூர்                 - பொதுச்செயலாளர்
6. அருண் பிரகாஷ் சிங், வி.எம்.சத்திரம் - இணைப் பொதுச் செயலாளர்
7. அருளானந்தம், பொட்டகவயல் - துணைப் பொதுச்செயலாளர்
8. வரலட்சுமி, எட்டையபுரம்                 -  
9. சந்தான செல்வம், கீழக்கரை        -
10. சக்திவேல், தலைமையலுவலகம் - பொருளாளர்
11. சங்கரக்குமார்                         - உதவிப் பொருளாளர்
12. சோமசுந்தரம்                         - செயற்குழு உறுப்பினர்
13. நாசர், அடைக்கலப்பட்டினம்         -
14. மகரபூஷணம், சிவந்திப்பட்டி         -
15. வைரவன், அன்னவாசல்         -
16. ராஜ்குமார், காரியாப்பட்டி                 -
17. முனியசாமி, இராமநாதபுரம்         -
18. பாலசுப்பிரமணியன், பழங்காநத்தம் -
19.` சோபியா ஜோஸ்மின் மேரி, சிவகங்கை -
20. சாந்தி, அரசரடி                  -
21. சொர்ண சங்கரி, கமுதி                  -
22. கோபால் சுப்பிரமணியன், எஸ்.வி.கரை -
23. ராஜா கார்த்திகேயன், கன்னிவாடி -
24. சதீஷ், பழைய காயல்                 -


பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன் - செயற்குழு

1. தோழர். சாமுவேல் ஜோதிக்குமார், திருப்பத்தூர் - தலைவர்
2.   போஸ்.பாண்டியன், கல்குறிச்சி - உதவித்தலைவர்
3. லூர்து ஆரோக்கியரஜ், துவரங்குறிச்சி -
4. சங்கரலிங்கம், விருதுநகர்         - பொதுச்செயலாலர்
5. டி.கிருஷ்ணன், திருப்புவனம் - இணைப் பொதுச் செயலாளர்
6. பிச்சைமுத்து, ராயவரம் - இணைப் பொதுச்செயலாளர்
7. பரதன், தலைமையலுவலகம் - பொருளாளர்
8. நடராஜன், தி.டவுண்           - உதவிப் பொருளாளர்
9. சண்முகநாதன், ஆலங்குளம் - செயற்குழு உறுப்பினர்
10. ராஜேந்திரன், இடைகாட்டூர் -
11. காமராஜ், இராமநாதபுரம்          -
12. சிவகாமி, எட்டையபுரம் -
13. அறிவுடை நம்பி, மங்கை நல்லூர் -
14. ரஜிதா,                         -
15. மகாராஜன், காரைக்குடி -

மாநாட்டின் காட்சிகள் சிலவற்றை இங்கு வெளியிடுகிறோம். மாநாட்டில் தலைவர்களின் உரைகள் மற்றும் விரிவான செய்திகளை சுற்றறிக்கையில் வெளியிடுகிறோம்.









































1 comment:

  1. சுட்டிய ஒற்றை விரலின் ஆக்ரோஷம் நம்மில் பற்றிப்படர்ந்ததாய்/
    ea ou புதிய செயற்குழு உறுப்பினர் அனவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Comrades! Please share your views here!