அவர்கள் அனைவரையும் தலைமையலுவலகத்திற்கு வரச்சொல்லி, Record verification செய்தபிறகு, பணிக்குச் சேர அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
Record verification என்பதை, புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் நிர்வாகத்திடம் கொடுத்திருந்த ஜெராக்ஸ் நகல்களை, அதன் ஒரிஜனல் சான்றிதழ்களோடு verify செய்வது என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அத்தோடு original certificateகளை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இதுவரை இதுதான் வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது.
ஒருவேளை மேற்கொண்டு குறிப்பிட்ட சான்றிதழில் எதேனும் சந்தேகங்களோ, குழப்பங்களோ இருப்பின் அந்த ஜெராக்ஸ் நகலையே சம்பந்தப்பட்ட துறைக்கு/ அதிகாரிக்கு அனுப்பி verify செய்துகொள்ளலாம். அதற்கு original certificate தேவை இல்லை.
ஆனால், இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக புதிதாக பணிக்குச் சேர்ந்த அனைவரிடமும், மேற்கொண்டு verify செய்ய வேண்டி இருப்பதாகவும், அதுவரை original certificate -ஐத் திருப்பித்தர முடியாது என சொல்லி இருக்கிறது நிர்வாகம். இது முற்றிலும் தவறான நடவடிக்கை. லாயர்களிடம் விசாரித்தபோது “It is a bad practice", என்றும், “it is against fundamental right" என்றும் சொல்கிறார்கள்.
இதில் பெருத்த அநியாயம் என்னவென்றால், இந்த original cerificateகளை வாங்கி வைத்துக்கொண்ட நிர்வாகம், அதற்கான acknowledgementஐக்கூட புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கவில்லை. இதுதான் இவர்களிடம் காணப்படும் ஒழுங்கும், நாகரீகமும்!
எப்போது verification முடியும், எப்போது இந்த original cerificatesகிடைக்கும் என்று எந்த திட்டவட்டமான பதிலும் நிர்வாகத்தரப்பில் இல்லை.
பாண்டியன் கிராம வங்கி ஒரு ஒரு பொதுத்துறை நிறுவனம். இங்கு original certificate களை கொடுக்காமல் வைத்துக்கொள்வதற்கு ‘புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களை’ bonded labour ஆக நடத்த முயல்கிறது என்பதுதான் சட்டரீதியான அர்த்தமாகும்.
இந்த நிர்வாகம் செய்யும் குளறுபடிகளுக்கும், மோசடிகளுக்கும் வர வர அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள். எங்கே தங்கள் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என இயல்பாக பயம் கொண்டு இருப்பார்கள். அதையே சாக்காக வைத்துக்கொண்டு நிர்வாகம், அவர்களுக்கு குறைவான ஊதியம் ஒரு பக்கம் நிர்ணயிக்கிறது. இன்னொரு பக்கம் original certificateகளை வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. ஆனால் அவர்கள் சார்பாக கேள்வி கேட்கவும், அநியாயங்களைத் தட்டிக் கேட்கவும் இங்கே PGBEA, PGBOU என்னும் சங்கங்கள் இருக்கின்றன.
ஒருவருடைய original certificate என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. தனிப்பட்ட சொத்து. எதன் பொருட்டும் வேறு யாரும் அவைகளை தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள அதிகாரம் கிடையாது. அது கிரிமினல் குற்றம்.
எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, நிர்வாகம் original certificateகளை புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் உடனடியாக திருப்பிக்கொடுக்கும் என நம்புகிறோம்!!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!