1.8.13

12(3) Settlement before ALC: Computer Operator Allowance for 2008 batch Clerks!

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது!

2008ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு- அவர்களது probation periodற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சை அப்போதைய நிர்வாகம் வழங்கவில்லை. தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் நடத்தி, கடிதங்கள் எழுதி, கோரிக்கைகள் வைத்து இயக்கம் நடத்தி வந்தது தோழர்களுக்கு நினைவிருக்கும். லேபர் கமிஷனர் முன்பு தொழில்தாவா ஏற்படுத்தி இருந்தோம். விசாரணைகள் நடந்து, இருதரப்பிலும் வாதங்களும், ஆவணங்களும் முன் வைக்கப்பட்டன.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், ‘பாஸிட்டிவ்வாக முடிக்கலாமே' என லேபர் கமிஷனர் நிர்வாகத்திடம் சொன்னார். தொடர்ந்து நாம் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ‘உத்தேசமாக எவ்வளவு தொகை ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டி இருக்கும்?' என ஒரு worksheet நிர்வாகத்தரப்பில்  தரச் சொன்னார்கள். நாம் கணக்கிட்டு கொடுத்தோம்.  அதன் அடிப்படையில், இப்போது நிர்வாகம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சை கொடுக்க சம்மதித்தது.

இன்று 1.8.2013, மதுரையில் லேபர் கமிஷனர் முன்பு பேச்சுவார்த்தையில் நிர்வாகத்துக்கும் நமக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் லேபர் கமிஷனர் முன்னிலையில் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், 2008ம் வருடம், பணிக்குச் சேர்ந்து, இன்று பணியிலிருக்கும் 43 கிளரிக்கல் தோழர்களுக்கும், அவர்களது probation periodக்கு உண்டான கம்ப்யூட்டர் அலவன்சு வரும் ஆகஸ்ட் மாத ஊதியத்தில் வழங்கப்படும்.

நியாயங்களை புரிந்துகொண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சம்மதித்த நிர்வாகத்திற்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயன் பெறவிருக்கும் 43 தோழர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர்களே...!  PGBEAவுக்கு கிடைத்த வெற்றி இது. தொடர்ந்து, சளைக்காமல் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. ‘நிர்வாகம் ஐ.ஓ.பிக்கு கடிதம் எழுதிவிட்டது. 2008ல் பணிக்குச் சேர்ந்தவர்கள் கம்ப்யூட்டர் அலவன்சு குறித்து கவலைப்படாமல் இருங்கள்' என அருள் வாக்கு சொல்லிவிட்டு, சும்மா இருந்துவிடும் சங்கமல்ல நாம்.

ஒப்பந்தத்தின் நகலை இத்துடன் இணைக்கிறோம்.
(To print or download the settlement click Here:)


2 comments:

  1. நிச்சயம் இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சாதனைதான்.... ஒரு தொழிற்சங்கமானது ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது சர்வ பலம் பொருந்திய அதிகார மையமான நிர்வாகத்திடம் எப்படி போராடி ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

    ஏதோ கண் துடைப்பிற்காக அறிக்கைகள் விடுவதும், பிறகு கோரிக்கைகளை வென்றெடுக்க வழி தெரியாமல் நம்பிக்கையற்ற வார்த்தைகளினால் ஊழியர்களை குழுப்புவதுமாய் PGBWU-வைப் போல் இல்லாமல்... மிகத் தெளிவான திட்டமிடலுடன் ஒரு தொழிற்சங்க இயக்கத்தை மிக வெற்றிகரமாய் முன்னெடுத்த என் அருமை தோழர்களுக்கும், என் போன்றவர்களை உருவாக்கிய எனது” பல்கலைகழகமான” PGBEA-விற்கும் என் மனமார்ந்த வாத்துக்களும்....செவ்வணக்கங்களும்!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழர் அண்டோ. PGBEA ஒரு பல்கலைக்கழகம்தான்.இந்த சொல்லாடல் எவ்வளவு அர்த்தமுள்ளதாய் இருக்கிறது!

      Delete

Comrades! Please share your views here!