3.8.13

பயிலரங்கம் ஒத்திவைக்கப்படுகிறது!

நாளை (4.8.2013)ம் தேதி, புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்காக நாம் பயிலரங்கம் ஒன்று நடத்துவதாக இருந்தது. அதே 4ம் தேதி, நமது பாண்டியன் கிராம வங்கியின் சார்பில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்குபெறும் கிரிக்கெட் விளையாட்டு நடக்க இருப்பதை தெரிவித்து, இந்த ‘பயிலரங்கத்தை’ இன்னொரு தேதியில் நடத்தலாமா என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்து பயிலரங்கம் நடத்தப்படும் தேதி, நேரம் குறித்து விரைவில் PGBEAவிலிருந்து அறிவிப்புகள் வெளியாகும். அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த பயிலரங்கம் குறித்து சுவாரசியமான ஒரு செய்தி:

நாம் எது நடத்தினாலும், போட்டிக்கு உடனடியாக அதுபோல ஒன்றை நடத்துவதை PGBWUஇப்போது வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டுள்ளது. அதுபோல நாம் பயிலரங்கம் நடத்துவது என முடிவு செய்து, புதிய தோழர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைத்திருந்தோம். அவ்வளவுதான்.  சிலிர்த்து எழுந்த PGBWU, அதே 4ம் தேதி தாங்களும் புதிய தோழர்கள் அழைத்து எதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டனர். புதிய தோழர்களை வீடு வீடாக  கார்களில் சென்று சந்தித்து, டிரெய்னிங்கின்போது லாட்ஜ்களில் தங்கவைத்து, உணவு வரை ஏற்பாடு செய்து இதுவரை இரண்டரை லட்சம் செய்திருக்கிறோம்,  பத்தாயிரம் ருபாய்ச் செலவில் பயிலரங்கம் நடத்தி PGBEA அவர்களுக்கு நாலு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என கொந்தளித்தனர்.  ஆனால் அவர்களுக்கு எதாவது தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ‘பயிலரங்கம்’ போல ஒன்றை நடத்த முடியும். இந்தச் சிக்கலில் தவித்தவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்று  'get to-gether' ஒன்று நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனை கேள்விப்பட்ட PGBEA உதவித்தலைவர் தோழர்.சுப்பிரமணியன் (பழைய பேட்டை) அவர்கள், PGBWUவின் தலைவர்களில் ஒருவரைப் பார்த்து இப்படி கேட்டாராம்:

“ஆமாம்ப்பா, நாங்க மெஸஞ்சர் தோழர்களுக்கு பிரமோஷன் கிளாஸ் நடத்துனா, போட்டியா நாங்களும் நடத்துறோம்னு வர்றீங்க. நாங்க புதுசா சேர்ந்தவங்களுக்கு training class  நடத்துனா, போட்டியா நாங்க ‘get together' நடத்துவோம்னு வர்றீங்க. சரி. நாளைக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு ஆர்ப்பாட்டமோ, தர்ணாவோ நாங்க நடத்துவோம். அப்பமும் போட்டிக்கு இப்படி வருவீங்களா?”


இதற்கு என்ன பதில் அவரால் சொல்ல முடியும்?

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!