25.9.13

அஞ்சலி: தோழர்.தங்கவேலு (அக்கநாயக்கன்பட்டி) காலமாகிவிட்டார்!





அக்கநாயக்கன்பட்டி கிளை மேலாளராக பணிபுரிந்து வந்த அருமைத் தோழர். தங்கவேலு அவர்கள் இன்று அதிகாலை காலமாகிவிட்டார்.


பிரியமாகவும், நட்பாகவும் பழகக்கூடிய அந்த அமைதியான மனிதரின் 
நினைவுகள் அலைக்கழிக்கின்றன.அவரது இறுதிச்சடங்கு, திருநெல்வேலி ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்க்குளம் கிராமத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

தோழர்.தங்கவேலு அவர்களின் மறைவிற்கு அஞ்சலியை நமது PGBEAவும், PGBOUவும் செலுத்துகின்றன. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. பிரிவு என்பது ஆறா துயர்தானே?அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆறுதல்கள்.

    ReplyDelete

Comrades! Please share your views here!