2.9.13

PGBEA NEWS : 2.9.2013



Transfers:

Transfer குறித்த பணிகள் இன்னும் நிர்வாகத்தரப்பில் முழுமையடையவில்லை. வங்கியின் சேர்மன்  பூனாவுக்குச் செல்வதால், டிரான்ஸ்பர்கள் 4ம் தேதிக்குப் பிறகுதான் வெளியிடக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. நேற்று பொதுமேலாளரை சந்தித்துப் பேசிய PGBEA தலைவர்கள், தாங்கள் 4ம் தேதி கல்கத்தாவுக்குச் செல்லவிருப்பதால், அதுசமயம் டிரான்ஸ்பர்கள் போட வேண்டாமென்றும், கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்த பிறகு, 10ம் தேதிக்குப் பிறகு டிரான்ஸ்பர்கள் போடலாமே என்று தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். நிர்வாகமும் ஒப்புக்கொண்டு இருக்கிறது. எனவே, ஆபிஸர்கள், கிளர்க்குகள், மெஸஞ்சர்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக, செப்டம்பர் 10ம் தேதிக்குப் பிறகு டிரான்ஸ்பர் ஆர்டர்கள் வெளியிடப்படும்.

Training:

புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு செப்டம்பர்  2ம் தேதி முதல்  3 நாட்கள் தலைமையலுவலகத்தில் வைத்து Training  கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு Regionக்கும் 10 பேர் வீதம் மொத்தம் 40 பேருக்கு Training  கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த Training-ன் போது அவர்களது original certificate அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

Staff Housing Loan and Staff vehicle Loan:

ஸ்பான்ஸர் வங்கிக்கு இணையாக Staff Housing Loan மற்றும்  Staff vehicle Loan வழங்கப்பட வேண்டுமென தொடர்ந்து PGBEAவும், PGBOUவும் வலியுறுத்தி வந்தன. சமீபத்தில் நடந்த போர்டு மீட்டிங்கில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கிளரிக்கல் தோழர்களுக்கு Staff Housing Loan 8 லட்சமும், ஆபிஸர்களுக்கு 12 லட்சமும் வழங்கப்படும். Confirm ஆன அனைவரும் இந்த கடன்களைப் பெற தகுதியுள்ளவராகின்றனர்.

Disciplinary Proceedings:

வரும் காலங்களில், ஒழுங்கு நடவடிக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, வங்கியில் பணிபுரிவர்களிடம் ஒரு அச்சமற்ற மனநிலை உருவாக வழிவகுக்க வேண்டுமென Enquiry Officers, Presenting Officers மீட்டிங்கில் நிர்வாகத்தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையாய் இருக்க வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

Recruitment:

ஒவ்வொரு பதவியிலும் 2013ம் வருடத்திற்கான காலியிடங்கள் அடையாளம் காணப்பட்டு  Board meetingல் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது ஐ.ஓ.பிக்கு அனுப்பபட்டு இருக்கிறது. ஐ.ஓ.பியின் அனுமதி பெற்றவுடன்,  பதிய பணி நியமனத்திற்கான பணிகள் துவங்கப்படும் எனத் தெரிகிறது.

விளையாட்டு:

திருநெல்வேலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் அனுபவத்தை, வங்கியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நிர்வாகம் தீமானித்துள்ளதாக தெரிகிறது. அடுத்து காரைக்குடியில் கிரிக்கெட் போட்டியை ஒட்டி,  deposit campagin மற்றும் Marketingஐயும் இணைத்து நடத்தலாம் என ஆராய்ந்து வருகிறது.

(இனி அவ்வப்போது இதுபோல செய்திகள் வாசிக்கப்படும்.)

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!