3.9.13

EA circular 3/2013 dated 03.09.2013



சுற்றறிக்கை: 3/2013         நாள்: 03.09.2013

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

அமெரிக்க டாலருக்கு இணையான ருபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளையும், இறக்குமதியாளர்களையும் சார்ந்து இந்தியப் பொருளதாரம் இருப்பதன் விளைவே இது. அத்தியாவசியப் பொருட்கள், எண்ணெய், எலக்டிரானிக் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் நிதியமைச்சரோ, "கவலைப்படத் தேவையில்லை. ருபாயின் மதிப்பு உயரும். காத்திருங்கள்" என அருள்வாக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார். மந்திரத்தில் மாங்காய்கள் காய்த்துவிடும் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நாட்டின் இறையாண்மையையும், சுயச்சார்புத் தன்மையையும் பாதுகாக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததை ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தியதையும், ஊடகங்கள் கேலி செய்ததையும் நாடு நினைத்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. இப்போதும் இடதுசாரிக்கட்சிகள் சொல்கின்றன, "ஒரு பொருளாதாரச் சுனாமி நாட்டைத் தாக்க காத்திருக்கிறது" என்று. விழித்துக்கொள்ள வேண்டியதும், தற்காத்துக்கொள்ள வேண்டியதும் உழைக்கும் மக்களாகிய நம் கைகளில் இருக்கிறது.

மாறுதல்கள்:

பணிநியமனம், பதவி உயர்வுகளையொட்டி 2013ம் வருடத்திற்கன பொது மாறுதல்களை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தரப்பில் யார் யாருக்கு எங்கெங்கு மாறுதல்கள் வேண்டும் என லிஸ்ட் கொடுக்கப்பட்டு விட்டது. தொலைதூரங்களில் பணிபுரியும் மெஸஞ்சர்களிலிருந்து கிளர்க்குகளாய் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும், 2008 மற்றும் 2011ம் வருடங்களில் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும், உடல்நலக்குறைவால் சிரமப்படுபவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பேசியிருக்கிறோம். நிர்வாகமும் அவைகளை கணக்கிலெடுத்து சாதகமான மாறுதல்கள் போடுவதாக சொல்லியிருக்கிறது. சேர்மன் பூனாவிலிருந்து திரும்பி வந்த பிறகு, 4ம் தேதிக்குப் பின்னர் டிரான்ஸ்பர்கள் போடுவதாக நிர்வாகம் சொல்லியது. அதுசமயம் நமது EA, OU தலைவர்கள் அகில இந்திய மாநாட்டிற்காக கல்கத்தா செல்லவிருப்பதால், 10ம் தேதிக்குப் பின்னர் டிரான்ஸ்பர்கள் போடுமாறு நாம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

புதிய தோழர்களுக்கான பயிலரங்கம்:

இந்த சுதந்திர தினத்தன்று, திருநெல்வேலியில் பரணி ஓட்டலில் புதிய தோழர்களுக்கான பயிலரங்கம் ஒன்றை நாம் நடத்தினோம். 28 புதிய தோழர்கள் கலந்துகொண்டனர். PGBEA தலைவர் தோழர்.சங்கரசீனிவாசன் தலைமை தாங்கினார். AIRRBEA-TN பொதுச்செயலாளர் தோழர்.சோலை மாணிக்கம் துவக்கி வைத்துப் பேசினார். 2011ம் வருடத்தில் வங்கியில் பணிக்குச் சேர்ந்த தோழர்.சந்தான செல்வம், 2008ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த தோழர். ராஜா கார்த்திகேயன், 2004ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த தோழர்.அருண் பிரகாஷ் சிங், 1988ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த தோழர்.சுகுமார், 1981ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த தோழர்.சோமசுந்தரம் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொருக் காலக்கட்டத்திலும் பணிகளும், பணி நிலைமைகளும், உரிமைகளும் எவ்வாறு இருந்தன என்பதை வரலாற்று ரீதியாகச் சொல்லும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. தொடர்ந்து புதிய தோழர்கள் தங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ளத் துவங்கினர். ஏறத்தாழ கலந்துகொண்ட அனைத்துப் புதிய தோழர்களுமே பேசினார்கள் என்பதுதான் சிறப்பம்சம். ஒரிஜினல் சர்டிபிகேட்களை நிர்வாகம் வாங்கி வைத்துக் கொண்டதற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இரண்டு இன்கிரிமெண்ட்கள் கிடைக்குமா என ஆதங்கப்பட்டனர். கேஷ் பார்ப்பதில் ஏற்படும் சிரமங்களை முன்வைத்தனர். பழுதான பிரிண்டர், கவுண்டிங் மெஷின், ஜெனரேட்டர் குறித்து கவலைப்பட்டனர். இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்துப் பேசிய PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ் "இங்கு எந்தக் கதவுகளும் தானாக திறப்பதில்லை. தட்டினால்தான் திறக்கும். அப்படி தட்டுகிற வேலையே தொழிற்சங்கங்களின் முக்கிய கடமையாகிறது. நமது PGBEA கொஞ்சம் பலமாக தட்டுகிற ஒரு சங்கம்' என முடித்தார். தோழர்.சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார். வந்திருந்த புதிய தோழர்கள் அனைவருமே, இந்த பயிலரங்கம் பலவிதத்திலும் தங்களுக்கு உபயோகமாக இருந்ததை தெரிவித்தனர்.

26.8.2013 அன்று நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை:

நமது சங்கத்தின் செயற்குழு கூடி, கோரிக்கைகளை இறுதிப்படுத்தியிருந்ததை முந்தைய சர்க்குலரில் தெரிவித்திருந்தோம். 26.8.2013 அன்று நாம் இந்தக் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவர்த்தை நடத்தினோம். சில முக்கிய விஷயங்களில் சாதகமான நிலைமைகள் ஏற்பட்டு இருக்கின்றன. நிர்வாகத்தின் அணுகுமுறையை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

1. புதிய தோழர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். நபார்டிலிருந்து 2013ம் வருடம், பிப்ரவரி மாதம் எழுதப்பட்ட கடிதம், அதற்கு முன்பே 2012ம் ஆண்டு ஜுலை மாதத்தில் IBPS முலம் துவங்கப்பட்ட பணிநியமனத்தை எப்படிக் கட்டுப்படுத்தும்? என கேட்டோம். நமது தரப்பில் நியாயமான வாதங்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட நிர்வாகம், சாதகமான முயற்சிகளும், முடிவுகளும் எடுப்பதாக தெரிவித்தது.

2. எட்டாவது இருதரப்பு ஒப்பந்தத்தின் படி Award staffக்கு Transport Allowance ஆக மாதம் ரூ.105 வழங்கப்பட்டு வந்தது. ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தத்தில் இந்த Transport Allowance, 15 வருடம் சர்வீஸ் முடித்தவர்களுக்கு ரூ.275/- ஆகவும், 15 வருடங்களுக்குள் சர்வீஸ் இருப்பவர்களுக்கு ரூ.250  ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் நம் வங்கியில் இந்த அலவன்சு அனைவருக்கும் ரூ.200/-ஆக மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிர்வகத்துடன் பேசினோம். இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளது போல வழங்க ஏற்பாடு செய்வதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதுபோலவே இருதரப்பு ஒப்பந்தப்படி, LFC/LTC-ஐ நமது வங்கியிலும் அமல்படுத்த ஒப்புக்கொண்டது.

3. ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல Housing Loan, Vehicle Loan தரவேண்டும் என நீண்ட நாட்களாய் கோரிக்கை வைத்திருக்கிறோம். கடந்த போர்டு மீட்டிங்கில், ஸ்பான்ஸர் வங்கியிலுள்ளது போல நமது வங்கியிலும் உயர்த்த முடிவெடுத்திருப்பதாக நிர்வாகத்தரப்பில் மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

4. ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல petrol Allowance (மாதம் 15 லிட்டர்) மற்றும் House Maintanence Allowance (மாதம் ரு.1500/-) வழங்க வேண்டும் என பேசினோம். இதுகுறித்து ஸ்பான்ஸர் வங்கியோடு கலந்துகொண்டு முடிவெடுப்பதாக நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது.

5. கிளைகளிலோ, தலைமையலுவலகத்திலோ ஐந்து மணிக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு Overtime allowance வழங்க வேண்டும் என கேட்டோம். கிளரிக்கல்கள் யாரையும் 5 மணிக்கு மேல் பணிபுரியும்படி கட்டாயப்படுத்தவில்லை என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது.

6. 2012, 2013 ஆண்டு இறுதிக் கணக்கையொட்டி, விடுமுறை நாட்களில் கிளைகளுக்கு வந்து பணிசெய்ய சொல்லப்பட்டது. அந்த தினங்களுக்கு உரிய compensatory allowance  வணிக வங்கிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அதனை நம் வங்கியிலும் வழங்க வேண்டும் என கேட்டோம். நிர்வாகம் ஆவன செய்வதாக ஒப்புக்கொண்டு இருக்கிறது.

7. நிரந்தரப்படுத்தப்பட்ட மெஸஞ்சர்களின் சம்பளத்தில் 1:30 வாக, தற்காலிக மெஸஞ்சர்களின் தினசர் ஊதியம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதுகுறித்து ஏற்கனவே நபார்டில் இருந்து வெளியிடப்பட்ட சர்க்குலர்களை சுட்டிக்காட்டினோம். நிர்வாகம் ஆராய்வதாக சொல்லியிருக்கிறது.

8. Local charges குறித்த சர்க்குலர் வெளியிட்டு வருடங்கள் பலவாகின்றன. எனவே அவைகளை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம். நிர்வாகம் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அதுபோலவே, sweeping charges ஐ உயர்த்தவும் பரிசீலனை செய்வதாக சொல்லியிருக்கிறது.

9. புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல்களுக்கு (office Asistants) தலைமையலுவலகத்தில் training கொடுக்கும் தினங்களுக்கு TA மற்றும் Halting allowance கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். நிர்வாகம், இனிவரும் காலங்களில் மதுரையில் வைத்து training கொடுப்பதாக சொல்லியது.

10. பெருமாள்மலை கிளையில் பணிபுரியும் அனைவருக்கும் hill and fuel allowance கொடுக்க வேண்டும் என கடந்த ஒன்றரை வருடங்களாக நிர்வாகம் கேட்டுக் கொண்டு இருந்தோம். அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும், இனி hill and fuel allowance வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

11. இந்த வங்கியில் பணிபுரிபவர்களுக்கு அவரவர் duties and responsibilities குறித்த சர்க்குலர்கள் வெளியிட வேண்டுமென்று விளக்கினோம். நிர்வாகம் இதனை ஒப்புக்கொண்டு இருக்கிறது. 'இது ஒரு பெரிய பணி. கொஞ்சம் காலதாமதமாகலாம் என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.

12. புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களிடம் original certificates வாங்கி வைத்துக்கொண்டு இருப்பதுவும், அவைகளுக்கு முறையான acknowledgement கொடுக்காமல் இருப்பதுவும் சரியில்லாத நடைமுறை என்பதை தெரியப்படுத்தினோம். செப்டம்பர் 2ம் தேதி முதல் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு training  விருதுநகரில் வைத்து கொடுக்க இருப்பதாகவும், அந்த சமயத்தில் நேரில் original certificates திருப்பித் தரப்படும் என நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், இனி புதிதாக பணிக்குச் சேர்பவர்களிடம் Original certificates வாங்கி வைத்துக் கொள்வதற்கு முறையான acknowledgement வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

13. புதிதாக பணிக்குச் சேர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு உடனடியாக identity card வழங்க வேண்டும் என்பதை முன்வைத்தோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டு, அதற்கான வேலைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் வழங்கப்பட்டு விடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

14. ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கும் அடிப்படையான முக்கிய சர்க்குலர்களை தொகுத்து, அவைகளை பிரிண்ட் செய்து கிளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தோம். புதிதாக திறக்கப்படும் கிளைகளுக்கும், புதிதாக பணிக்குச் சேர்பவர்களுக்கும், இந்த சர்க்குலர்கள் மிகவும் பயனுள்ளதாகவும், வழிகாட்டுவதாகவும் அமையும் என்பதையும் சுட்டிக்காட்டினோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

15. கிளைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு என்று பிரத்யேகமாக தனிக் கழிப்பிட வசதி வேண்டும் என்பதை முன்வைத்தோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டு,பெரிய கிளைகளில் இருந்து இந்த ஏற்பாட்டைத் துவங்கி நடைமுறைப்படுத்துவதாக சொல்லியிருக்கிறது.

16. பெண் ஊழியர்களின் பிரச்சினையை பேசுவதற்கும், தீர்த்து வைப்பதற்கும் women cell  செயல்பட வேண்டும் என்பதை தெரியப்படுத்தினோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

17. SC/ST ஊழியர் பிரச்சினைகளை அறியவும், அவைகளை தீர்த்து வைப்பதற்கும் SC/ST cell மீண்டும் செயல்பட வேண்டுமென முன்வைத்தோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டு, நடைமுறைப்படுத்துவதாக சொல்லியிருக்கிறது.

18. ரிப்பேரான, தரமற்ற பிரிண்டர்களை, cash counting machine மற்றும் Fake Note finding machine களை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்படி, கிளைகளில் இருந்து புகார்கள்/ கடிதங்கள் வரும் பட்சத்தில் அவை உடனடியாக கவனிக்கப்பட்டு புதிய மெஷின்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படுவதாக நிர்வாகம் சொல்லியது.

இந்த கோரிக்கைகள் தவிர, 2008ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு கொடுப்பதற்கு கையெழுத்தான 12(3) செட்டில்மெண்ட்டை அமல்படுத்துவது குறித்துப் பேசினோம்.  நிர்வாகம் 12(3) செட்டில்மெண்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள  காலத்துக்குள்  ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்று நிர்வாகத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும்  லீவு எடுத்த சில தோழர்களுக்கு Loss of pay போடப்பட்டு இருப்பதை சரிசெய்யவும்  பேசினோம்.

இந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றினால், ஊழியர்களிடம் ஒரு உற்சாகமான மனநிலை உருவாகும்.

பென்ஷன் வழக்கு நிதி & அகில இந்திய மாநாடு:

AIRRBEA-TN  சர்க்குலர் கிளைகளுக்கு வந்திருக்கும். பென்ஷன் குறித்த வழக்கு முக்கியக் கட்டத்தை நெருங்கி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், பெரும் செலவு நம் அகில இந்திய சங்கத்தின் முன் நிற்கிறது. கிளரிக்கல் தோழர்கள் ரு.400/-ம், மெஸஞ்சர்த் தோழர்கள் ரு.200/-ம் நம் சங்கக் கணக்கிற்கு (விருதுநகர் கிளை, கணக்கு எண் : 5002) அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நமது AIRRBEAவின் அகில இந்திய மாநாடு கல்கத்தாவில் செப்டம்பர் 7,8,9 தேதிகள் நடக்க இருக்கிறது. நமது சங்கத்திலிருந்து 11 தோழர்கள் கலந்து கொள்கின்றனர். தேசமெங்கும் நிறைந்திருக்கும் கிராம வங்கி ஊழியர்கள் வந்து சங்கமிக்கும் மாபெரும் சபை இந்த மாநாடு. அர்த்தமுள்ள உரையாடல்களோடு, ஆரோக்கியமான வழிகாட்டுதல்களோடு இந்த மாநாடு நம்மைப் புதுப்பிக்கும். உற்சாகமான, எழுச்சி மிகுந்த சிந்தனைகளோடும், நினைவுகளோடும் மீண்டும் சந்திப்போம்.

தோழமையுடன்


   
(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர் - PGBEA                       

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!