அருமைத் தோழரே!
வணக்கம்..
நமது அகில
இந்திய சங்கம் AIRRBEAவின் Working Committee Meeting 26.10.2013 அன்று கோழிக்கோட்டில் நடந்தது.
AIRRBEAவின் joint secretary தோழர்.மாதவராஜ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கிராம
வங்கிகளின் எதிர்காலத்தையே சிதைத்து தனியார்மயமாக்கும்
விதமாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் RRBs Act Amendment Bill, 2013 எந்த நேரமும் பராளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம்
என்னும் ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது. இந்த தருணத்தில் கிராம வங்கி ஊழியர்களின்,
அலுவலர்களின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்துவதென முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
கோரிக்கைகள்:
1. Scrap RRBs Act Amendment Bill, 2013 aimed
at privatization of Gramin Banks.
2. Implement Pension Parity and agreement
dated 29-10-1993 in RRBs.
3. Establish State Level Rural Banks, one for
NE States, under NRBI
4. Regularize all Part Time/Casual/Daily Waged workers.
5. Allow participation of Workman/Officers in
the Board of RRBs.
6. Recruit adequate staff, promote staff in
time and effect massive branch expansion.
7. Allow Special Leave to T.U. Leadership at
par with those in Banking Industry.
8. Relax service period for promotion of all
cadres of staff including Office Attendant at par with Banking Industry.
இயக்கங்கள்:
1.
22-11-2013· அன்று தலைமையலுவலகங்களின் முன்பு தர்ணா
2.
29.11.2013 அன்று நபார்டு/ ஸ்பான்ஸர் வங்கிக்கு சங்கங்களின்
சார்பில் டெபுடேஷன்
3.
10-12.2013 டெல்லியில் தர்ணா
4.RRB
Act Amendmentஐ பாராளுமன்றத்தில்
கொண்டு வரும் பட்சத்தில் உடனடியாக Flash Strike.
29.10.2013 அன்று நமது சங்க அலுவலகத்தில்
கூடிய நமது இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும் அகில இந்திய சங்கத்தின் முடிவினை அமல்படுத்துவது
என்றும், இயக்கங்களை வெற்றிகரமாக நடத்துவது என்றும் தீர்மானித்திருக்கின்றன. அதன்படி,
22.11.2013அன்று நமது பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக தர்ணா நடத்துவது
என்று முடிவு செய்து இருக்கின்றன. கோரிக்கைகளையும், இயகங்களையும் விளக்கி நான்கு மையங்களில்
பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதெனவும் திட்டமிடப்பட்டு இருக்கின்றன.
1. 6.11.2013 - இராமநாதபுரம்
2. 9.11.2013 - திருநெல்வேலி
3. 12.11.2013 - காரைக்குடி
4. 16.11.2013 - மதுரை
இக்கூட்டங்களுக்கான அழைப்புகள் பிரத்யேகமாக
தோழர்களுக்குத் தெரிவிக்கப்படும். தோழர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.
நமதி வங்கியில் நிலவும் பிரச்சினைகளும்,
எழுந்துள்ள கோரிக்கைகளும்:
வங்கியில் தொழில் அமைதியைப் பேணும் விதமகவும்,
வங்கியின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளும் விதமகவும் சேர்மன் நம்மோடு பேசுகிறார். அவரது
எண்ணங்கள் புரிகின்றன. ஆனால் நிலைமைகளும், நடக்கும் விஷயங்களும் அதற்கு நேர்மாறாக இருக்கின்றன.
ஊழியர்கள், அலுவலர்களின் மத்தியில் கடும் அதிருப்தியும், மன உளைச்சல்களுமே நாளுக்கு
நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. குறைந்த பட்ச மனிதாபிமானமும், நேர்மைத் திறனும்
அற்ற நிகழ்ச்சிகளும் செய்திகளையுமே தொடர்ந்து கேள்விப்பட வேண்டியிருக்கிறது.
இந்த வங்கியில் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற
பெயரில் தொடரும் நிர்வாக வன்முறைகள் எல்லைகளை மீறிகொண்டு இருகிறது. ஓய்வு பெறுவதற்கு
சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகைகள் அளிக்கப்பட்டு ஓய்வுகால சலுகைகளை இழந்து
வாழ்க்கையே பெரும் அவலமகிப்போனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. சஸ்பென்ஷன்கள்
செய்யப்பட்டு பல மாதங்களாகியும் குற்றப்பத்திரிக்கைகள்
அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் நீள்கிறது. குற்றப்பத்திரிக்கைகள்
அளிக்கப்பட்டு, என்கொயரி நடந்து முடிந்தாலும் உரிய நேரத்தில் findings அளிக்கப்படாமல்
வைத்திருப்பது தொடர்கிறது. findings அளிக்கப்பட்டாலும்,
அதன் மேல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்காமல் இழுத்தடிப்பது வாடிக்கையாகி இருக்கிறது.
அப்படி அளிக்கப்படும் findings பெரும்பாலும்
நேர்மைத்திறனற்று Enquiry Officerகளால் ‘proved' என்றுதான் முடிவு எழுதப்படும். அத்திப் பூத்தாற்போல், நேர்மைத் திறனோடு ஒரு என்கொயரி
ஆபிஸர் இங்கு ‘not proved' என எழுதியிருக்கிறார். ஓய்வு பெற்ற தோழர் MLR மோகன் மீது
நடத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் இப்படி ஒரு நியாயமானத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால், என்கொயரி ஆபிஸரின் findingsஐ தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த குற்றங்கள்
அனைத்தும் 'not proved' என்று
Disciplinary Authority தீர்ப்பினை திருத்தி எழுதுகிறார். அப்படியென்றால் இந்த என்கொயரி
எதற்கு? இவ்வளவு காலக் கொடுமை எதற்கு? இந்தத் தீர்ப்பை அப்போதே கொடுத்து தோழர் MLR.மோகன் அவர்களை தண்டித்திருக்க வேண்டியதுதானே.
தாங்கள் எழுப்பிய குற்றங்கள் எப்படியானாலும் நிருபிக்கப்பட வேண்டும் என்னும் திமிரும்,
ஆணவமும் கொண்ட AIVDயின் பெருமூளைக்கரர்களால்
நியாயங்களும், நீதிகளும் இப்படி தொடர்ந்து கொன்று குவிக்கப்பட்டால் ஊழியர்களும்,
அலுவலர்களும் எப்படி நிம்மதியாக பணிபுரிவார்கள்? வங்கி எப்படி வளரும்?
அடுத்ததாக, ஊழியர்கள் பிரசினைகளில் நிர்வாகம்
கையாளும் மிதமிஞ்சிய கால தாமதம் சகிக்க முடியவில்லை. இங்கு பணிபுரிபவர்களது நலனை ஒரு பொருட்டாகவே இந்த
நிர்வாகம் மதிக்கவில்லை என்றேத் தோன்றுகிறது. கடந்த போர்டு மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்ட
Staff Housing Loan மற்றும் Staff Vehicle
Loan சர்க்குலர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களில் ஏறத்தாழ இன்னும் 20 பேருக்கு ஒரிஜினல் சர்டிபிகேட்கள்
கொடுக்கப்படவில்லை. அதுபோல அவர்களின் graduation increment-ற்கு நாம் சொன்ன வாதங்களின்
அடிப்படையில், நபார்டுக்கு சாதகமான கடிதம் எழுதுவதாகச் சொன்னது. இன்று வரை எழுதப்படவில்லை.
Lightining strike சென்ற 65 தோழர்களுக்கு ஒப்புக்கொண்டபடி இன்னும் leave regularise செய்யப்படவில்லை. பெருமாள்மலை
எனும் ஒரே ஒரு கிளைகு hill and Fuel allowance வழங்கப்படவில்லை. இப்படி எவ்வளவோ இருகின்றன.
அனைத்தையும் கோரிக்கைகளாக முன்வைத்து இயக்கம் நடத்துவது நமது இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும்
முடிவு செய்திருக்கின்றன.
1.Revamping of Administrative Office
2. Time Bound and Honest Disciplinary Actions
3.Two Graduate increments to Newly
recruited Office Asistantsas per Bi-partite settlement
4. Transfer Policy
5. Defining of Duties and
Responsiblities of each cadre
6.Regularise Temporary mesengers
7. Posting Of Officers as per
categaorisation of Branches
8. Regularisation of Leave to all
9.Staff Housing Loan and Staff
Vehicle Loan on par with sponsor Bank
10.Following allowances on par with
sponsor Bank:
a) Transport allowance b) House
Maintanence Allowance c) Petrol Allowance d) Boarding and Lodging Facilities e)
Compensatory Allowance for Working in Holidays f) Hill and Fuel Allowance
11. LFC/LTC on Par with Sponsor Bank
12.Medical Reimbursement as per
settlements in Banking Industry
13. Staff Medical Insurance should be
with Public Sector Insurance Company only
14.Enhancement of Local charges,
Sweeping charges
15.Sanction of Joining Time and
Lumpsum for probationers during Transfers
16. Activating SC/ST Cell and Women
Cell
17. TA to Defence Representatives
18 Compiling of all neccesary Old
circulars for the reference of New Branches and New Staff
19. Replacement of all Old Computers, Printers, Generators,
Counting Machines
20. Seperate Toilets for Women Staff
21. Air conditioning of All Branches
22.Medical Reimbursement to Retired
Staff
23. Repayment of recoveries made from
Retired Staff
24.Auto Credit System of Salary from
Head Office
25. Introduce Technogy updation as
per comercial Banks in handling NRGES accounts
கோஷங்களையும், குரல்களையும் இந்த கோரிக்கைகளுக்காகவும் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டு
இருக்கிறது. தலைமையலுவலகத்தின் முன் நவம்பர் 22ம் தேதி நாம் நடத்த இருக்கிற தர்ணவில்,
அகில இந்திய கோரிக்கைகளோடு இந்த கோரிக்கைகளையும் முன்வைப்பது என தீர்மானித்திருக்கிறோம்.
பாதை தெரிகிறது.....
முன்னேறிச் செல்வோம்...
தோழமையுடன்
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!