13.11.13

PGBEA - PGBOU circular 4/2013 dated 11.11.2013

சுற்றறிக்கை: 4/2013         நாள்: 11.11.2013

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

அகில இந்திய கோரிக்கைகளை முன்வைத்தும், ஸ்தலக் கோரிக்கைகளை முன்வைத்தும், நவம்பர் 22ம் தேதி தலைமையலுவலகம் முன்பாக நடக்க இருக்கும் தர்ணாவை விளக்கியும் மையக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை இராமநாதபுரம், திருநெல்வேலி மையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. தோழர்கள் எழுச்சியோடு கலந்துகொண்டது மட்டுமில்லாமல், நிர்வாகத்தின் மீதான தங்கள் விமர்சனங்களையும், அதிருப்தியையும் தெரிவித்தனர். நமது சங்கம் மிகுந்த பொறுமையை கடைப்பிடிப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அடிக்கடி இதுபோன்ற கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை இயக்கங்களை தொடரவேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்தனர். அடுத்து காரைக்குடி, மதுரை மையங்களில் கூட்டங்கள் நடக்க இருக்கின்றன.

தற்காலிக  ஊழியர்களின் பணிநிரந்தரம் குறித்த வழக்கு:

நமது வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கு நம் சங்கம் 2008ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்பது தோழர்களுக்குத் தெரியும். அவர்களுக்கென்று பிரத்யேகமான மாநாடு, போராட்டங்கள், பேரணி, வழக்கு என நாம் இடைவிடாத முயற்சிகள் செய்து வருகிறோம். இந்த நிலையில் லேபர் கோர்ட்டில் நாம் தொடுத்த தொழில் தாவா failure ஆகியதும், மத்திய அரசின் தொழிலாளர் துறைக்கு அனுப்பப்பட்டதும் ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தோம். இப்போது மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்திலிருந்து சென்னையில் டிரியூப்னலுக்கு விசாரித்து தீர்ப்பினை வழங்க அனுப்பப்பட்டு இருக்கிறது. நமது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள். 12.11.2013 அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. விரைவில் நமது தற்காலிக ஊழியர்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும். நம்பிக்கையோடிருங்கள்.

தோழர்.சோலைமாணிக்கத்திற்கு வழங்கப்பட இருக்கும் தீர்ப்பும்
நமது சங்கத்தின் மீதான தாக்குதலும்:

நமது சங்கத்தில் பொதுச்செயலாளராகவும், அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த தோழர்.சோலைமாணிக்கம் இந்த நவம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கிறார் என்பதை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம்.

அவருக்கு 2010ம் ஆண்டு ஒரு சார்ஜ ஷீட் வழங்கப்பட்டு இருந்தது. அப்போதைய நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்ட வெப்பம் பற்றி இருந்த காலக்கட்டத்தில் இந்த சார்ஜ்ஷீட் வழங்கப்பட்டது. 900 நாட்களுக்கு மேலாக லீவு எடுத்துவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. தோழர்.சோலைமாணிக்கம் இந்த வங்கியில் பணிபுரியும் தொழிலாளர் நலன்களுக்காகவும், அகில இந்திய அளவில் கூட்டங்களில் கலந்து கொண்டதற்காகவும் அதிகமான லீவு எடுத்தார் என்பது இந்த வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும்.

எனவே அந்த சார்ஜ் ஷீட்டை நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதமான நடவடிக்கை என அறிவித்து நாம் அப்போதே நமது எதிர்யுபைத் தெரிவித்தோம். நிர்வாகம் தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், சார்ஜ் ஷீட்டை வாபஸ் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். நிர்வாகத் தலைமை மாறிய பிறகு, ‘என்கொயரி முடித்து வாருங்கள், சுமூகமாக முடித்துக் கொள்ளலாம்' என முந்தைய சேர்மன் அவர்கள் சொன்னார்கள்.

2013 பிப்ரவரியில் என்கொயரி நடந்து முடிந்தது. நிர்வாகத்தரப்பில் வாதங்கள் முன்வைக்க மூன்று மாதங்களுக்கும் மேல் கால அவகாசம் எடுக்கப்பட்டது. நாம் நம் தரப்பில் உடனடியாக வாதங்களை சமர்ப்பித்தோம். பிறகு என்கொயரி ஆபிசர் தனது findingsஐ செப்டம்பர் மாதம்தான் சமர்ப்பித்தார். அந்த findings-ஐ அப்படியே குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனுப்பி கருத்துக்கள் கேட்க வேண்டியதுதான் AIVDயின் பணி. இதற்கு AIVD ஒரு மாதம் தேவையில்லாமல் கால அவகாசம் எடுத்துக்கொண்டது. 18.10.2013 நமக்கு findings கொடுக்கப்பட்டது. நாம் உடனடியாக அதற்கு பதிலளித்தோம். அதன் மீது show cause notice கொடுப்பதற்கும் நாம் இரண்டு முறை சேர்மனிடம் பேச வேண்டி இருந்தது.

இந்த நிலையில், இன்று 11.11.2013 அன்று தோழர் சோலை மாணிக்கம் மீதான குற்றச்சாட்டிற்கு  GM(A) கையெழுத்திட்டு show cause notice  அனுப்பப்பட்டு இருக்கிறது.  அதில் 'உங்களுக்கு ஏன், இரண்டு வருடத்திற்கு  ஒரு stage  Reduce செய்யும்' தண்டனை வழங்கக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த பிறகு Final order  வழங்கப்படும்.

தோழர்களே!

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நாம் எதிர்பாராதது. சுமூகமாக முடித்து விடுவோம் என சொன்ன நிர்வாகத்தின் வார்த்தைகளுக்கு எதிரானது. இந்த வங்கியில் தோழர்.சோலைமாணிக்கத்தை விட அதிகமாக லீவு எடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்காமல், பிரமோஷன் கொடுத்ததும் நடந்திருக்கிறது. அதிகமாக லீவு எடுத்த பலருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் சுமூகமாக நிர்வாகம் முடித்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, முற்றிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவே லீவு எடுத்த தோழர்.சோலை மாணிக்கத்திற்கு வழங்கப்பட இருக்கும் இந்த தண்டனையை நாம் எப்படி புரிந்து கொள்வது? இது நமது தொழிற்சங்கத்தின் மீதான தாக்குதலாகவே கருதுகிறோம். இன்னும்  2006ம் வருடத்திலிருந்து தோழர்.சோலைமாணிக்கத்திற்கு லீவு regularize  செய்யப்படவில்லை. இன்கிரிமெண்ட்டும் வழங்கப்படவில்லை. அதன்பின்னரே Retirement benefitகள் கணக்கிட முடியும்.

எனவே நமது எதிர்ப்பை உடனடியாகத் தெரிவித்து தலைமையலுவலகத்தின் முன்பு, நமது போராட்ங்ககளைத் தொடர வேண்டும் என வேகத்தோடு தோழர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வங்கி சேர்மன் அவர்கள். அமைதி காக்கும்படியும், தோழர்.சோலைமாணிக்கம் மீதான நடவடிக்கையை சுமூகமாக முடித்து விடலாம் என தான் நம்புவதாகவும் சொல்லியிருக்கிறார்.

நாமும் அதனையே விரும்புகிறோம்.

நிர்வாகத்துடன் பேசிவிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்போம். மீண்டும் விரைவில் சந்திப்போம்.


தோழமையுடன்



   
(J.மாதவராஜ்)                                            (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                     பொதுச்செயலாளர் - PGBOU


No comments:

Post a Comment

Comrades! Please share your views here!