பென்ஷன் வந்துவிடும், amalgamation வந்துவிடும், நமது பிரச்சினைகள் பலவும் சுமூகமா தீர்ந்துவிடும் என எதிபார்ர்புகளோடு இது போலவே 2013 ஜனவரி முதல் நாளை வரவேற்றோம். இதோ டிசமபர் 31 வரை அவை நிறைவேறாமலே இருந்து, 2014 ஜனவரி முதல் நாளிலும் முன் நிற்கின்றன. ஆனால் அவைகளை அடைவதற்காக நாம் கழித்த 365 நாட்களும் அனுபவங்களாக நம்மோடு கலந்து விட்டு இருக்கின்றன.
இதுவரை நம்மோடு கூட வந்த பல தோழர்கள், இந்த நாட்களில் பணி ஓய்வு பெற்று இருக்கின்றனர். புதிய தோழர்கள் பலர் நம்மோடு இணைந்து, பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர். வாழ்வின் பாதைகள் இப்படியாக நம்மை அழைத்துச் செல்கின்றன.
நமது பிரச்சினைகளை தீர்க்கிற வல்லமை நமது ஒற்றுமைக்கும், மங்காத போராட்டக்குணத்திற்குமே உண்டு. அந்த நம்பிக்கையோடு 2014ல் நாம் அடியெடுத்து வைப்போம்.
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அனைவருக்குமாய் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete2014 - WILL BE THE YEAR OF SUCCESS FOR PGBEA - PGBOU - BARATHAN
ReplyDeleteOur union should insist our management To make our bank tech-savy.it will reduce the burden of our staff and certainly it will increase the image of bank
ReplyDelete