நம்ப முடியவில்லை. எப்போதும் கலகலப்பும், கணீரென்ற குரலும், களங்கமற்ற நட்போடும், உற்சாகமுமாய் இருந்த அற்புதமான தோழர் பார்த்தாசாரதி உயிருடன் இல்லை என்னும் செய்தி வலிகொண்டதாக இருக்கிறது.
சத்திரப்பட்டி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த தோழர்.பார்த்தசாரதி ராஜபாளையத்தில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். 13.5.2014 அன்று காலையில் தங்கியிருந்த அறைக்கதவை பூட்டிக் கிளம்பி, வங்கிக்குப் புறப்படுகிற வேளையில் அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது. மருத்துவ உதவி ஏற்பாடு செய்வதற்குள் அவர் இறந்துவிட்டதாக தெரிய வருகிறது. அவருக்கு வயது 55.
நமது வங்கிக்கும், நமது சங்கத்துக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மிகப் பெரும் இழப்பு இது. நமது அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர்.பார்த்தசாரதிக்கு சுகர் கிடையாது. பிரஷர் கிடையாது. எந்த நோய்க்கான முகாந்திரமும் கிடையாது. அப்படிப்பட்டவர் திடுமென இறந்து போயிருக்கிறார்.
சத்திரப்பட்டி நமது வங்கியின் பெரிய கிளைகளில் ஒன்று. எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாயிருக்கும். NREGS அக்கவுண்டு வைத்திருப்பவர்கள் வேறு. அப்படியொரு கிளையில் அடிஷனல் ஆபிஸர் கிடையாது. கடந்த ஆறு மாத காலமாக நமது சங்கம் இதுகுறித்து நிர்வாகத்துடன் பேசி வந்தோம். ’அடிஷனல் ஆபிஸர் போடுகிறோம், போடுகிறோம்’ என்று சொன்ன நிர்வாகம் கடைசி வரை போடவில்லை.
நிர்வாகம் இதனை மனிதாபிமானத்துடன் அணுகியிருந்தால், கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி இருந்தால் இன்று தோழர்.பார்த்தசாரதி நம்மோடு இருந்திருப்பார். அவரது மகளுக்கு திருமணம், மகனுக்கு நல்ல கல்வி என அவரது கடமைகளை சிறப்பாக செய்திருப்பார். 80, 90 வயதுக்கும் மேலாக வாழ்ந்திருப்பார்.
கொதிக்கிறது நெஞ்சம்.
அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்/
ReplyDeleteசோகமான முடிவே....
ReplyDelete