நேற்று மாலை வங்கிப்பணி முடித்துவிட்டு வரும்போது, விபத்திற்குள்ளாகியிருக்கிறார். மதுரை அப்பல்லோவில் அவருக்கு தீவீர சிகிச்சையளிக்கப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றங்கள் இல்லாமல் இன்று மாலை அவர் மரணமடைந்து விட்டார்.
1984லிருந்து PGBEAவின் செயற்குழுவில் பங்கேற்று தொடர்ந்து சங்கப்பணி ஆற்றி, பின்னர் PGBOUவின் தலைவராகவும், AIRRBEA-TN தலைவராகவும் பரிணமித்த அற்புதமான தோழர்.
இந்த வங்கியில் நடந்த அனைத்துப் போராட்டங்களிலும், சங்க நடவடிக்கைகளிலும் பங்கேற்ற முன்னணிப் போராளி.
முக்கிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை கையாண்டு, நிர்வாகத்தின் தாக்குதல்களை முறியடித்தவர். முன்னர் SACக்கு கொடுத்த ஊதியத்தை பிடித்தம் செய்ய நிர்வாகம் முனைந்தபோது அதைத் தடுத்து நிறுத்தியதிலிருந்து, சமீபத்தில் புதிய அப்ரைசர்கள் நியமனம் செய்வதை தடுத்து நிறுத்தியது வரை அவரது பணிகள் சங்க வரலாற்றின் மைல்கற்கள்.
ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அமைதியாக காரியமாற்றும் அவரது பண்பு அரிதானது. போற்றுதலுக்குரியது.
எந்த நிலையிலும் தடுமாற்றங்கள் கொள்ளாத, சமரசம் செய்துகொள்ளாத, இடதுசாரிக் கொள்கையில் ஆழமான பிடிப்பு கொண்ட முற்போக்குவாதி.
புத்தகங்களிலும், இணையத்திலும் தொடர்ந்து வாசித்து அறிந்து அதன்மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறவர்.
எளிமையும், இனிமையும் அவரது தனிச்சிறப்பு.
42-பி எல்.எப் தெருவில் இருந்த சங்க அலுவலகத்திலிருந்து நினைவுகள் நீண்ட பயணமாய் அழைத்துச் செல்கின்றன. 24.8.2014 அன்று திருச்சியில் நடந்த AIRRBEA-TN மாநிலக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றது வரை காட்சிகள் அலைக்கழிக்கின்றன. கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
தோழரே!
வாழ்வின் துயரமான, வலிமிகுந்த தருணம் இது!
இருந்த இடம் தெரியாமல் நீங்கள் இருந்தாலும், உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!!
உங்களுக்கு எங்கள் அஞ்சலி!
(நாளை - 14.9.2014 - காலை 10 மணியளவில் காரைக்குடியில் தோழர்.பிச்சைமுத்து அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறும்.)
தோழரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅவரது மறைவு சங்கத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு.காலம் கருணையற்றது.
ReplyDeletemy deep condolence to com pitchamuthu family and his union friends. i pray almighty may his
ReplyDeletesoul rest in eternal peace. BY PS BAGAM.PGB. MARUTHAKULAM NELLAI DIST.
நமது தோழர் kesavan அவர்களையும் இழந்து விட்டோம்
ReplyDelete