கடந்த ஓராண்டுக்கும் மேலே வாய்தா மேல் வாய்தாவாக சுப்ரீம் கோர்ட்டில் இழுத்தடிக்கப்பட்டு வந்த நமது பென்ஷன் வழக்கில், கடந்த ஒரு மாதத்தில் 29.10.2014 , 13.11.2014 , 20.11.2014 ஆகிய தினங்களில் தொடர்ந்து வாதங்கள் நடக்க ஆரம்பித்தன.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் AIRRBEAவோடு நெருக்கமாக இருந்த, ஓய்வுபெற்ற கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் தொடுத்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றதும், அதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரிம் கோர்ட்டில் அப்பீல் செய்ததும்தான், சுப்ரீம் கோர்ட்டில் நடந்துகொண்டு இருக்கும் வழக்கின் மூலம். ஆனால், கர்நாடகா, கேரளா ஹைகோர்ட்டுகளில் AIRRBEAவோடு இணைந்த சங்கங்களும், சுப்ரீம் கோர்ட்டில் நடந்துகொண்டு இருக்கும் வழக்கில், தங்களையும் party யாக சேர்த்துக்கொள்ள மனு போட்டு இருந்தனர். AIRRBOF சங்கமும் தங்களையும் இணைத்துக்கொண்டது. இப்படி பல சங்கங்கள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு இருந்தன.
ஏற்கனவே 29.10.2014 அன்று நடந்த வழக்கில், AIRRBOF சங்கத்தின் வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வத்து இருந்தார். அடுத்து இராஜஸ்தான் ஓய்வு பெற்ற கிராம வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (அவர்களுக்கு வழக்கு நடத்த நிதி தந்ததும் AIRRBEA) வழக்கறிஞர் தனது வாதத்தைத் தொடங்கினார். அன்றைய தினம் அந்த வாதம் முடிவடையவில்லை. 13.11.2014 அன்று நமது வாதங்கள் நடைபெறவில்லை. 201.11.2014 அன்று வாதங்கள் நடைபெற்றன. மீண்டும் இராஜஸ்தான் ஓய்வு பெற்ற கிராம வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வழக்கறிஞர் தனது வாதத்தை அடுக்கினார். அத்தோடு அன்றைய தின வாதங்கள் நிறைவடைந்தன.
இந்த வாதங்களில் கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும், வணிக வங்கியில் இருப்பதைப் போல பென்ஷன் வழங்க வேண்டும் என்பதாகவும், அதற்கு ஆதாரமான NIT Award மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் கோடிட்டு காண்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று (26.11.2014) அன்று நமது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே சௌத் மலபார் கிராம வங்கியின் அதிகாரிகள் சங்கமும், ஊழியர்களும் சங்கமும் இணைந்து தொடுத்த வழக்கு சுப்ர்ம் கோர்ட்டில் இப்போது (After amalgamation of South Malabar Grama Bank and North Malabar Grama bank) கேரளா கிராம வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்காக இணைக்கப்பட்டு இருந்தது. அவ்வழக்கின் சார்பில் மூத்த வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. Hon’ble Mr. Justice Jagdish Singh Kehar மற்றும் Hon’ble Mr. Justice Arun Mishra ஆகியோர் நீதிபதிகளாய் அமர்ந்திருந்தனர்.
நமது வழக்கறிஞர் Mr. Chandler Uday Singh அவர்களின் வாதங்கள் வழக்கின் போக்கையே திசை திருப்புவதாய் இருந்தன. அவரது வாதங்கள் வருமாறு:
”வணிக வங்கியைப் போல கிராம வங்கிகளுக்கும் பென்ஷன் திட்டம் இருக்க வேண்டும் என்பது இப்போது கேள்வியல்ல. அதனை ஏற்கனவே மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டது. மாண்புமிகு நிதியமைச்சர் 20.6.2012-லேயே ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு இருக்கிறார். இதே சுப்ரீம் கோர்ட்டில், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட affadavit-ல் மத்திய அரசு, Pension parity-ஐ principle-ஆக ஏற்றுக்கொண்டு விட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. லாபம் ஈட்டிய கிராம வங்கிகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதும், pension fund-ல் 30 சதவீதத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடுகளாய் நீடிக்கின்றன. இவ்விஷயங்களில் நபார்டின் நிலைபாடும் அரசிலிருந்து வேறுபட்டதாகவே இருந்தது. மேலும் இப்போது அனைத்து கிராம வங்கிகளும் லாபம் ஈட்டும் திறன் கொண்டவைகளாகி விட்டன. இந்த நிலையில், 30 சதவீதத்தை ஊழியர்களும், அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முரண்பாடாக நீடிக்க முடியும், எனவே, அந்த விஷயத்தில் , இந்த நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்.”
மாண்புமிகு நீதிபதிகள், “மத்திய அரசு, பென்ஷனை கொடுக்க வேண்டும் என ஒப்புக்கொண்ட பிறகு, அதுகுறித்து பேச வேண்டியதில்லை. எப்படி கொடுக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை. அதுகுறித்த புள்ளிவிபரங்களுக்குள் இந்த கோர்ட்டு செல்ல விரும்பவில்லை. இந்த வழக்கில் சமப்ந்தப்பட்ட அனைவரும், அதாவது மத்திய அரசும், பெட்டிஷன் போட்ட அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ஒரு பென்ஷன் திட்டத்தை சுமூகமாக வரையறுக்க வேண்டும்” எனச் சொல்லியிருக்கிறார்கள்.
மத்திய அரசின் தராபில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இதனை ஏற்றுக்கொண்டு, பென்ஷன் திட்டத்தை இறுதிப்படுத்த ஆறுமாத அவகாசம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். நமது தரப்பில் அவ்வளவு அவகாசம் தேவையில்லை, இரண்டு மாத அவகாசம் போதும் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது. இறுதியாக நீதிபதிகள் மூன்று மாத அவகாசம் அளித்து இருக்கின்றனர். இரு தரப்பும் உட்கார்ந்து பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதும், மூன்று மாத அவகாசத்திற்குள் முடிக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தோழர்களே!
இது ஒரு முக்கியமான முன்னேற்றம்.
கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டிலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. இனி இவ்விஷயத்தில் அரசு பின் வாங்க முடியாது.
அடுத்தது மூன்று மாத காலத்திற்குள், முடிக்க வேண்டும் என கால வரையறை சொல்லப்பட்டு இருக்கிறது. எனவே அதற்கு மேலும் இழுத்தடிக்க வாய்ப்புகள் குறைவு.
இப்போது அனைத்து கிராம வங்கிகளும் லாபம் ஈட்டுகின்றன. எனவே அனைவருக்கும் பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டு விட்டது.
நிலைமைகளை ஆராயவும், மத்திய அரசுடன் பேசவும் உடனடியாக வரும் டிசமபர் 8ம் தேதி, AIRRBEA தனது core Committee ஐ கூட்டுவதற்கு அறிவிப்பு செய்துள்ளது. அதுதான் நமது AIRRBEA!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!