18.3.15

AIRRBEA TN and Puduvai circular 1/2005 dated 18.3.2015

All India Regional Rural Bank Employees Association 
 -Tamil Nadu & Puduvai
(Affi: AIRRBEA, BEFI-TN)
C.O Colony, Opp : Collectorate, Virudhunagar
----------------------------------------------------------------------------------------------

சுற்றறிக்கை எண்: 1/2015 நாள் : 18.3.2015

அருமைத் தோழர்களே!

வணக்கம்.


மனசாட்சியும், மனிதாபிமானமும் அற்ற ஒரு மத்திய அரசாய், மோடியின் பி.ஜே.பி அரசு தன் சுயரூபத்தை காட்டி வருகிறது. "ஏழைகளுக்கான ஆட்சி" என்று தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு தேர்தலில் வாக்குகளைப் பெற்றவர்கள், இன்று பதவிக்கு வந்ததும் முழுக்க முழுக்க ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள். எல்லோருக்கும் பொதுவாய் இருந்த அனைத்தையும், தனியார் கைகளில் கொடுப்பதில் மூர்க்கத்தனமாய் இருக்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் சட்டம், காப்பீட்டுத் துறையை தனியார் மயமாக்கும் சட்டம் எல்லாம் வேகவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. மறைமுக வரியைக் கூட்டி மேலும் அவர்களின் வருவாயை பறிக்கும் திட்டம் பட்ஜெட்டில் இருக்கிறது. அதே நேரம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது. இவையாவும், இந்த அரசு முழுக்க முழுக்க 'கார்ப்பரேட்களின் அரசு' என்பதையும் 'தொழிலாளர்களுக்கு விரோதமான அரசு' என்பதையும் தெளிவாக்குகிறது. உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய ஒரு முக்கியமான காலக்கட்டம் என்பதை உணர்த்துகிறது.

பாதகங்கள் நிறைந்த புதிய manpower பாலிசி:

2008ம் ஆண்டில் 'தோரட் கமிட்டி' மூலம் அமல்படுத்திய Manpowerபாலிசி குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்தன. கிளைகளில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. AIRRBEA அதை எதிர்த்து போராடியது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 'மித்ரா கமிட்டி' அறிக்கை சமர்ப்பித்த அறிக்கையில் புதிய Manpower policy அதைவிட மோசமாய் இருக்கிறது. ஒரு வருடத்தில் திறக்கப்பட இருக்கும் கிளைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களின் / அலுவலர்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற இருக்கும் ஊழியர்களின்/ ஆபிசர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை முன்கூட்டியே கணக்கிட்டு அவ்வருடத்திற்கு தேவையான manpowerஐ திட்டமிடுவது போன்ற ஒரு சில positiveஆன விஷயங்கள் இருந்தாலும் இந்த Manpower Policyயில் கடுமையாக ஆட்குறைப்பு செய்யும் ஏற்பாடுகள் இருக்கின்றன. நம் உழைப்பைச் சுரண்டும் திட்டங்கள் இருக்கின்றன.

1. முன்பு அனைத்து கிளைகளிலும் நிரந்தர மெஸஞ்சர்கள் இருக்க வேண்டும் என்று இருந்தது. இப்போது 30 கோடி பிசினஸ் வரை உள்ள கிளைகளுக்கு நிரந்தர மெஸஞ்சர்கள் தேவையில்லை. தினக்கூலி அடிப்படையில் அவுட்சோர்சிங் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. முன்பு 6 கோடிக்கு மேல் பிசினஸ் உள்ள கிளைகளுக்கு 2 கிளர்க் என்றிருந்தது. இப்போது 11 கோடி பிசினஸ் இருந்தால்தான் 2 கிளர்க் என வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

3. 50 கோடிக்கு மேல் பிசினஸ் இருந்தால் மூன்று கிளர்க்குகள் என்றிருந்ததை இப்போது 75 கோடிக்கு மேல் பிசினஸ் இருந்தால் மட்டுமே 3 கிளர்க் என வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

4. முன்பு 20 கோடிக்கு மேல் பிசினஸ் உள்ள கிளைகளில் ஒரு scale III, ஒரு scale II, இரண்டு scale I ஆபிசர்கள் இருக்கலாம். இப்போது அதற்கு 30 கோடி பிசினஸ் இருக்க வேண்டும்.

5.முன்பு 50 கோடிக்கு மேல் பிசினஸ் இருந்தால் scale IV ஆபிசர்கள் இருக்க வேண்டும் என்று இருந்தது. இப்போது 75 கோடிக்கு மேல்தான் Scale IV ஆபிசர்கள்.

6.துரிதமான வாடிக்கையாளர் சேவைக்காக Award staff மட்டும் transactionகளை handle செய்யவும், அந்த Transactionகளை பின்னர் ஆபிசர்கள் check செய்யவும் 'Single window concept' அறிமுகமாக்கப்படுகிறது. இது கிராம வங்கிகளைப் பொறுத்த வரையில் பல சிக்கல்களையும், சிரமங்களையும் உருவாக்கும்.

24.2.2015ம் தேதி இவ்வறிக்கை அனைத்து கிராம வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பாலிசியை அந்தந்த கிராம வங்கி Board meetingல் வைத்து உடனடியாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் வருடா வருடம் அடையாளம் காணப்படும் recruitment மற்றும் promotionக்கு உரிய vacancies கணிசமாகக் குறையும். AIRRBEA இந்த புதிய பாலிசியின் பாதகமான அம்சங்களை எதிர்க்கிறது. போராட அழைப்பு விடுத்துள்ளது.

9.3.2015 அகில இந்திய மத்தியக் கமிட்டிக் கூட்டம்:

மார்ச் 9ம் தேதி நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் (Central Committee meeting) நடந்தது. AIRRBEAவின் Joint secretary  தோழர்.மாதவராஜ் (PGBWU), CC மெம்பர்கள் தோழர்.கிருஷ்ணன் (PGBOU),  தோழர்.ஆனந்த் (Pallavan GBEU) ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டனர்.  மத்தியக் கமிட்டி உறுப்பினர்களுக்கு PGBWUவின் தலைவர் தோழர்.பாலசுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். "பாண்டியன் கிராம வங்கியில் இருந்த இரண்டு workmen unionகளான PGBEAவும், PGBWUவும் AIRRBEAவின் தலைமையினை ஏற்று ஒரே சங்கமாக இணைந்திருக்கின்றன. அந்த ஒரே சங்கத்தின் தலைவர் இவர்தான்" என தோழர்.நாகபூஷண்ராவ் விவரித்தபோது, மொத்த மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் ஆரவாரத்த்துடன் பாராட்டினார்கள்.

பென்ஷன், கிராமவங்கிகளை தனியார் மயமாக்கும் RRB amendment act bill, 24.9.2014ல் JCC மீட்டிங்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட compassionate appointment, graduation increment, sabbatical leave to women employees போன்ற கோரிக்கைகள், இன்னும் ஸ்பான்ஸர் வங்கியில் வழங்கப்பட்டு கிராம வங்கிகளில் அமல்படுத்தப்படாத சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பென்ஷன் திட்டத்தை தீர்மானிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று, மத்திய அரசு ஒரு கமிட்டி அமைத்திருப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் இருந்தாலும், 11.03.2015 அன்று சுப்ரீம் கோர்ட் விசாரணையில் முழு விபரங்கள் தெரிய வரும் என சொல்லப்பட்டது.

கிராம வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக இராஜ்ய சபா உறுப்பினர்களிடம் நமது ஆதரவைத் திரட்ட வேண்டுமென்றும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த வேண்டுமென்றும் விவாதிக்கப்பட்டது. இவ்விஷயத்தில் 'Joint Forum of RRB Unions' அமைப்போடு இணைந்து முடிவு செய்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

பென்ஷன், compassionate appointment, graduation increments , உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிரத்யேகமாக போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. புதிய manpower policyயின் சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டன. அதையும் எதிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.


கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து 10.3.2015 டெல்லியில் நமது குரல்கள்:

கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து மார்ச் 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் இயக்கம் நடத்துவது என கிராம வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு (Joint Forum of Gramin Bank Unions) அறைகூவல் விடுத்திருந்தது. நாடு முழுவதும் இருந்து வந்த 600க்கும் மேற்பட்ட தோழர்களோடு, தமிழ்நாட்டில்- பாண்டியன் கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக 22 தோழர்களும், பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன் சார்பில் 3 தோழர்களும், பல்லவன் கிராம வங்கி எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பாக 2 தோழர்களும் கலந்துகொண்டனர்.

JFGBU கூட்டமைப்பின் சார்பில் All India Regional Rural Bank Employees Association (AIRRBEA), All India Gramin Bank Employees Association (AIGBEA), All India Gramin Bank Employees Congress (AIGBEC), National Confederation of RRB Employees (NFRRBE), All India Regional Rural Bank Officers Federation(AIRRBOF), All India Gramin Bank Officers Association(AIGBOA), All India Gramin Bank Officers Congress(AIGBOC) சங்கங்களின் தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் உரைகளில் கிராம வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துக்களை தெளிவுபடுத்தினர். கிராமத்து ஏழை எளிய வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தனர். லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தனியார்கள் நிர்வாகக்குழுவில் இடம் பெறுவதால் பெரும் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

Com Tapan Sen, MP (Rajya Sabha) & General Secretary, CITU, Sri. K Vinod Kumar, MP (Lok Sabha),        Sri. B B Patil, MP (Lok Sabha), Sri. B Soman, MP ((Lok Sabha), Dr. S Venugopal Chary, ex MP and Telengana State Government representative in New Delhi, Com D Raja, MP (Rajya Sabha), Sri. Rapolu Ananda Bhaskar, MP (Rajya Sabha), Com Dr T N Seema, MP (Rajya Sabha), Com M P Achuthan, MP (Rajya Sabha), Sri T Devender Goud, MP (Rajya Sabha), former Minister of United Andhra Pradesh,        Dr. K Keshava Rao, MP (Rajya Sabha), Chairman, Parliamentary Party, TRS ஆகியோர் கலந்துகொண்டு நமது நமக்கு ஆதரவாகப் பேசினார்கள். இராஜ்சபாவில் RRB Amendment Act கொண்டு வரப்படும் பட்சத்தில் கடுமையாக எதிர்ப்போம் என முழங்கினர்.

JFGBU - போராட்ட அறைகூவல்:

உரத்த கோஷங்களோடு போராட்டம் முடிவடைந்த பிறகு, 11.3.2015 அன்று JFGBU தலைவர்கள் கூடி விவாதித்தனர்.  கிராம வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிக்கு எதிரான போராட்டத்தோடு புதிய Manpower policyஐ எதிர்த்தும், இன்னும் கிராம வங்கிகளில் நிறைவேற்றப்படாத சலுகைகளைக் கோரியும் முழுவீச்சோடு போராட்டங்களை நடத்துவது என கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.

கோரிக்கைகள்
We oppose-
1. RRBs Act Amendment Bill, 2014.
2. Imposition of S K Mitra Committee Manpower report unilaterally in RRBs.

We demand-
1.Full implementation of Bipartite Settlements in RRBs including all retiral benefits with retrospective effect.

போராட்டங்கள்:

1. Mass Dharna on 27th March, 2015 in front of Head Office of each RRB.
2. One day token Strike on 28th April, 2015 throughout the RRBs.

தமிழ்நாட்டில், நமது இணைப்புச் சங்கங்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து, முழு வெற்றிகரமாக்க வேண்டும்.

பென்ஷன்:

மத்தியக் கமிட்டிக் கூட்டத்திற்கு பிறகு, 11.3.2015 அன்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஹியரிங் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், மத்திய அரசு 26.11.2014 அன்றைய உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று 2.3.2015 அன்று ஒரு கமிட்டி அமைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்தக் கமிட்டி குறித்த விபரங்கள் வருமாறு:-

Committee:
1. Chairman NABARD - Chairman, 2. CGM (RRB) RBI - Member, 3. GM (RRB) SBI - Member, 4. GM (RRB) PNB - Member, 5. GM (RRB) Bank of Baroda - Member, 6. Chairman Baroda UP Grameena Bank - Member, 7. Chairman Kerala Grameena Bank - Member, 8. Chairman Ellaqui Dehati Bank - Member

The terms of reference of the committee:
1. To assess the feasibility of granting pension to RRB employees.
2. To undertake negotiation with the stake holders of RRBs as per the judgment of Supreme Court.

இந்தக் கமிட்டியின் முதற்கூட்டம் 24.3.2015 அன்று மும்பை தலைமையலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. AIRRBEAகலந்துகொள்கிறது. நம்பிக்கையோடு எதிர்பார்போம்.

தோழமையுடன்



(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!