25.3.15

தோழர் செல்வராஜின் துயரம் துடைப்போம்!


தோழர்.செல்வராஜ் மேலசெவல் கிளையில் கடைநிலை ஊழியராக  வேலை பார்த்து வந்தார்.  2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நமது வங்கியிலிருந்து ரிடையர் ஆனார். 2006ம் ஆண்டிலிருந்து அவரது Leave regularise செய்யப்படவில்லை.

7 ஆண்டுகளாக அவரது லீவை regularise செய்யாமல், அல்லது உரிய விளக்கம் கேட்காமல் இருந்த நிர்வாகம் அவர் ரிடையர் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடுமென Charge sheet கொடுத்தது. அவருக்கு உரிய Retirement Benefitகள் Gratuity  மற்றும் encashment of privilege leave-யெல்லாம் கொடுக்காமல் நிறுத்தியது. அவருக்கு என்கொயரி ஆர்டர் செய்தது. என்கொயரி நடந்து முடிந்த பிறகு retirement benefitகளை கொடுப்பதாக இரக்கமில்லாமல் சொன்னது. நாம் இதனை கண்டித்தோம்.

Gratuity கொடுக்காமல் நிறுத்தி வைப்பது சரியல்ல என வழக்குத் தொடுத்தோம். வழக்கில் தோழர்.செல்வராஜுக்கு gratuity with interest கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. நிர்வாகம் தீர்ப்பினை ஒப்புக் கொள்ளாமல், அப்பீலுக்குச் சென்றது. இதுவும் நிர்வாகத்தின்  இரக்கமற்ற முகத்தின் இன்னொரு கோணம்.

இதற்கிடையில் அவர் மீது நடத்தப்பட்ட என்கொயரி முடிவுக்கு வந்து 30.12.2014ல் அவருக்கு ‘lowering one stage for two years' என தண்டனையை இந்த நிர்வாகம் வழங்கியது. இதற்குப் பிறகாவது தோழர்.செல்வராஜுக்கு retirement benefitகளை நிர்வாகம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், ‘gratuity சம்பந்தமாக அவர் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு முடிந்த பிறகுதான் கொடுக்க முடியும்’ என நிர்வாகம் சொன்னது. எப்பேர்ப்பட்ட நிர்வாகம் இது என்பதை தோழர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நாம் ‘ gratuity குறித்த வழக்கு தானே நிலுவையில் இருக்கிறது. அவருடைய encashment of PL மற்றும் 2006ம் ஆண்டிலிருந்து leave regularise செய்து அவருக்கு வழங்க வேண்டிய இன்கிரிமெண்ட்களை கணக்கிட்டு வரும் arrearsஐ கொடுங்கள் ‘ என்றோம். நிர்வாகம் retirment benefitகளை மொத்தமாகத்தான் கொடுக்க முடியும். அதுதான் வழக்கம்’ என rule பேசியது.

இந்த நிலையில் கடந்த வாரம் தோழர்.செல்வராஜ் HDFC வங்கியில் வாங்கிய லோனை கட்டவில்லை என்று, HDFC வங்கியிலிருந்து அவரது வீட்டை ஜப்தி செய்யப் போவதாக சொல்லியிருக்கிறது. உடனே நாம் நிர்வாகத்தை சந்தித்து, ’encashment of PL மற்றும் 2006ம் ஆண்டிலிருந்து leave regularise செய்து அவருக்கு வழங்க வேண்டிய இன்கிரிமெண்ட்களை கணக்கிட்டு வரும் arrearsஐ கொடுங்கள்’  என வலியுறுத்தினோம். நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாகச் சொன்னது. ஆனால் செய்யவில்லை.

முதாநாள் தோழர்.செல்வராஜ் வீட்டில், HDFC வங்கியிலிருந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தோழர்.கதறிக்கொண்டு நம்மிடம் பேசினார். நாமும் உடனே நிர்வாகத்திடம் பேசி, இந்த நெருக்கடியான நேரத்தில் அவருக்கு கொடுக்க வேண்டிய retirment  benefitகளைக் கொடுத்து உதவுங்கள் என வேண்டினோம். ஆனால் நிர்வாகம் அதையும் கண்டு கொள்வதாயில்லை.

நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளிக்காத நிலையில், நேற்று 24.3.2015 அன்று தோழர்.மாதவராஜ் தலைமையலுவலகத்தில் அமர்ந்து அகிம்சை வழியில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தோழர்.செல்வராஜுக்கு நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என சங்கம் உறுதிபட தெரிவித்தது. தலைமையலுவலகத்தில் சேர்மன் சேம்பரில் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசித்து, தோழர்.செல்வராஜுக்கு encashment of privilege leave கொடுக்க ஏற்பாடு செய்வதாக நிர்வாகம் உறுதியளித்தது. அதன் பின்னர் உண்ணாவிரதம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

திருநெல்வேலியில் வசித்து வரும் தோழர்.செல்வராஜ் அவர்களை உடனடியாக விருதுநகருக்கு வரவழைத்து, அவரிடம்  representation ஒன்றை வாங்கி நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறோம். ஒரிரு நாட்களில் அவருக்குரிய retirment benefitகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

1 comment:

  1. நிர்வாகம் ஒப்புகொண்டபடி, இன்று தோழர் செல்வாரஜ் அவர்களுக்கு ரூ.251006/-ஐ PL surrenerஆக கொடுத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தோழர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

    ReplyDelete

Comrades! Please share your views here!