8.7.2011 அன்று சேர்மனுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இன்று நிர்வாகத் தரப்பில் அமைக்கப்பட்ட, டிரான்ஸ்பர் கமிட்டியுடன் (GM-O, PAD-SM, AIVD-SM) PGBEAவும், PGBOU வும் பேச்சுவார்த்தை நடத்தின. ஏற்கனவே, யார் யாருக்கு, எங்கெங்கு டிரான்ஸ்பர்கள் விரும்புகிறோம் என்பதை பட்டியலிட்டு கொடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் பாதிப்புகளுக்குள்ளான டிரான்ஸ்பர்களை மாற்றித்தர வேண்டும் என நாம் வலியுறுத்தினோம். புதிய பணிநியமனத்தையொட்டி அனைத்தும் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிதாகத் திறக்கப்பட்ட கிளைகளுக்கு, தன் இஷ்டத்திற்கு நம் தோழர்கள் சிலரை டிரான்ஸ்பர் செய்ததை உடனடியாக மாற்றித் தரும்படிக் கேட்டுக்கொண்டோம். ஆள் பற்றாக்குறையினாலும், வேலைப்பளுவினாலும் கிளைகளில் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர் ஊழியர்கள் என்பதை விளக்கினோம். சமீப காலங்களில் PGB ஊழியர்கள் கடுமையான stressக்கு ஆளாகிக்கொண்டு இருப்பதை பல உதாரணங்களோடு சொன்னோம். இவ்வளவு வேதனைகளுடனும், வலியுடனும் வங்கிக்காக பணிபுரியும் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்றோம். நமது தரப்பில் சொல்லப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, சேர்மனுடன் பேசி முடிவெடுப்பதாக டிரான்ஸ்பர் கமிட்டி சொல்லப்பட்டது.
நிர்வாகம், இவ்விஷயத்தில் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, சாதகமான முடிவுகள் எடுக்கும் என நம்புகிறோம். பார்ப்போம்.