கேள்வி:
சென்னை போன்ற பெரு நகரங்களில், சென்று தங்குவதற்கு லாட்ஜ் பில் குறைந்த பட்சம் ரூ.500/- ஆகிறது. ஆனால் நமது வங்கியில் லாட்ஜ் பில் ரூ.375/-தான் தருகிறார்கள். அது போக Halting allowance ஆக ரூ.600/- தருகிறார்கள். இது நிச்சயம் போதாது. இதுதான் வங்கிகளில் ஆபிஸர்களுக்கு halting allowance கொடுக்கும் பொதுவான நடைமுறையா? இதுகுறித்து தெளிவான சர்க்குலர்களும் இல்லை. விளக்கம் அளிக்க முடியுமா?
பதில்:
இதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே நமது வங்கியில் சர்க்குலர்களின் easy referenceக்கு ஏற்பாடு இல்லை. கணிணி மயமான இந்தக் காலத்தில் இதையெல்லாம் எளிதாகச் செய்ய முடியும். நிர்வாகம் அதுகுறித்து கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை.
சரி விஷயத்திற்கு வருவோம். இது நிச்சயம் வங்கிகளில் உள்ள நடைமுறை இல்லை. நம் வங்கியில், 28.10.2010 தேதியிட்டு PAD/37/2010-2011 என்று Revision of other allowances பற்றி ஒரு சர்க்குலர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூட்டத்தோடு கூட்டமாய் halting allowance குறித்து கிளரிக்கல், மெஸஞ்சர், ஆபிஸர்களுக்கு இவ்வளவு இவ்வளவு என்று ஓரிரு வரிகளில் சொல்லப்படுகிறது. அதில் Major A class city, Area I, others என்று பிரிவுகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதுபற்றியும்கூட விளக்கம் இல்லை. லாட்ஜில் தங்குவது பற்றியெல்லாம் சிறுகுறிப்பு கூடக் கிடையாது. Staff welfare குறித்து இவர்கள் காட்டும் அக்கறை இவ்வளவுதான்.
1) (a) Major A class city என்றால், Ahmedabad, Bangalore, Chennai, Delhi,Hyderabad, Kolkata மற்றும் Mumbai ஆகிய நகரங்கள்.
(b) Area I என்றால் 12 லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகை உள்ள நகரங்கள். Agra, Bhopal, Coimbatore, Indore, Jaipur, Kanpur, Kochi, Lucknow, Ludhiana, Madurai, Nagpur, Patna, Pune, Surat, Vadodara, Varanasi, Vizag போன்ற நகரங்கள்.
(a) others என்றால், இவை போக மற்ற அனைத்து நகரங்களும்.
2) இனி- Halting allowance கணக்கிடுவதில் ஒருநாள் என்றால் என்னவென்று பார்ப்போம்.
(a) 8 மணிநேரத்திலிருந்து 24 மணி வரை - ஒருநாள்
(b) 4 மணி நேரத்திலிருந்து 8 மணி வரை - 1/2 நாள்
(c) 4 மணி நேரத்துக்கு குறைவாக என்றால் Halting allowance கிடையாது.
3) (a) Halting allowance கொடுப்பதில் major cityயிலும் இருவகை உணடு. Scale I to Scale III ஆபிஸர்களுக்கு Ahmedabad, Bangalore, Hyderabad நகரங்களுக்கு ரூ.800/-. Chennai, Delhi, kolkotta, Mumbai நகரங்களுக்கு ரூ.1000/-
Scale IV க்கு மேலே ஆபிஸர்களுக்கு Ahmedabad, Bangalore, Hyderabad நகரங்களுக்கு ரூ.1000/-. Chennai, Delhi, kolkotta, Mumbai நகரங்களுக்கு ரூ.1200/-
(b) Area Iல் Scale I to Scale III ஆபிஸர்களுக்கு ரூ. 700/-. Scale IV க்கு மேலே ஆபிஸர்களுக்கு ரூ.800/-
(c) Other Placesல் Scale I to Scale III ஆபிஸர்களுக்கு ரூ. 600/-. Scale IV க்கு மேலே ஆபிஸர்களுக்கு ரூ.700/-
4) லாட்ஜில் தங்கினால் கீழ்க்கண்டவாறு Lodging expenses கொடுக்கப்பட வேண்டும்.
Scale of officer | Major A | Area I | Others |
I | 1500 | 1250 | 1000 |
II and III | 2500 | 1500 | 1300 |
IV and V | 3000 | 2000 | 1800 |
V and VI | 6000 | 3500 | 2500 |
GM | 7000 | 4000 | 3000 |
(a) இதில் லாட்ஜ் பில்லைக் கொடுத்தால் இந்த lodging expenses உடன், மேலே (3 பிரகாரம்) குறிப்பிடப்பட்ட Halting allowance + 1/4th additional halting allowance சேர்த்து கொடுக்கப்பட வேண்டும்.
(b) லாட்ஜ் பில் கொடுக்கப்படாவிட்டால், additional Halting allowance கிடையாது.
(c) இதுபோக லாட்ஜில் Luxury Tax வசூலித்தால் அதுவும் சேர்த்து வழங்கப்பட வேண்டும்.
(d) வங்கியே lodging facility ஏற்பாடு செய்தால், 3/4th Halting allowance வழங்கப்பட வேண்டும்.
(e) வங்கியே boarding facility ஏற்பாடு செய்தால், 1/2 halting allowance வழங்கப்பட வேண்டும்.
(f) வங்கியே lodging and boarding facilities ஏற்பாடு செய்தால் 1/4 halting allowance வழங்கப்பட வேண்டும்.
இதுதான் ஆபிஸர்களுக்கு Halting Allowance வழங்கப்பட வேண்டிய விதிகள். ஆனால் நம் வங்கியில் அரைகுறையாக ஒரு சர்க்குலர் போட்டு, உண்மைகளை மறைத்து, சலுகைகளை குறைக்கிறார்கள்.
(Guidelines issued in IOB can be viewed /downloaded here)
PGBOUவிலிருந்து இதுகுறித்து விரிவாக நிர்வாகத்துடன் பேசி சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கு எதுவும் தானாக நடந்துவிடாது. நாம் மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டுத்தான் பெற வேண்டும். பெறுவோம் தோழர்களே.
(கேள்விகள் கேட்க விரும்புகிறவர்கள் pgbea.vnr@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.)
FEED BACK வழியாய் வந்த கருத்து-
ReplyDelete“The first in the q and a session is exhaustive,informative,useful and a slap on the lackadaissical attitude of the management. carry on!”
Thank you so much for your kind reply...Very informative for all PGBeans....
ReplyDelete