நமது அகில இந்தியச் சங்கப் பிரதிநிதிகள், தோழர்.திலிப்குமார் முகர்ஜி தலைமையில் தில்லியில் திரு. பிரணாப் முகர்ஜி (Honble Finance Minister, G.O.I ), திரு.மிட்டல் (Secretary, Financial Services, G.O.I ), திரு.உமேஷ்குமார் ( Joint Secretary, Financial Services, G.O.I ) மற்றும் திரு,சந்தீப்குமார் (Director, Financial Services, G.O.I) ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
கிராம வங்கி ஊழியர்களுக்கும், ஆபிஸர்களுக்கும் பென்ஷனை நீட்டிப்பது சம்பந்தமாக Department of Financial Services திவீரமாக ஆலோசித்தும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதாகத் தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.
Joint Secretary, G.O.I வுடன் பேசியதில், பென்ஷன் இப்போது amalgamation of RRBs-உடன் இணைந்த விஷயமாக மாறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 20 பலவீனமான கிராம வங்கிகள், பென்ஷனுக்கான நிதியை ஒதுக்கும் சுய பலத்தில் இல்லாமலிருப்பதாகவும், அவைகள் வலுவான கிராம வங்கிகளோடு இணைக்கப்படுவதால், பென்ஷனுக்கான நிதியை ஒதுக்கும் நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். உடனடியாக பலவீனமான அந்த கிராம வங்கிகளின் amalgamationஐ கவனிக்க வேண்டியிருப்பதால், நிதித்துறை அதற்கான processல் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். ஸ்பான்ஸர் வங்கிகள் amlgamationக்கு no objection certificate கொடுக்கவில்லையென்றாலும், CBS போன்ற தொழிநுட்ப பிரச்சினைகள் முன்னுக்கு வந்த போதிலும் அரசு அவைகளை பொருட்படுத்தப் போவதில்லையெனவும் விலக்கியிருக்கிறார். அரசுதான் கிராம வங்கிகளின் முதலாளி எனவும், அதன் முடிவே இறுதியானதும், உறுதியானதுமாகும் என தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இதற்கு அடுத்தக் கட்ட நடவடிக்கையாக வலுவான கிராம வங்கிகளின் amalgamation நிறைவேற்றப்படும் என சொல்லப்பட்டு இருக்கிறது.
ownership சம்பந்தமாக RRB Act amendment குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. நமது அகில இந்திய சங்கத்தின் நிலைபாட்டினை பொறுமையாக கேட்டுக்கொண்டாலும், அதுகுறித்து எந்தக் கருத்தும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. கிராம வங்கிகளின் நிர்வாகக் குழுவில் (Board) workmen மற்றும் officers பிரதிநிதிகள் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அரசுத் தரப்பில் அதற்கும் பதில் இல்லை.
பல கிராம வங்கிகளில் Boardof directorகளாக இருக்கின்ற non-official directorகள், வங்கியின் அன்றாடப் பணிகளில் முறையற்றுத் தலையிடுவதையும், அதனால் ஏற்படும் சிரமங்களையும் நமது தரப்பில் எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்களுக்குப் பதிலாக, கிராமப்புற பொருளாதார நிபுணர்களை நிர்வாகக் குழுவில் இணைக்க வேண்டும் என நமது தரப்பில் எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், இருபது வருடம் சர்வீஸ் முடிந்தவர்களுக்கு automatic promotion கொடுக்க வேண்டும் என்பதும், கிராம வங்கிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் sweepersகளை நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் அவர்களுக்கு minimum wages கொடுக்க வேண்டும் என்பதும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!