பாண்டியன் கிராம வங்கியில் அப்ரைசர்களிடம் லட்சக்கணக்கில் டெபாசிட் வசூலிக்க நிர்வாகம் முடிவெடுத்து சர்க்குலர் வெளியிட்டு இருந்தது. அதற்கு கண்டனம் தெரிவித்து, ‘என்ன பாவம் செய்தார்கள் அப்ரைசர்கள்’ என அதுகுறித்து நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.
இப்போது அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. சி.ஐ.டி.யூ வில் இணைந்திருக்கும் பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அப்ரைசர்கள் சங்கமானது, தங்கள் அப்ரைசர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. டெபாசிட்டைக் கட்ட முடியாத அப்ரைசர்களை, வெளியேற்றிவிட்டு குறிப்பிட்ட டெபாசிட்டைக் கட்டக் கூடிய புது அப்ரைசர்களை நியமிக்க வேண்டும் எனனும் நிர்வாகத்தின் சர்க்குலரைத் தடை செய்யக் கோரியது. அப்ரைசர்கள் சங்கத்தின் தலைவரான சி.ஐ.டி.யூ தோழர் பிச்சை சார்பில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் உள்ள நியாயம் உணர்ந்த நீதிமன்றம், இருக்கும் அப்ரைசர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என நிர்வாகத்தின் சர்க்குலருக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
( View/ Download )
இதன் மூலம் டெபாசிட் கட்ட முடியாத அப்ரைசர்கள் யாரையும் நிர்வாகம் வெளியேற்றிவிட முடியாது என்பது உறுதியாகி இருக்கிறது எனவும் அப்ரைசர்கள் தோழர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர் தோழர்.கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!