பாண்டியன் கிராம வங்கியில். 2008 வரை நம்மோடு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற அலுவலர் திரு.மாரியப்பன் இன்று 8.4.2012 அன்று காலையில் காலமானார்.
முதுகுளத்தூர், பேரையூர், சங்கரலிங்கபுரம், நென்மேனி போன்ற கிளைகளில் பணிபுரிந்திருந்தார். அவர் கடைசியாக தலைமையலுவலகத்தில் பணிபுரிந்தார்.
சாத்தூரில் வசித்து வந்த அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். அவருக்கு வயது 64.
இன்று மாலை சாத்தூரில் நடந்த அவரது இறுதிச் சடங்கில், சாத்தூரில் இருக்கும் நமது தோழர்கள் கலந்துகொண்டனர்.
அவரது மறைவுக்கு PGBEAவும், PGBOUவும் அஞ்சலியும், அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றன.
ஓய்வு பெற்ற பாண்டியன் கிராம வங்கி அதிகாரி தோழர் மாரியப்பன் மறைவிற்கு எனது அஞ்சலி.
ReplyDeleteஅறுபதுக்குப் பின் தான் மனிதர்கள் குடும்பத்திற்குள் வாழத் தொடங்குகின்றனர். பதட்டமற்ற அன்றாடத்தில் அவர்கள் கால்கள் நனையும் போது தான் வாழ்க்கை இணையாக வந்த தனது வாழ்வின் அடுத்த பாதியின் இன்ப துன்பங்கள் குறித்த சலனமே அவர்கள் கண்களுக்குள் புலப்படத் தொடங்குகிறது.
இன்று மதியம் தனது மனைவி சற்று மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் இருக்க, என்னைத் தனது உடைந்த குரல்களால் அழைத்த எங்கள் வங்கி தோழர் ஒருவர், நான் அங்கு சென்று பார்க்கவும் தனது மனைவியின் மேம்பட்ட குண நலன்கள் குறித்து கண்கள் பனிக்கப் பேசிக் கொண்டே இருந்தார். பதினெட்டு வயதில் குடும்பத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டு தான் வாழ்க்கைப் பட்ட வீட்டில் தன்னைக் கால் ஊன்றி வளரும் புதிய தாவரமாக தன்னை மாற்றிக் கொள்ளும் முந்தைய தலைமுறைப் பெண்களில் ஒருவர் தான் செயற்கை சுவாசத்தில் உள்ளே இருந்து கொண்டிருக்கிறார். மட்டற்ற நேசத்தோடு தனது கணவர் தன்னைப் பற்றிக் காதலோடு உருகிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கவாவது அவர் நோயிலிருந்து மீண்டு வெளியே வர வேண்டும் என்று அந்தக் கணம் எனக்குத் தோன்றியது. நம்பிக்கையான தகவல்களுக்காகக் காத்திருக்கிறேன்.
தோழர் மாரியப்பன் அப்படியான வயதில் தான் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போயிருக்கிறார். துயரமிக்க நேரங்களில் வெளிப்படும் துக்கமும், பெருகும் அழுகையும் இழந்தவற்றுக்காக என்பதை விடவும், பெறவே இயலாமல் போனவற்றுக்காகவும் தான் என்று தோன்றுகிறது.
எஸ் வி வேணுகோபாலன்
அனுதாபங்கள்.இறைவன் அவரது மறைவை தாங்கும் சக்தியை அவர்தம் குடும்பத்தார்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரர்திக்கிறேன்.
ReplyDeleteதிரு மாரியப்பன் அவர்களின் குடும்பத்தார்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅனுதாபங்கள்.இறைவன் அவரது மறைவை தாங்கும் சக்தியை அவர்தம் குடும்பத்தார்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரர்திக்கிறேன்.
ReplyDelete