கிராம வங்கிகளில் office Assistants மற்றும் Officers பணிநியமனத்திற்காக வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் IBPS எழுத்துத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Onlineல் apply செய்யக் கடைசி நாள் 25.6.2012. இதுகுறித்து ஏற்கனவே நமது வெப்சைட்டில் செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம்.
இந்த எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளியிட்டு, தேர்வு எழுதிய எல்லோருக்கும் Mark sheetஐ IBPS செப்டம்பர் இறுதிக்குள் கொடுத்துவிடும். அதற்குப் பிறகு பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி நிர்வாகங்கள் தங்களுக்குத் தேவையான பணியிடங்களைக் குறிப்பிட்டு விளம்பரங்கள் செய்வார்கள். அதில் IBPS நடத்திய எழுத்துத் தேர்வில் எத்தனை சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையில் விண்னப்பங்கள் பெற்று, அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, புதிய பணிநியமனங்கள் கிராம வங்கிகளில் நடைபெற இருக்கின்றன.
போட்டோ, கையெழுத்து முதற்கொண்டு அனைத்தையும் scan செய்து online application லேயே அனுப்ப வேண்டும். மேலும் credit/debit cardகள் மூலமும் fees செலுத்தலாம். ஓரளவுக்கு இதைப் பற்றித் தெரிந்த, நகரம் சார்ந்த மக்களுக்கு இந்த முறைகள் சாத்தியமாகிவிடும். ஆனால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும், அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கும் இந்த முறைகள் மிகப் புதியவையாகவும், அதற்கான வாய்ப்பும் வசதியும் இல்லாமலும் இருக்கும்.
அவர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தவும், onlineல் apply செய்ய உதவவும், அவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கவும் ‘அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்’ கோவையில் 2009ல் துவங்கப்பட்டு, இன்று தமிழகமெங்கும் திருநெல்வேலி, மதுரை உட்பட 11 மையங்களில் செயல்பட்டு வருகிறது. இன்று அதன் மூலம் பல தலித் இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பெரும்பாலும் இந்த மையங்களை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர்கள் சங்கத்தின் தோழர்களே நடத்தி வருகின்றனர். மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் இந்த காரியத்தில் ஈடுபட்டு வருகிறது.
கிராம வங்கிகளில் நடைபெற இருக்கும் பணிநியமனங்களையொட்டி, PGBEAவும், PGBOUவும் இந்த இயக்கத்தில் இணைந்து விருதுநகரை மையமாக வைத்து ஒரு பயிற்சிமுகாம் நடத்தலாம் என யோசித்தோம். அதன் அடிப்படையில் நேற்று 16.6.2012 அன்று மாலை 5 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் கல்வி மையத்தின் சார்பில் தோழர் கணேஷ் கோவையில் இருந்து வந்து கலந்துகொண்டார். மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் பணிபுரியும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் கலந்துகொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தோழர்கள் முருகேசன், ஞானகுரு கலந்து கொண்டனர். நம் தரப்பில் தோழர்கள் போஸ்பாண்டியன், மாதவராஜ், பெருமாள்சாமி, பார்த்தசாரதி(sattur), பிரான்சிஸ்(HO), பாலாஜி (HO) கலந்துகொண்டோம்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் மூலம் இந்த பயிற்சிமுகாம் குறித்து தெரியப்படுத்துவது, கல்வித்தகுதியுள்ள தலித் இளைஞர்களை online apply செய்ய உதவுவது, விருதுநகரில் நமது சங்க அலுவலகத்தில் வைத்து பயிற்சிமுகாம் நடத்துவது எனவும் திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலித் இளைஞர்களோடு, நமது வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சொந்தங்களுக்கும் இந்த பயிற்சியளிக்க வேண்டும் என்னும் நமது யோசனையையும் வந்திருந்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
ஜுலை 1ம் தேதி இந்த பயிற்சிமுகாம் ஆரம்பித்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நமது சங்க அலுவலகத்தில் வைத்து ஆக்ஸ்ட் இறுதிவரை எட்டு வாரங்கள் நடைபெறும். அதற்கென syllabus உடன் பாடங்கள் முறையாக நடத்தப்படும். நம் தோழர்கள் தாங்கள் பணிபுரியும் கிளைகளில் வரும் வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவியுங்கள். இன்னும் apply செய்ய ஒரு வாரமே இருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்தவர்களை online apply செய்யச் சொல்லுங்கள். தாங்களும் அதற்கு உதவுங்கள். அதுகுறித்து விளக்கங்கள் வேண்டியிருந்தால் இந்த தொலைபேசி எண்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.
தோழர் பவளவண்ணன் - 9965690611
தோழர். ஞானகுரு - 9442312040
தோழர்.பரமசிவம் - 9486026779
தோழர். ராஜாராம் - 9443731165
நம் வங்கியில் பணிபுரியும் தோழர்களின் சொந்தங்கள் பயிற்சி பெற விரும்பினால், தோழர்கள் போஸ்பாண்டியன் மற்றும் மாதவராஜ் ஆகியோரோடு தொடர்பு கொள்ளுங்கள்.
மிக நல்ல முயற்சி. முழுமையான வெற்றி பெற வாழ்த்துக்கள். தென் சென்னையில் பெருமளிவிலும் வட சென்னை,கோவை,மதுரை ஆகிய மையங்களில் ஓரளவும் BEFI சங்கம் இந்த பயிற்சி நடத்துவதில் ஈடுபட்டு வருகிறது என்பதை பதிவு செய்யக் கடமைப்பட்டுளேன்-சி பி கிருஷ்ணன்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும், தகவல்களுக்கும் நன்றி தோழர்!
DeleteBEFI Zindabad!
good work.. Congrats i warmly welcome this decision to help poor students. Way to go PGBEA & PGBOU!!
ReplyDeleteThank you comrade!
Delete