ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. காலங்கள் எவ்வளவு வேகமாய் ஓடுகின்றன.
இந்த வங்கியில் இளைஞர்களாய் பணிக்குச் சேர்ந்த காலங்கள் அசைபோட வைக்கின்றன. அப்போது ஒவ்வொருவருக்கும் திருமண அழைப்பிதழ்களாய் வந்துகொண்டு இருந்தன. அது ஒரு காலம்.
பிறகு நமக்கு வீட்டு மனைக்கடன் வங்கியில் வழங்கப்பட்டது. அதையொட்டி, புதுமனைப் புகுவிழா அழைப்பிதழ்களாய் வந்து கொண்டு இருந்தன. அது ஒரு காலம்.
இப்போது நம் குழந்தைகளின் திருமண அழைப்பிதழ்களாய் வந்து கொண்டு இருக்கின்றன. இது ஒரு காலம்.
நம் வாழ்வின் பரிணாமங்களாய் இந்த அழைப்பிதழ்கள் காணக்கிடைக்கின்றன.
நமது வெப்சைட்டில், இந்த சந்தோஷ தருணங்களை பதிவு செய்யும் விதமாக, வெப்சைட்டில் இடது பக்கத்தில், இந்த நல்ல செய்திகளை தொகுக்கிறோம்.
நமக்கு அனுப்பப்படும், திருமண அழைப்பிதழ்களை இப்படி நம் தோழர்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்வோம். அந்த அழைப்பிதழ்களின் மீது மவுசை வைத்து கிளிக்கினால், அந்த திருமணம் குறித்த விரிவான செய்திகளை Flickr பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துவோம்.
முழுமையாக பார்க்க இங்கே செல்லவும்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!