22.6.12

Why PGBOU did not participate in the discussions with Transfer committee on 19.06.2012




19.6.2012 அன்று மாலை 5.15 மணிக்கு PGBOUவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் மாலை 4 மணியிலிருந்து இரண்டு SC/ST நலச்சங்கங்களையும், இரண்டு அலுவலர் தொழிற்சங்கங்களையும் தனித்தனியாக கலந்து பேசி, டிரான்ஸ்பர்களை முடிவு செய்யப்போவதாக சொல்லப்பட்டது.

19.6.2012 அன்று மாலை நம் சங்கத்தலைவர்கள் சங்கப்பணிகள் நிமித்தம் வெளியூர் செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருந்த போதிலும், புறப்படும் நேரத்தை தாமதமாக்கிக் கொண்டு, அன்று மிகச்சரியாக 5 மணிக்கு தலைமையலுவலகம் சென்றுவிட்டோம். 4 மணிக்கு ஆரம்பிப்பதாக சொல்லப்பட்ட  பேச்சுவார்த்தை அப்போது ஆரம்பித்திருக்கவில்லை.  மற்ற சங்கங்கள் காத்திருந்தன. அனைத்து RMகள், SMகள் மீட்டிங் உள்ளே நடந்துகொண்டு இருந்தது.

ஒருவழியாக 6 மணிக்கு Transfer committee கூடி, ஒவ்வொரு சங்கங்களாக அழைத்துப் பேசியது. நாம் அழைக்கப்படவில்லை. மணி 7 ஆகியது. நாம் அழைக்கப்படவில்லை. மணி 8 ஆகியது. நாம் அழைக்கப்படவில்லை. நமது பொறுமையும் கடந்துவிட்டது. வெளியூருக்குப் புறப்பட வேண்டிய நேரமும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. மற்ற சங்கங்கள் அனைத்திடமும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நம்மை அழைத்தபோது மணி இரவு 8.15! உள்ளே இரண்டு பொதுமேலாளர்களும், PAD மற்றும் AIVD SMகளும் இருந்தனர்.

உள்ளே சென்று, நமது கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் வைத்தோம்.  “4 மணிக்கு ஆரம்பிப்பதாகச் சொல்லி, 6 மணிக்குத் துவங்கியதே சரியில்லாத நடைமுறை, தொழிற்சங்கங்களை அவமதிக்கும் செயல்” என்றோம்.  “இவ்வளவு நேரமான பிறகு எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது?” என கேள்வி எழுப்பினோம்.

“இல்லை நீங்கள் பெரிய சங்கம். நிறைய டிரான்ஸ்பர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதனால்தான் கடைசியாக அழைத்தோம்” என்றார்கள் பொதுமேலாளர்கள்.

“RM கள் மீட்டிங் இன்றைக்கு நடத்துவதாக இருந்தால், எங்களை இன்னொரு நாளைக்கு அழைத்திருக்க வேண்டும்.” என தெளிவுபடுத்தினோம்.

“பரவாயில்லை. வாருங்கள் பேசுவோம்” என்று பொதுமேலாளர்கள் பேச்சு வார்த்தையை அவசரம் அவசரமாக நடத்தி முடிப்பதிலேயே குறியாக இருந்தனர். “அதெப்படி சார் வேகவேகமாக பேசி முடிக்க முடியும்? ஒவ்வொரு டிரான்ஸ்பராக பேசுவதற்கு நிச்சயம் இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகும். நாங்கள் வெளியூர் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.”  என்றோம்.

“உட்காருங்கள். ஒரு அரை மணிநேரத்திற்குள் பேசிவிடலாம்” என்றார்கள். இந்த ‘ஒரு அரை மணி நேரம்’ என்பதுதான் நம்மை கடுப்பாக்கியது. எதோ ஒப்புக்கு இந்த பேச்சுவார்த்தையை நடத்தும் நிர்வாகத்தின் மனோபாவம் அதில் அப்பட்டமாக வெளிப்பட்டது. “அதெப்படி சார் அரை மணி நேரத்துக்குள் பேச முடியும்?. இது சரியில்லை. இதுதான் பேச்சுவார்த்தைக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா? முதலில் நீங்கள் punctualityஐ maintain செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். Time management என்பது எல்லோருக்கும் பொதுவானது.” என்று வேகமாகத் திருப்பிச் சொன்னோம்.

“இன்னொருநாள் நேரம் ஒதுக்குங்கள். நிதானமாகப் பேசலாம். இன்றைக்கு உங்களோடு இரவெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. நீங்களும் காலையிலிருந்து RMகள் மீட்டிங் நடத்தி களைப்பாய் இருப்பீர்கள். இதற்குப் பிறகு பேசுவது என்பது பயனுள்ளதாக அமையாது.” எனச் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

மொத்தத்தில், சரியான திட்டமிடல் இல்லாததையே நிர்வாகத்தின் அணுகுமுறை காட்டுகிறது. தொழிற்சங்கங்களை எதோ கிள்ளுக்கீரையாக பார்க்கும் மனோபாவம் வெளிப்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தைகளை அலட்சியமாய் எண்ணுகிறது. இதனை நாம் முதலில் இங்கு சரி செய்ய வேண்டி இருக்கிறது.

நடந்தவைகளை சேர்மனின் பார்வைக்குக் கொண்டு செல்வோம். மிக விரைவில், Transfer committeeயுடன் உட்கார்ந்து நிதானமாகப் பேசி நம் தோழர்களுக்கு சாதகமான டிரான்ஸ்பர்களை பெற்றுத் தருவோம்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!