10.5.13

Demonstrations against the bill to private RRBs

22.4.2013 அன்று மத்திய நிதியமைச்சர், கிராம வங்கிகளின் 49 சதவீத பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் மோசமான மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

கிராமப்புற மக்களுக்காக சேவை செய்வது என்னும் உன்னதமான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கிராம வங்கிகளை தனியாருக்கு கொடுப்பது என்பது, மக்கள் விரோத, தேச விரோதச் செயலாகவே AIRRBEA கருதுகிறது. முற்றிலும் அரசுக்குச் சொந்தமானது என்னும் பெருமையை குழிதோண்டி புதைப்பது என்பதுதான் இதன் அர்த்தமாகும்.

AIRRBEA உடனடியாக, தேசம் முழுவதும் 29.4.2013 அன்று, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறைகூவல் விடுத்தது.

தமிழகத்தில் , BEFI-TN, 29.4.2013 அன்று திருச்சியில், வங்கி ஊழியர்கள், எல்.ஐ.சி ஊழியர்களைத் திரட்டி, ஐ.ஓ.பி மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பட்டம் நடத்தியது. அதன் சில காட்சிகள்.....











30.4.2013 அன்று, PGBEAவும், PGBOUவும், PGB தலைமையலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த காட்சிகள்....







No comments:

Post a Comment

Comrades! Please share your views here!