17.2.14

வெளிப்படைத்தன்மையற்ற PGB நிர்வாகம்


பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை குறித்து ஏற்கனவே வெப்சைட்டில் ஒன்றிரண்டு விஷயங்களை எழுதி இருக்கிறோம். மேலும் சில விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனம் அதிலும் குறிப்பாக பொதுத்துறை நிறுவனம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் Right To Information Act கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அதனைப்பற்றிய சில தகவல்களை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் நமது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்பதை, அதன் வெப்சைட்டில் வெளியிட்டு இருக்கும் தகவல்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரின்  duties and responsibilities குறித்து பொதுமக்களுக்குத்  தெரிவித்தாக வேண்டும். ஆனால் அவைகளை இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அலுவலர்களுக்கே தெரிவிப்பதில்லை இந்த நிர்வாகம். Right to information Act-ஐக் கூட மதிப்பதில்லை PGB நிர்வாகம்.

எழுதப்படிக்கத் தெரியாத காலத்தில் வாய்மொழி மூலம் விஷயங்களை மனிதர்கள் பகிர்ந்துகொண்டனர் என்பதுதான் வரலாறு. ஆனால் Information and Technology உலகையே ஆட்டிப்படைக்கிற இந்தக் காலத்திலும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் வாய்மொழி உத்தரவுகளையே பிறப்பித்துக் கொண்டு இருக்கிறது.  தலைமையலுவலகத்தில் இருந்து Regional Officesகளுக்கு வாய்மொழி உத்தரவு. Regional Officesகளிலிருந்து கிளைகளுக்கு வாய்மொழி உத்தரவுகள். பல முக்கியமான பணிகள் இங்கு எழுத்துபூர்வமாக இல்லாமலே நடந்து வருகின்றன. ஏனென்றால் நாளை ஒரு தவறு நடந்துவிட்டால் மேல் இருப்பவர்கள் தாங்கள் இதற்கு பொறுப்பு இல்லை என்று தங்களை கழற்றிக் கொள்ளவும், கீழ் இருப்பவர்களே பொறுப்பு என்று குற்றம் சுமத்தவும்தான். சமீபத்தில் நடந்த அப்ரைசர்கள் மாறுதலும் இப்படித்தான். கேட்டால் போர்டு முடிவு என்கிறார்கள். போர்டு முடிவும் வாய்மொழியாகவே அமல்படுத்தப்படுவது வெட்கக் கேடு இல்லையா?

இந்த வாய்மொழி உத்தரவுகள் மூலம் இன்னொரு முக்கியக் குற்றத்தையும் நிர்வாகம் செய்கிறது. ஏற்கனவே எழுத்தில் இருக்கும் நியதிகளையும், வரையறைகளையும் மீறி பணிபுரியுமாறு கட்டாயப்படுத்துகிறது. உதாரணத்திற்கு Document Master  அடித்து TXN no  வவுச்சரில் குறிப்பிட பிறகே கடன் தொகையை வழங்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் இங்கு Master  அடிக்கும் முன்னாலேயே கொடுக்க வேண்டும் என கேஷியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.  கேட்டால்  Customer service  என்கிறார்கள். மேனேஜரே `pay cash'  அடித்து கொடுக்க உத்தரவிட்ட பிறகு, உங்களுக்கு என்ன ரிஸ்க் இருக்கிறது என்று வியாக்கியானம் வேறு. ஆனால் சமீபத்திய சில ஒழுங்கு நடவடிக்கைகளில், `மேனேஜர் சொன்னால் நீங்கள் செய்யலாமா?` என்பதுதான் கேள்வியாக எழுந்து இருக்கின்றன. ஆக, நிர்வாகத்தின் வெளிப்படையற்ற தன்மையினால் இங்கு பாதிக்கப்படுவது ஊழியர்களும், அலுவலர்களுமே.

மாறுதல்களிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.  ஏனென்றால் அதனை நிர்வாகம் தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான். ஒரு பாலிசி இருந்தால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். `நான் இந்த கிளையில் பணிபுரிகிறேன். அடுத்த முறை என்னால் இந்த கிளைகளுக்கு மாறுதலில் செல்ல முடியும்` என்பது போன்ற வெளிப்படையான முறை வேண்டும்.  `ஏணி இருக்குமா, பாம்பு கடிக்குமா` என தெரியாமல் ஊழியர்களும், அலுவலர்களும் இங்கு ஒவ்வொரு முறை மாறுதல்களின் போதும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அதனை ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு நிர்வாகம் பயமுறுத்தவும், பணிய வைக்கவும் முயல்கிறது.

பணி நியமனங்களில் சுத்தமாக வெளிப்படைத் தன்மை இல்லை. எப்போது பணி நியமனம், எப்படி பணி நியமனம் என்று எந்த நியதியும் கிடையாது. எவ்வளவு cut of mark, எத்தனை பேர் தகுதியானவர்கள், எத்தனை பேர் waiting list, அதில் இட ஓதுக்கீட்டு முறை என்ன என எதையும் வெப்சைட்டில் இந்த நிர்வாகம் அவ்வப்போது வெளியிடுவதில்லை. பணிக்குச் சேர்ந்த பிறகு resign  செய்வதால் ஏற்படும்  காலியிடங்கள் எவ்வளவு, அந்த இடங்களை waiting listலிருந்து எப்போது எடுக்கிறார்கள் என எதையும் தெரிவிப்பதில்லை. இவை ஒன்றும் சிதம்பர ரகசியங்கள் இல்லை. அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய உண்மைகள். இவைகள் மறைக்கப்பட, மறைக்கப்பட  நிர்வாகத்தின் மீது நம்பகத்தன்மை குறையவே செய்யும்.

இந்த நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகள் முழுவதும் இருட்டுதான் அப்பிக்கொண்டு இருக்கிறது. ஒருவர் மீது சாட்டப்படும் குற்றம் இன்னொருவர் மீது பாய்வதில்லை. ஒருவருக்கு கடும் தண்டனை. ஒருவருக்கு  சிறு தண்டனை. ஒருவருக்கு ஓரிரு நாட்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் முடிக்கப்படுகின்றன. இன்னொருவருக்கு நான்கைந்து ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்படுகின்றன.

இப்படி நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஒவ்வொரு துறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை நாம் பட்டியலிட்டுக்கொண்டே இருக்க முடியும். நேர்மையானவர்களே வெளிப்படையாய் இருக்க முடியும். தலைநிமிர்ந்தும் நிற்க முடியும். கேள்விகளுக்கு  நெஞ்சுறுதியோடு பதில் சொல்ல முடியும்.

நமது நிர்வாகத்திடம் கேள்விகள் கேட்டால் பிடிக்கவே பிடிக்காது.

(தொடரும்)

இவைகளையும் படிக்கவும்:

1. நிர்வாகம் என்றால் என்ன?
2. மனிதாபிமானமற்ற PGB  நிர்வாகம்

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!