IBPS தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாதங்களாகியும், பாண்டியன் கிராம வங்கியில் மட்டும் officers மற்றும் Office Assistant (Clerical) Recruitment-ஐ நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்தது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம். கேட்கும்போதெல்லாம் இன்னும் IOBயில் இருந்து permission வரவில்லை, விரைவில் வந்துவிடும் என்றார்கள். அப்புறம் Officersக்கு மட்டும் permission வந்துவிட்டது என்றார்கள். ஆனால் பக்கத்தில் இருக்கும் பல்லவன் கிராம வங்கியில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே இண்டர்வியூ ,முடித்து, பனிநியமனமும் நடந்து முடிந்துவிட்டது.
Officer recruitmentக்கு permission வந்தபிறகும் , இண்டர்வியூ நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்தது. Pandyan Grama Bank Employees Association (PGBEA) மற்றும் Pandyan Grama Bank Officers Union (PGBOU) தொடர்ந்து நிர்வாகத்திடம் பேசி வந்தன. வலியுறுத்தி வந்தன. பொறுக்க முடியாமல், நிர்வாகத்தை எதிர்த்து, அம்பலப்படுத்தி இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்தோம்.
இப்போது Officers Interview நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, candidateகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. வரும் மே மாதம் 3ம் தேதி தொடங்கி மே மாதம் 7ம் தேதி வரையிலும் மொத்தம் 5 நாட்கள் இண்டர்வியூ நடத்தப்பட இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் 50 பேர் வீதம், மொத்தம் 250 பேர் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகளைச் சொல்வோம்.
இண்டர்வியூக்கான கடிதம் வரப்பெற்ற தோழர்கள் pgbea.vnr@gmail.com என்னும் இ-மெயிலுக்கு தொடர்பு கொண்டால், RRBகள் குறித்தும், PGB குறித்தும் வேண்டிய தகவல்களையும், குறிப்புகளையும் தெரிந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கிறோம்.
இன்னும் Office Assistant (clerical) Recruitment குறித்து எந்தத் தகவலும் இல்லை. கடுமையான ஆள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர் சேவையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்களிடையே எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்வது உட்பட, பல கட்ட இயக்கங்களை யோசித்து வருகிறது PGBEA.
உங்கள் முயற்சியின் பலனுக்கு மகிழ்ச்சி |
ReplyDeleteஉங்கள் போரட்ட முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் !
மே தின வாழ்த்துக்கள்.!
Wt about office assistant recruitment?is there any possibilities for this?please reply sir....
ReplyDeleteSir,
ReplyDeleteHow much office assistant vacancies we can expect this year?