கடந்த மூன்று நான்கு நாட்களாக நாம் எழுப்பிய பிரச்சினை இன்று ஒரு சுமூகமான தீர்வுக்கு வந்திருக்கிறது,
பாண்டியன் கிராம வங்கியில் Officers Recruitmentல் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படவில்லை. இவ்விஷயத்தை நாம் அறிந்ததும், நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அதுகுறித்து தொடர்ந்து நமது வெப்சைட்டில் செய்திகள் வெளியிட்டு வந்தோம்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், பாண்டியன் கிராம வங்கியில் இட ஓதுக்கீடு முறையாக அமல்படுத்த வேண்டும் என குரல் எழுப்பியது. வங்கியின் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது.
பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம், மற்றும், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் சார்பில் வங்கியின் சேர்மனை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினோம்.
நிர்வாகமோ 3.5.2014ம் தேதி இண்டர்வியூவை நடத்த திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சமூக நீதியை மறுக்கும் பாண்டியன் கிராம வங்கி என நகரெங்கும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டன. 2ம் தேதி மாலையில் பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது.
PGBEAவும், PGBOUவும் நமது வங்கியில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களுக்கும், இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தன. PGBWU, PGBOA, PGB SEWA சங்கங்கள் தங்கள் அதரவைத் தெரிவித்தன.
நிலைமையின் தீவீரம் உணர்ந்த நிர்வாகம், இன்று மதியம் நம்மோடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாநிலச் செயலாளர் கணேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஞானகுரு, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் துணைத் தலைவர் பி.எஸ். போஸ் பாண்டியன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாலர் ஜா. மாதவராஜ், எஸ்.சி/எஸ்.டி. நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.ராஜேந்திர சோழன், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பாலாஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத் தரப்பில் முதன்மை மேலாளர்கள் ஞானப்பிரகாசம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலில் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மார்க்குகளை விடுத்து, General Categoryக்கு விதிக்கப்பட்ட 108 கட்-ஆப் மார்க்குகளுக்கு மேல் விண்ணப்பத்திருக்கும் 704 பேரையும் இண்டர்வியூக்கு அழைக்க நிர்வாகம் ஒரு தீர்வை முன்மொழிந்தது. ஆனால் நாம் ஒப்புக்கொள்ளவில்லை. அனைவருக்கும் ஒரே கட் ஆப் மார்க் என்பது தீர்வல்ல, General Categoryக்கும் SC/ST Categoryக்கும் ஒரே கட்-ஆப் மார்க் என்பது இட ஓதுக்கீடு கொள்கைக்கு முரணானது என்றோம். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ஆபிஸர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இண்டர்வியூ நடத்தி அதில், இட ஓதுக்கீடு கொள்கையை முறையாக அமல்படுத்துகிறோம் என நிர்வாகம் உறுதி மொழி தந்தது. இப்போது அறிவித்திருக்கும் 254 பேருக்கு திட்டமிட்டபடி இண்டர்வியூ நடக்கும் என்றும், மிக விரைவில் மற்ற அனைவருக்கும் இண்டர்வியூ நடத்தி, அதன் பின்னரே ரிசல்டுகள் வெளியாகும் எனவும் உறுதி மொழியளிக்கப்பட்டது.
ஒரு தவறை சரி செய்ய நாம் கோரிக்கை வைத்தோம். அதை சரி செய்யும்போது அதனையொட்டி வேறூ சில பிரச்சினைகள் எழும் என நிர்வாகம் ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் இண்டர்வியூ நடத்த முன்வந்திருக்கும் எனத் தோன்றுகிறது.
எது எப்படியானாலும், இட ஒதுக்கீடு கொள்கை பாண்டியன் கிராம வங்கியில் தவறாக அமல்படுத்த இருந்ததை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். முதலில் இது மிகப் பெரிய வெற்றி. இனி இந்த வங்கியில் இட ஒதுக்கீடு மிகச் சரியாக அமல்படுத்தப்படும் என்பதற்கு வழியமைத்து இருக்கிறோம். இதுதான் மகத்தான வெற்றி.
நம்மோடு இணைந்து ஆதரவு கொடுத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு மிகப் பெரும் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வோம்.
ஆதரவுக்குரல் எழுப்பிய அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும் நமது நன்றி. பேச்சுவார்த்தையில் நம்மோடு இணைந்து நின்ற PGBWUவுக்கும், PGB SEWAவுக்கும் நம் நன்றி.
இண்டர்வியூவில் கலந்து கொள்ளும் புதிய இரத்தங்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும், வரவேற்பும்.
Red Salute !
ReplyDeleteThank you so much all...
ReplyDeletewhen will the interview for scale II officer to be conducted ? Thanks in advance, if any one replies for my clarification.
ReplyDelete