1.5.14

Recruitment 2014 : Anti Reservation Policy in Pandyan Grama Bank!


பாண்டியன் கிராம வங்கியில் Officers Recruitment-ல் இட ஓதுக்கீடு அமல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்துள்ளதை நேற்று தெரிவித்திருந்தோம். 

General Category க்கு  cut-off marks - 108
OBC Category க்கு  cut-off marks  - 123
SC/ST Category க்கு  cut-off marks  - 112

இதைப் பார்த்த உடனேயே மிகப்பெரும் தவறு நடந்திருப்பதை அறிய முடிகிறது.

நேற்று இருபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் நம்முடன் தொடர்பு கொண்டனர்.

“ நான் SC.  cut off marks 111 வாங்கியிருக்கிறேன். சார், இதுதான் எனக்கு கடைசி  attempt"  என்றார்.

“நான் 114 மார்க்குகள். OBC  சார். எனக்கு interviewக்கு லெட்டர் வரவில்லை. இதென்ன அநியாயம்?”

“ நான் OBC. 119 மார்க்குகள் எடுத்திருக்கிறேன். ஆனால் எனக்கு இண்டர்வியூ கிடையாது. 108 மார்க்குகள் எடுத்த  General categoryயை சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவுக்கு செல்லப் போகிறார். எதுக்கு சார் இந்த Reservation Ploicy?  எல்லோரும் General category என்றால் கூட நான் வந்திருப்பேனே?”

“108 மார்க்குகள் எடுத்திருக்கிறேன். ஆனா SC சார். எதாவது செய்யுங்கள் சார், ப்ளீஸ்”

இந்தக் குரல்கள் ஒவ்வொன்றும் வேதனையும், வலியும் தருவதாக இருக்கின்றன. தங்கள் எதிர்காலத்திற்கான ஆதரவுக் கரங்களை தேடி நிற்கின்றன. இட ஒதுக்கீடு என்னும் மகத்தான சமூக நீதி அர்த்தமிழந்து போனதால் அவர்களது வாழ்க்கையும், நம்பிக்கைகளும் சிதைந்து போயிருக்கின்றன.

இதே IBPS  மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, இதே தமிழ்நாட்டில் இருக்கும் பல்லவன் கிராம வங்கியில் Officers Recruitment நடந்தபோது, Reservation Policy  சரியாக அமல்செய்யப்பட்டு இருக்கிறது.  அங்கே-

General Category க்கு  cut-off marks - 126
OBC Category க்கு  cut-off marks  - 121
SC/ST Category க்கு  cut-off marks  - 118

இப்படி ஒரு வரிசையில்தான் இருந்திருக்க வேண்டும். பல்லவன் கிராம வங்கியில், அதிகமான மார்க்குகள் எடுத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்கள். மேலும் பல்லவன் கிராம வங்கியில்  vacancies குறைவு. பாண்டியன் கிராம் வங்கியில் அதிகம். எனவே இந்த cut-off marks ஒவ்வொரு categoryயிலும் இதே வரிசையில் குறைந்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். ஆனால் பாண்டியன் கிராம வங்கியில் எல்லாம் தலைக்ழாக இருக்கிறது.

இதற்கு அடிப்படையான காரணம், General Categoryயில், நன்றாக மார்க்குகள் எடுத்திருக்கும் SC/ST மற்றும் OBC candidateகளை சேர்க்காமல் விட்டதே. General Category என்றால் Non SC/ST, Non OBC என்று தவறாக வரையறுக்கப்பட்டதே.

Govt.of Indiaவின் Reservation Policy பிரகாரம் இட ஒதுக்கீடு கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.

SC - 15 %
ST - 7.5%
OBC 27.5 %
General - 50%

பாண்டியன் கிராம வங்கியில் மொத்தம் 100 Officers postகளுக்கு இந்த recruitment  நடத்தப்படுகிறது. இங்கு தவறாக நிர்ணயம் செய்திருக்கும் cut-off மார்க்குகளால்-  என்ன நடக்கப் போகிறது என்பதை யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கும்.

தமிழ்நாட்டில் SC/ST  மற்றும் OBC categoryயைச் சேர்ந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 80 - 85 சதவீதத்திற்கும் மேலாக இருப்பார்கள். Non SC/STமற்றும் Non OBC மக்கள் 15 சதவீதத்திற்குள்தான் இருப்பார்கள். பாண்டியன் கிராம வங்கியில் அமல் செய்யப்படும் இடஒதுக்கீடு நடைமுறையின் படி, 80-85 சதவீதத்திற்கு 50 இடங்களும், 15 சதவீதத்திற்கு 50 இடங்களும் பிரித்துக் கொடுக்கப்பட இருக்கிறது. இட ஒதுக்கீடு கொள்கையின் பலன் யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்குக் கிடைக்காதது மட்டுமல்ல, அவர்களையே போட்டு நசுக்குவதாக இருக்கிறது. இது எவ்வளவு பெரிய கொடுமை. இதை எப்படி அனுமதிக்க முடியும்?

PGBEAவும், PGBOUவும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்துடன் உடனடியாக பேச விரும்பினோம். வங்கியின் சேர்மனை தொடர்பு கொண்ட போது, அவர் வெளியூரில் இருப்பதாகவும், தலைமையலுவலகம் வந்தவுடன் அழைப்பதாகவும் சொன்னார்.

நேற்று ( 30.4.2014) மாலை வங்கியின் சேர்மன், தலைமையலுவலகம் வந்தவுடன் இரு சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் மாதவராஜ் மற்றும் சங்கரலிங்கம் சேர்மனை சந்திக்கச் சென்றோம்.

ஸ்பான்ஸர் வங்கியான  IOB தந்த விதிமுறைகளின்படி இந்த cut-off marks நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகச் சொன்னார்கள். written Test  மற்றும் Interview இரண்டின்  combined listல் தான் reservation Policy  அமல் செய்யப்படும், அப்போது General Categoryயில், SC/ST மற்றும் OBC யும் வருவார்கள்.  written test  முடிந்த நிலையில் அந்தந்த categoryக்கு seperate list தான்  என்று சொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

நாம் இதனைக் கடுமையாக ஆட்சேபித்தோம். இது தவறான நடைமுறை. எடுத்த எடுப்பிலேயே அதிக மார்க்குகள் எடுத்தவர்களை ஒரம் கட்டிவிட்டு, பிறகு combined list  எனச் சொல்வது பெரும் அநீதி என்றோம். 111  மார்க்குகள் எடுத்த  SC/ST candidateம், 122 மார்க்குகள் எடுத்த OBC candidateம்  இண்டர்வியூக்கு வரமுடியாது என்பதும், 108 மார்க்குகள் எடுத்த General category candidate இண்டர்வியூக்கு வரமுடியும் என்பது என்ன நியாயம் என்றோம்.

நிர்வாகத்திடம் நம் கேள்விகளுக்கு பதில் இல்லை. உடனடியாக ஐஓபியை தொடர்பு கொண்டு இருப்பதாகவும், அவர்கள் சொன்னபடி கணக்கிட்டால் இப்படி cut off marks வருகிறது என்பதை தெரிவித்திருப்பதாகவும் சேர்மன் சொன்னார். நிச்சயம்  IOBயில் இதனை பரிசீலனை செய்து, நல்ல முடிவை அறிவிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

நல்ல முடிவு வந்தால் நிச்சயம் வரவேற்கிறோம், ஆனால் அதற்கு இங்கே கால அவகாசம் இல்லை. இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன. எனவே இண்டர்வியூவை ஒரு வாரத்திற்கு postpone செய்துவிட்டு, இந்தக் குளறுபடிகளை சரிசெய்த பிறகு இண்டர்வியூ நடத்துங்கள் என நம் தரப்பில் முன்மொழிந்தோம்.

நிர்வாகம் அதனையும் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறது.

இட ஒதுக்கீடுக் கொள்கையில் குளறுபடி என்பது மிகவும் சீரியசான விஷயம். இந்த தேசத்தின் கவனத்தையும், முற்போக்கு சக்திகளின் கடுமையான எதிர்ப்பையும் பெறுகிற ஒரு பிரச்சினை. நிச்சயமாக PGBEA , PGBOU, BEFI, AIRRBEA போன்ற சமூகப் பார்வையுள்ள சங்கங்கள் ஒரு சிறு துளி சமரசமும் செய்துகொள்ளாமல், இறுதி வரை போராடும். இதனை உணர்ந்து நிர்வாகம் இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக சரி செய்யும் என நம்புவோம்.

இன்னும் ஒருநாள் இருக்கிறது.
பார்ப்போம்.

இல்லையெனில் மிகப் பெரும் ஆதரவு சக்திகள் நமக்கு இருக்கின்றன. திரட்டுவோம்.
வீதி இருக்கிறது.  போராடுவோம்.
எல்லாவற்றையும் சரி செய்வோம்.


2 comments:

  1. We are expecting fair decision from Management side.

    ReplyDelete
  2. sir, i got 121 marks in obc, but i did not receive the call letter.please do something, this is our life.

    ReplyDelete

Comrades! Please share your views here!